புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் நூல் அறிமுகம்

வெகு நேர்த்தியான அச்சில் உயரிய காகித்தில், வண்ணப் படங்களுடன் சிநேகமான நடையில் ஒரு பாறை ஓவிய ஆய்வனுபவ  நூல்! இம்மாதிரி வண்ணப் படங்களுடன், நேர்த்தியாக வெளிவரும் நூல்கள் வெகு அரிது. உள்ளடக்கம் மட்டுமல்ல இதற்காகவும் இந்நூல் பொக்கிசமாய் பாதுகாக்கப்பட வேண்டிய நூலாகிறது.   


சுவற்றில் கிறுக்குவது மனிதனின் உயிர் மூலக்கூறுகளில் இருக்கும் பழக்கம். ஆதி மனிதன் பாறைகளில் ஓவியமாய் வரைந்தான். இதன் நீட்சியே இன்றைய சுவர் கிறுக்கல் பழக்கம். 

நம்மில் பெரும்பாலானோர் சுவர் கிறுக்கல்களை பொது இடங்களில். பேருந்து இருக்கைகளில், தொடர்வண்டி இருக்கைகளில், சுவர்களில், பள்ளி மேசைகளில் ஏன்  பொதுக் கழிவறையில் கூட பார்த்திருக்கிறோம். 
தனது இருப்பினை அடயாளப்படுத்த பதிவு செய்ய ஆதிமனிதன் குகைகளில் துவங்கிய பழக்கத்தின் நீட்சியே இது என்பதை வல்லுனர்கள் ஆய்வுகள் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.

பிம்பேட்கா முதல்  இடைக்கல் வரை இந்தியாவின் பல பகுதிகளில் இப்படிப்பட்ட பாறை ஓவியங்கள் காணக் கிடைகின்றன. ஆனால்  அத்தகு தொன்மை மிக்க ஓவியங்கள் புதுகையிலும் இருக்கின்ற என்பதை புதுகையின் முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தகுந்த சான்றாதாதரங்களுடன் நிறுவிய பொழுது எனக்குள் எழுந்தது ஒரு கலவையான உணர்வு. 

புதுகைக்கு வருவதற்கு முன்னர் ஓர் மாவட்ட ஆட்சியரின் தொல்பொருள் ஆய்வுக் குழுவில் நிறைவான பயிற்சியும் களப்பணியும் நூல் ஆசிரியர் திரு அருள் முருகன் அவர்களுக்கு கிட்டியிருந்தது. இது புதுக்கோட்டைக்கு கிடைத்த பெரும் பேறு என்பதை இந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களும் சொல்கின்றன. 

புதுகையின் திருமையம், சித்தன்னவாசல் மற்றும் குடுமியான் மலை பாறை ஓவியங்களையும் கல்வெட்டுக்களையும் வெகு விரிவாக ஆய்வு செய்யும் இந்த நூல் அவற்றின் காலத்தை அறிவியல் பூர்வமாக விவாதித்து நிறுவுவது அருமை. 

சொல்லப் போனால் இது தொல்லியல் குறித்த ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி நூல். பாடநூலாக அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அத்துணை அடர்த்தியான தகவல்கள், தரவுகள் ஆனால் நட்பான தொனியில் விவரிக்கும் எழுத்துப் பாணி. 

ஆய்வாளர் ஓவியத்தின் காலத்தை நிர்ணயிக்க மேற்கொண்ட முயற்சிகளையும், எப்படி அறிவியல் பூர்வமாக காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருப்பது ஓர் இனிய வாசித்தல் அனுபவம். 

நூல் அறிமுகம் செய்கையில் திரு.ராசி பன்னீர் அவர்கள் சொன்னார் பின்னினைப்புகளும் வெகு முக்கியமானவை என்று. படிக்கையில்தான் தெரிகிறது அவை எவ்வளவு முக்கியம் என்று. பின்னே மானிட சமூக வளர்ச்சியில் இருந்து, புதுகையின் அத்துணை வரலாற்றுச் சின்னங்களையும் பட்டியலிட்டு வெளியிடுவது என்பது சாதாரண செயலா என்ன. அதுவும் எல்லா ஓவியங்களின் ஜி.பி.எஸ் லோகஷனுடன்! 

கல்வி மேலாண்மைக்கு பணிக்கப்பட்டவர் புதுகையின் வரலாற்றில் வெகு அழுத்தமாக தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். 

வெறும் ஐநூறு பிரதிகளே வந்திருக்கும் இந்த நூல் உங்கள் கைக்கு கிடைத்தால் விடாதீர்கள். (அதுக்குன்னு என்னிடம் கேட்காதீங்க, ஏதோ நிலவன் அண்ணாத்தே பெரிய மனசு பண்ணி நம்பள்கி ஒன்று தந்தார்!) 

தொன்மையான வரலாற்றிலும், பாறை ஓவியங்களில் அக்கறை உள்ளோருக்கு மட்டுமான நூல் அல்ல இது. நாம் அனைவருமே கொண்டாடக் கூடிய தகுதியோடு வந்திருக்கிறது. 

அதீத பொருட்செலவில் உயரிய தரத்தில் வண்ணப் படங்களுடன் நூலை வெளியிட்டிருக்கும் பாறை ஓவிய ஆய்வுக் கழகம் பாராட்டுக்கு உரியது. இந்நேரம் முதல் பதிப்பு முழுவதுமே விற்றிருக்கும்! 

ஆய்வுகள் தொடர்ந்தால் மகிழ்வு.

அன்பன்
மது

Comments

  1. எனக்கு இன்னும் புத்தகம் கிடைக்கலன்னு வருத்தத்தை அதிகமாக்குதே இந்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்...
      அண்ணாத்தேவிடம் முதல் நாள் இரவே அன்புக் கட்டளை ஒன்றை இட்டுவிட்டேன்.
      எனவே சாத்தியமானது..

      என் கணிப்புப்படி முதல் பதிப்பு முழுவதுமே விற்றுப் போயிருக்கும் இப்போது.

      அருமையான அடுத்த பதிப்புத்தான் உங்களுக்கு ...

      Delete
  2. அருமையான பதிவு


    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    ReplyDelete
  3. நல்லதொரு வாசிப்பனுபவம்..... நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete

Post a Comment

வருக வருக