Sunday, 28 August 2016

தேவை கொஞ்சம் தமிழுணர்வு - ஒருங்கிணைப்பு need co-operation and a movement

முகநூல் பகிர்வு -திரு கார்த்திக் கார்த்திக்கின் பதிவு 


தாமிரபரணி நதிக்கரையில் உள்ள சிறு கிராமம் ஆதிச்ச நல்லூர்.இடுகாடுகள் நிறைந்த இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.


1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.


பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப்
பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.


இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற
அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை
உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள்
தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள்
வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. 

சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப்
பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர்
தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை
செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்சநல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச
நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது.

அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் அபாரிஜின்ஸ்பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே
குறிப்பிடத்தக்கது. அதற்கு வளைதடி, வளறி என்று பெயர்.இன்று வழக்கொழிந்த ஆயுதம் இது.பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.


ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை
அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய
மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்.2

"எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின்  வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.!

#மறைக்கப்படும் உண்மைகள்!

5 comments:

  1. தமிழனின் தொன்மையை எத்தனை காலம் மறைப்பார்கள்! பார்ப்போம்!

    ReplyDelete
  2. விவரமானவன்தான் அந்த கால தமிழன் ,காலில் விழுந்தால் எழுந்து நிற்க முடியாதவனாக இருக்கிறானே இந்த காலத் தமிழன் ?

    ReplyDelete
  3. ம்ம்ம்... இழந்தவை பல...

    ReplyDelete
  4. அருமையான பதிவு/பகிர்வு பல வியப்பான தகவல்கள் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. புதையுண்டு போனது தமிழர்களின் வரலாறு மட்டும்தானா ? வாழ்க்கையும்தானே! ஆதி நாகரீகம் தமிழர்களிடமிருந்து தோன்றியது என்ற உண்மையைக் கூட மறைக்கப் பார்க்கும் மனிதர்களின் குரூர புத்தியை என்னவென்று சொல்லி நாம் ஆற்றிக் கொள்வது? பிளவு பட்டுக் கிடந்த இந்தியாவை ஒன்று சேர்த்திருந்தாலும் மனித மனங்கள் இங்கு பிளவு பட்டுக் கிடப்பது கொடுமை. தமிழன் பேரும் புகழும் அடைந்து விடக் கூடாது என நினைக்கும் மடமையையும் பொறாமையையும் என்று நாம் கொளுத்தப் போகிறோம்?

    ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...

Labels

12 Years a Slave (2013) 2001: எ ஸ்பேஸ் ஆடிசி A Walk Among the Tombstones Amr Waked Avengers Age of Ultron avms kaarthik bairava blogging tips buds to blossoms c.c.e honour killings innovations in Marketing into the storm Iyothee Thass jci jci pudukkottai central kalvi kannaki kovil keezhadi khan's academy kochadaiyaan review Lucy(2014) spoiler madurai Min-sik Choi Morgan Freeman oblivion Rafeeq Friend robin williams rouge one 2016 sasikala for cm Scarlett Johansson shajakaan spoiler ssa T.V.18 yaathum oore episode 12 Tamil Short Story tesla motors thamizh thirai vimarsanm udayakkumar viswaroopam movie want to write ? www.ted.com X Standard Tamil Memory Songs Tamil Nadu X-Men: Days of Future Past அ பெ கா பண்பாட்டு இயக்கம் அ.பெ.கா அசத்தல் அரசுப் பள்ளி அச்சம் என்பது மடமையடா அப்பா அமெரிக்கா அம்மா அயோத்தி தாசர் அரசு ஊழியர்களின் குரல் அரசுப் பள்ளிகள் அரிமளம் பள்ளி அரைவல் அலைகள் அலையும் குரல்கள் அவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் அறிவிப்புகள் அனுபவம் அன்னவாசல் கே. ரெங்கசாமி ஆஃபரா ஆங்கில கேட்டல் பயிற்சி ஆங்கிலப் படம் ஆங்கிலப் பயிற்சி ஆங்கிலம் ஆசிரியர் ஆசிரியர் தினம் ஆசை தொடர் பதிவு ஆண்டனி ஆதிச்சநல்லூர் இசை இடைநிறுத்தம் இடைநிற்றல் இந்திய தேசிய ராணுவம் இந்தியா வரங்களும் சாபங்களும் இமான் இளையராஜா இறுதிச் சுற்று இனப்படுகொலை இன் டு தி ஸ்டார்ம் இன்னுமொரு சிறுகதை. புன்னகை இஸ்ரேல் ஈர்ப்பலைகள் ஈழம் ஈழம் சமுகம் உயிர்மை உலகின் பொருளாதாரக் கொள்கை உலோக உருக்கு ஆலை எக்ஸ்.மென் அபோகிளிப்ஸ் எட்ஜ் ஆப் டுமாரா எல்காம் எஸ்.எம்.எஸ். கொள்ளை ஏற்பாடுகள் ஐஸ் ஸ்டுபா ஒரு கோப்பை மனிதம் ஒரு முகநூல் பகிர்வு ஒலிம்பிக் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் ஓவியர்கள் கடிதம் கட்செவி பகிர்வு ஒன்று கட்டிடப் பொறியியல் கட்டுரைப் போட்டி கண்ணகி கோவில் கதிர்வேல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கத்தி கயல் கருத்தாளிகள் கலாச்சராம் கலிலியோ அறிவியல் மையம். கல்வி கல்வித்துறை விழா கல்வியாண்டு கவிஞர் நீலா கவிதை கவிதை அறிமுகம் கவிதை பகிர்வு கவிதைகள் கவிதைத் தொகுப்பு கவுரவக் கொலைகள் கற்க கசடற கற்பித்தல் யுக்திகள் கனவில் வந்த காந்தி கனிமொழி காக்கா முட்டை காணொளிகள் சில காதர் காந்தி திரைப்படம் காப்டன் அப்பாஸ் அலி காப்புரிமை கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி கார்த்திக் கார்த்திக் கார்த்திக் காவியத் தலைவன் கிரமத்து குழந்தைகள் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கிஷோர் டேவிட் ராஜ ராஜன் கீழடி குருநாதசுந்தரம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் தினம் குறும்படம் கேவல் நதி கொசுவத்தி கொசுவர்த்தி கொஞ்சம் புதிய அறிவியல் கொஞ்சம் வெப் கொடி காத்த குமரன் கொம்பன் திரை விமர்சனம் கோச்சடையான் கோடை நகர்ந்த கதை கோபிநாத் கோவை ஆவி க்விஸ் சக்கரக்காலன் சக்தி சவுந்தர் ராஜன் சந்தானம் சந்திப்பு சந்திரமோகன் வெற்றிவேல் சந்தைப்படுத்துதல் சமுகம் சமுத்திரக்கனி சமூகம் சர்தார் வல்லபாய் பட்டேல் சித்தன்னவாசல் ஓவியங்கள் சிவகார்த்திகேயன் சிறுகதை சினிமா சீனு சுகு சுயபுராணம் சுரபி சுரேந்தர் சூப்பர்மென் வெர்சஸ் பாட்மேன் செந்தூரன் பாலிடெக்னிக் செந்தூரன் பாலியின் தொடர் சாதனை செல்பி செவன்த் சென்ஸ் செவென்த் சென்ஸ் சொன்னாங்க சோ ஸ்வீட் வலைப்பூ டாக்டர் ஸ்ட்ரேஞ் டான் ஆப் ஜஸ்டிஸ் டி.எம்.என்.டி Teenage Mutant Ninja Turtles (2014) டினா அரீனா டெல்லி சம்பவம் ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டின்ஷன் தங்கமகன் தஞ்சை தபால்காரர் தமிழ் தமிழ் ஹிந்து தயான் சந்த் தர்மதுரை தலைமைப் பண்பு தலைவாரி பூச்சூடி தாயம்மாள் தாய்மொழி தாரை தப்பட்டை தி இத்தாலியன் ஜாப் தி.ஆலை பள்ளி தியாக வரலாறு திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள் திரை இசை திரை வி மர்சனம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் தீபிகா படுகோன் தீரன் சின்னமலை துவரங்குறிச்சி தேறி தொடர்பதிவு தொலைகாட்சி 18 தொழில் நுட்பம் தொழில் முனைவு தோழர் ரபீக் பதிவு நகை நடாஷா ரைட் நடிகர் சங்கத் தேர்தல் நத்தார் தின வாழ்த்துக்கள் நந்தன் ஸ்ரீதரன் நமக்கு நாமே திட்டம் நம்பிக்கை மனிதர்கள். நலம் நன்றிகள் நாடகக் கலைஞர்கள் நாயகர்கள் நாளைய மனிதர்களின் நேற்று நான் ஒரு குழந்தை நிகழ்வு நிகழ்வுகள் நிகில் நிறுவனம் நிகில் பயிற்சி நிலைப்பாடுகள் நிழல் பதியம் நீட் பார் ஸ்பீட் நீயா நானா நுட்பம் நூர் டீச்சர் நூல் அறிமுகம் நூல் விமர்சனம் நேர நிர்வாக தளம் நேர நிர்வாகம் நேர மேலாண்மை பக்தி படிக்க வேண்டாத பதிவுகள் பட்லர் பணிநிறைவு பதிவர் சந்திப்பு 2014 பதிவர் சந்திப்பு 2015 பதிவர் சந்திப்பு 2015 ஆல்பம் பதிவர் திருவிழா 2015 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் பயிற்சிகள் பலூஸ்சிஸ்தான் பள்ளி பாகுபலி பாபநாசம் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 Fast and Furious 7 பிட் டோரறேன்ட் பிரபு சாலோமோன் பிராங்கின் படங்கள் பிரார்த்தனை பிரித்தாளுதல் பிரியங்கா பிரேமா தக்ஷிணாமூர்த்தி பிரேம்சந்த் பு.கோ.சரவணன் புதியவன் புதுகை குளம் மீட்பு புதுகை செல்வா புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம். புதுகையின் கல்வி முகங்கள் புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் புள்ளிகள் புறம்போக்கு பெரியார் பெற்றோர் பேப்பர் ஒன்று பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி பைரவா பொது பொற்பனைக்கோட்டை போட்டிகள் ப்ளாகர் டிப்ஸ் மணிகண்டன் ஆறுமுகம் மதுரை மதுரை வரலாறு மரபு வழி நடை மராத்திய மொழிப் படங்கள் மனிதர்கள் மாட் மாக்ஸ் ஃபியூரி ரோட் Mad_Max:_Fury_Road மாணவர் போராட்டம் மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள் மாண்புமிகு மகளிர் மாதொரு பாகன் மாத்யு ப்ளோரிஸ் மாமழை நினைவுகள் மார்க் அண்டோனி மாறாப்புன்னகை மாற்றத்தின் முகங்கள் மியான்மர் மிருதன் மிஷன் இம்பாசிபிள் 5 Mission Imposible Rogue Nation முகநூல் முகநூல் நிலைத்தகவல்கள் முகநூல் பகிர்வு முத்துக்கிருஷ்ணன் முத்துநிலவன் முனைவர். அருள்முருகன் மூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும் மெட்ராஸ் மெமரி கார்ட் மொழி மொழித்திறன் மோசன் காப்ச்சர் யாதும் ஊரே யாழியின் இரண்டு தொகுப்புகள் ரபீக் ரபீக் பகிர்வு ரம்ஜான் ரவீந்திரன் ரஜனி ரஷ் ரஹ்மான் ராஜ கோபால தொண்டைமான் ராஜ சுந்தர்ராஜன் ராஜசுந்தர்ராஜன் ராஜா சுந்தர்ராஜன் ராஜேஷ் வைத்யா ரிச்சர்ட் அட்டன்பரோ ரியோ ஒலிம்பிக் ருத்ரையா ரோக் ஒன் movie review ரோஹித் வேமுலா லாரீனா லூசி லோகன் 2017 வகுப்பறை அனுபவங்கள் வகை ஒன்று வண்ணதாசன் வலைச்சரம் வலைப்பதிவர் மாநாடு வலைப்பூ நுட்பம் வள ஆசிரியர்கள் வாசிப்பு வாசிப்பு அனுபவப்பகிர்வு வாழ்த்துக்கள் வாழ்வியல் திறன்கள் பயிற்சி. வானவில் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் விடைபெறல் விதைக்கலாம் வித்டிராயல் சிம்ப்டம் விப்லாஷ் விருது விவசாயம் விஜய் டீ.வி விஜூ கனைக்ட் விஷாலின் விஸ்வரூபம் வீணை இசை வீதி கூட்டம் வீதிக் கூட்டம் வீதிக்கூட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமுரசு சுப்பிரமணிய சிவா வெயிலில் நனைந்த மழை வெர்சடைல் ப்ளாகர் விருது வெள்ளைப் புலி வெற்றி இலக்கியம் வைகறை வைகறையின் ஜெய் நல நிதி ஜல்லிக்கட்டு ஜாக்கி சேகர் ஜாதவ் ஜூராசிக் வோர்ல்ட் ஜெயப் பிரபு ஜெர்மனி ஜே.சி. பயிற்சி ஜேசி இயக்கம் ஜோக்கர் ஷபானா பாஸிஜ் ஷாமிலா தலுவத் ஷாருக்கான் ஷான் கருப்புசாமி ஷாஜகான் ஸ்டான்லி குப்ரிக் ஸ்பாய்லர் ஸ்பிலிட் ஸ்ரீதர் சுப்பிரமணியன் ஹாக்ஸா ரிட்ஜ் ஹாண்ட்ஸ் ஆப் ஸ்டீல் ஹாலிவுட் ஹெர்குலிஸ்