Friday, 11 November 2016

பேரிடர் நாட்குறிப்பு ஒன்று

நண்பர்களுக்கு வணக்கம் ...

கருப்புப் பணம் குறித்த முகநூல் பகிர்வுகளை இங்கே தர இருக்கிறேன்.

ஒரு பொருளாதாரப் பேரிடர் குறித்த நாட்குறிப்பாட்டம் இருக்கட்டும் என்பதற்காக ...

நன்றி




1
Sam Ponraj https://www.facebook.com/SamPonraj76
8 hrs ·
சரியா இரவு 11 மணி. பீப் பீப் பீப் என்று சத்தம். சுற்றும் முற்றும் பார்த்தால் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியவில்லை. ஒவ்வொரு இடமாக தேடி வரும் போது பர்ஸ் உள்ளே இருந்து அந்த சத்தம் வருவது கேட்கிறது. என்னவாக இருக்கும் என்று அவசரமாக திறந்து பார்த்தால்... என்ன ஆச்சரியம்!!!

புதிதாக வாங்கி வந்த 2000 ரூபாய் நோட்டில் இருந்த GPS வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

2
- Sivasankaran Saravanan
https://www.facebook.com/kingofrefraction
வங்கியிலிருந்து புதிதாக வாங்கிய இரண்டாயிரம் ரூபாய்த் தாளோடு நண்பர் ஒருவர் வந்து என்னை சந்தித்தார். எங்கே அந்த ரூபாய் நோட்டை காண்பியுங்கள் என்று ஆர்வமிகுதியில் கேட்கவே சிரித்துக்கொண்டே தந்தார். கையில் வந்த பளபளா நோட்டை பார்த்ததும் எனக்குள் ஒரு பூரிப்பு. " இருங்க என் பாக்கெட் ல வச்சிட்டுத் தர்றேன் " என சொல்லி பாக்கெட்டுக்குள் வைத்ததும் திடீரென பட பட வென ஒரு சத்தம். நான் வெலவெலத்துப்போய் நண்பரை பயத்துடன் பார்க்க அவரோ குறும்புப் புன்னகை பூத்தபடியே என்னை பார்த்தார்.

பிறகு தான் புது 2000 ரூபாய் நோட்டு பற்றி என்னிடம் விளக்கினார். அதாவது அந்த நோட்டை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துப் பார்க்கமுடியும். ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத யாராவது அந்த நோட்டை பாக்கெட், மணிபர்சு அல்லது வீட்டிலோ வெளியிலோ வேறு எங்காவது வைத்தால் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். ஒருத்தர் எவ்வளவு நேரம் தான் கையிலேயே 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்க முடியும்?! எல்லாரும் சொல்வது போல இதுவொன்றும் நேனோ டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்டதல்ல. அதைவிட Advanced நியூரோமார்ஃபிக் டெக்னாலஜி மூலமே இது சாத்தியம் ஆகும். உலகின் வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற நோட்டு தயாரிக்கப்படவில்லை. இந்தியாவில் தான் முதன்முறையாக இது செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்திலேயே இது தொடர்பாக ஒரு உயர் தொழில்நுட்ப குழுவை அமைத்து வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். தனது வெளிநாட்டு பயணங்களின் போதும் அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இதுபற்றி விவாதித்து கடைசியாக இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் ...!

நண்பர் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போனேன். ஒரே நாளில் ஒட்டுமொத்த தேசத்தையே கறுப்புப் பணமற்ற தேசமாக மாற்றிக்காட்டிய பிரதமர் மோடி என் மனதிற்குள் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார். நான் பிறந்தது முதலே என்னை பலரும் ராசியில்லாதவன், அதிர்ஷ்டம் இல்லாத ஆள், போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் என்றெல்லாம் கேலி செய்வதுண்டு. ஆனால் இன்று அவர்களை தேடிப்பிடித்து சொல்வேன் : இப்படிப்பட்ட ஒரு மனிதர் எனக்குப் பிரதமராக கிடைத்திருக்கிறார் என்றால் நான் எவ்வளவு அதிர்ஷ்டமும் புண்ணியமும் செய்திருக்கவேண்டும்?!
#ஜெய்ஹிந்த்

3.

Nanthan Shridharan Shared this
https://www.facebook.com/janakiraman.hariharan
மோடி அரசின் ‘கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை எவ்வளவு அபத்தமானது என்பதை இந்த கட்டுரை சிறப்பாக விளக்குகிறது.. மிக முக்கியமான கட்டுரை.. நண்பர்கள் பொறுமையாக வாசியுங்கள்..

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ‘சிடிசன்’ இணைய இதழுக்கு எழுதிய கட்டுரை: தமிழாக்கம்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

நவம்பர் 8 இரவு 8 மணிக்கு தேசிய தொலைக்காட்சிகளில் தோன்றிய நரேந்திர மோடி அன்றை நள்ளிரவிலிருந்து, அதாவது வெறும் நான்கு மணி நேரத்தில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்கும் என்று அறிவித்தார். இந்த வினோதமான முடிவு ‘கருப்புப் பணத்தை” தாக்கும் என்று நியாயப்படுத்தினார். அது மட்டுமின்றி “பயங்கரவாதிகள்” பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகள் செல்லாதாதாகி விடுமென்றும் கூறினார்; அரசாங்கத்தை உற்சாகமாக ஆதரித்துவரும் சில தரப்பினர் மோடியின் இந்த முடிவு “பயங்கரவாதத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லியத் தாக்குதல்” என்பது வரை பேசிவிட்டனர்.

கள்ள நோட்டுகள் பற்றி பிறகு பேசுகிறேன். முதலில் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியே வழக்கத்திற்கு மாறாகப் பாராட்டியிருக்கும் “கருப்புப் பண” விவகாரத்தை முதலில் பார்க்காலாம். ஆயிரம், ஐநூறு ரூபாய்த் தாள்களை மதிப்பிழக்கச் செய்த மத்திய அரசின் நடவடிக்கை ‘கருப்புப் பணத்தின்’ மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிற வாதம், ‘கருப்புப் பணத்தின்’ தன்மை குறித்து கொஞ்சம்கூடப் புரிதல் இல்லாமல் முன்வைக்கப்படுவது. மந்த புத்தியிலிருந்து உதித்தது.

‘கருப்புப் பணம்” என்பது டிரங்குப் பெட்டிகளிலும், தலையணை உறைகளுக்குள்ளும் கற்றை கற்றையாக ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் என்கிற உள்ளார்ந்த புரிதலிலிருந்து வரும் கருத்து அது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தால் அதிக எண்ணிக்கையிலான பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்து புதிய நோட்டுகளைப் பெறும் பரிவர்த்தனைக்காக வங்கிகளுக்கு செல்வார்களென்றும், அவர்கள் மீது வங்கிகளுக்கு சந்தேகம் ஏற்படுமென்றும், அந்த சந்தேகத்தை வரி நிர்வாக அதிகாரிகளுக்கு வங்கிகள் தெரிவிக்குமென்றும், உடனே குற்றவாளிகள அவர்கள் பிடித்து விடுவார்களென்றும் அனுமானங்கள் இந்தப் புரிதலிருந்துதான் வருகின்றன. இப்படி ‘கருப்புப் பணம்’ வெளிச்சத்திற்கு வரும்போது, எதிர்காலத்தில் தவறுகள் நடக்காது என்று செல்கிறது அந்த அனுமானம்.

’கருப்புப் பணம்’ உண்மையிலேயே நோட்டுகளாகப் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன என்று வைத்துக் கொண்டாலும், இந்த வாதத்தின் இரண்டாவது பகுதி அர்த்தமற்றதுதான். ஒருவர் கணக்கில் வராத 20 கோடிகளை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருக்கிறாரென்றால், அவர் புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக 20 கோடியையும் எடுத்துக்கொண்டு வங்கிக்குச் செல்லமாட்டார். (எப்படியிருந்தாலும் அவர் அப்படிச் செய்ய அனுமதிக்கப்படவும் மாட்டார்). அதற்கு பதிலாக, அவர் பல அடிமைகளிடம் சிறு தொகைகளைக் கொடுத்து வங்கிகளுக்கு அனுப்பி வைப்பார். இறுதிக் கெடு தேதியான டிசம்பர் 30க்குப் முன் இப்படி பல நாட்கள் செய்வார். உண்மையில் பார்த்தால் இந்த தொடர் முயற்சி கூட அவருக்குத் தேவையில்ல. பழைய நோட்டுகளுக்குப் பதில் கமிஷனை எடுத்துக்கொண்டு புது நோட்டுகள் தருவதாகக் கூறி பல தரகர்கள் விரைவில் வருவார்கள். இப்படி “கருப்புச் செயல்பாட்டாளர்கள்” பழைய ”கருப்புப் பண” நோட்டுகளை பரிவர்த்தனை செய்து புதிய நோட்டுகளைப் பெறும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வதால் பதுக்கப்பட்டிருக்கும் பணக்குவியல் வெளிவந்து விடும் என்று ‘நிபுணர்கள்’
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்வைக்கும் வாதம் அர்த்தமற்றது.

அதை விட முக்கியமானது, ‘கருப்புப் பணம்’ என்ற இந்த கருத்தாக்கமே அபத்தமானது. ‘கருப்புப் பணம்’ என்று சொல்லும்போதே நம் மனக்கண்ணில் தோன்றும் பிம்பம் வெளிப்படையாக வங்கித் வைப்புத்தொகையாக இருக்கும் பணமல்ல; தலையணை உறைகளுக்குள்ளோ அல்லது மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட பெட்டிகளுக்குள்ளோ பதுக்கப்பட்டிருக்கும் கற்றை கற்றையான நோட்டுகள்தான் நினைவுக்கு வரும். உண்மையில் பார்த்தால், ‘கருப்புப் பணம்’ என்று நாம் சொல்லும்போது, கள்ளக்கடத்தல், போதைமருந்து விற்பனை, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வது போன்ற முழுமையான சட்டவிரோதச் செயல்களையோ அல்லது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையோ, அல்லது வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்படாமல் நடக்கும் செயல்பாடுகளையோதான் குறிக்கிறோம். சான்றாக, நூறு டன் உலோகங்களை அகழ்ந்து எடுத்துவிட்டு, வரியைக் குறைப்பதற்காக 80 டன்களைக் கணக்கில் காட்டுவதை நாம் ‘கருப்புப் பண’ உற்பத்தியாகக் கொள்கிறோம். அதே போல், 100 டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு, 80 டாலர் மதிப்புள்ள பொருட்களையே ஏற்றுமதி செய்வதாகக் கணக்கில் காட்டுவதும், மீதமுள்ள 20 டாலர்களை சட்டவிரோதமாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கியில் போட்டுவைப்பதும் ‘கருப்புப் பண’ உற்பத்திக்கு மற்றொரு சான்றாகும். அல்லது, ரூபாயை ஹவாலா முறையில் அன்னிய கரன்சியாக மாற்றி அயல் நாட்டு வங்கிகளில் பதுக்குவதும் ‘கருப்புப் பண’ உற்பத்திதான்.

சுருக்கமாகச் சொன்னால், ‘கருப்புப் பணம்’ என்பது பலவகையான அறிவிக்கப்படாத நடவடிக்கைகளையே குறிக்கும்.
‘கருப்புப் பணம்’ என்பது ஒரு இருப்பைக் குறிப்பதல்ல, ஓட்டத்தைக் குறிப்பது என்பதுதான் இதன் பொருள். ‘கருப்புச் செயல்பாடுகள்’ அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபத்தைத் தருபவை; பணத்தைக் குவித்து வைத்திருப்பது லாபம் தராது. வர்த்தகச் செயல்பாடுகள் என்பதற்கு மார்க்ஸ் “கருப்புச் செயல்பாடுகளுக்கும்’ பொருந்தும்; அதாவது, பணத்தை சுற்றில் விடுவதால்தான் லாபம் ஈட்ட முடியுமேயொழிய, பதுக்கி வைப்பதினால் அல்ல; ’கஞ்சன்’ முன்னதைச் செய்வான், முதலாளி பின்னதைச் செய்வான். வர்த்தகப் பணம் குறைந்த அல்லது நீண்டகாலத்திற்கு இருப்பாக வைக்கப்படும் என்பது உண்மைதான் (உதாரணமாக, மூலதனம்-பண்டம்-மூலதனம் என்கிற சுழற்சியில்); ஆனால் இது ‘வெள்ளை நடவடிக்கைகளுக்குப்’ (வர்த்தகம்) பொருந்தும் அளவிற்கு ‘கருப்பு நடவடிக்கைகளுக்கும்’ பொருந்தும். அதனால்தான், ‘கருப்புப் பணம்’ இருப்பாக வைக்கப்படும் என்றும், ‘வெள்ளைப் பணம்’ சுற்றில் விடப்படும் என்றும் அவற்றின் தனித்தன்மையை வரையறுப்பதற்கு ஆதாரமே இல்லை. எல்லாப் பணமும் சில இடைவெளிகளுக்குப் பிறகு சுற்றி வருகிறது; ‘கருப்புச் செயல்பாடாக’ இருந்தாலும் ‘வெள்ளைச் செயல்பாடாக’ இருந்தாலும் இதுதான் உண்மை. ஆகவேதான், ‘கருப்புப் பணத்தை” வெளியே கொண்டுவருவதன் சாரம் “கருப்பு நடவடிக்கைகளைத்” தேடிக் கண்டுபிடிப்பதில் இருக்கின்றதேயொழிய, இருப்பாக வைத்திருக்கும் பணத்தைத் தாக்குவதில் அல்ல. இதற்கு, நேர்மையான, முறையான, சிரமம் மிகுந்த புலனாய்வு தேவைப்படுகிறது.

கணிணிகளின் காலத்திற்கு வெகு முன்பே, முனைப்புக் கூடிய புலனாய்வின் வாயிலாக எந்தவொரு வரி ஏய்ப்பாளரையும் பிடித்துவிடுவார்கள் என்ற பெருமை பிரிட்டிஷ் அரசின் உள்நாட்டு வருவாய்ச் சேவை அமைப்புக்கு இருந்தது. இந்தியாவை விட சிறியநாடு பிரிட்டன் என்பது உண்மைதான். ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, அதன் அளவிற்கும் தேவைக்கும் ஏற்றதுபோல் அதிகமான அலுவலர்களைக் கொண்ட அமைப்பை உருவாக்கலாம். இதை நாம் செய்துவிட்டால், பொறுமையும், திறமையும் நிறைந்த வரி நிர்வாக அமைப்பை ஏற்படுத்திவிட்டாலே உள்நாட்டிலிருக்கும் ‘கருப்புப் பணத்தையாவது’ வெளிக் கொண்டுவர முடியும்.

ஆனால், ஒரு கணிசமான அளவு ‘கருப்புச் செயல்பாடுகள்” அயல்நாட்டிலிருக்கும் வங்கிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. உள்நாட்டில் இருப்பதை விட இந்தச் செயல்படுகளின் அளவு மிக அதிகம் என்று சிலர் கூறுவார்கள்.

தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் ‘கருப்புப் பணத்தை’ வெளிநாட்டிலிருந்து ‘திரும்பக் கொண்டுவருவதைப்” பற்றிதான் பேசினார். பெரும்பாலான ‘கருப்புப் பணம்’ வெளிநாட்டில் இருக்கிறது என்பதைத்தான் சூசகமாக உணர்த்தினாலும்
அவரும் ‘கருப்புப் பணம்’ என்பது ஒரு பதுக்கிவைக்கப்பட்ட குவியல், அது ஒரு செயல்பாடு என்ற அப்பாவித்தனமான புரிதலில்தான் இருந்தார். ‘கருப்பு நடவடிக்கைகளுக்கு’ பெரும் மூலாதாரமாக அன்னிய வங்கிகள் இருக்கும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமேயன்றி, அத்தகைய நடவடிக்கைகளை ஒழிக்க உதவாது.

ரூபாய் நோட்டுகளைச் மதிப்பிழக்கச் செய்வது இந்தியாவில் இது முதல் முறையல்ல. ஜனவரி 1946இல், 1000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன.

1978இல் மொரார்ஜி தேசாய் அரசாங்கம் 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுகள் ஜனவரி 16 நள்ளிரவு வரை செல்லாது என்று அறிவித்தது. 1978இலும் (1946லும் கூட) இது பொதுமக்களை பாதிக்கவில்லை.

ஏனெனில், அவர்களில் மிகப்பெரும்பாலானோர் அந்த நோட்டுகளைப் வைத்திருக்கவில்லை. ஏன், பார்த்ததுகூட இல்லை. (1978இல் கூட 1000 ரூபாய் என்பது பெரும் தொகை; சாமானியர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்த்தது இல்லை). மொரார்ஜி அரசின் நடவடிக்கை பொதுமக்களை பாதிக்கவில்லை; ‘கருப்புப் பணம்’ என்கிற தீமையையும் ஒழிக்கவில்லை. மோடி அரசின்
நடவடிக்கையும் அதேபோல் பயனற்றதாகப் போகும்; அதே நேரத்தில் பொதுமக்களின் வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கும் என்கிற பக்க விளைவும் இருக்கும்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது ‘கருப்புப் பணத்தை’ கட்டுபடுத்துகிறதோ இல்லையோ, இந்த நடவடிக்கை பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்தும் பொருளாதார அமைப்பிலிருந்து மாறிச்செல்லும் நீண்டகால விளைவினை ஏற்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் நிதி உதவி பெறாத, கணக்கில் வராத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அன்னிய வங்கிகளின் நிதியுதவியுடன் நடைபெறும் ‘கருப்பு நடவடிக்கைகள்’ இந்த ரொக்கமில்லாத இந்தியாவின் பார்வையிலிருந்து தப்பித்து விடும் என்பது ஒரு புறமிருக்க, ரொக்கமில்லாத இந்தியா என்பதே, ஒரு கிரெடிட் கார்டு வாங்குவதற்கும், வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும் ஒரு சாமானியன் படும்பாட்டினை அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் பகல் கனவுதான்.

”எல்லைக்கு அப்பால்’ அச்சிடப்படும் போலி நோட்டுகளின் சுழற்சியைத் தடுப்பதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க முடியுமென்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. புதிய நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் கள்ள நோட்டு உற்பத்தியைத் தடுக்கும் என்கிற அனுமானத்திலிருந்துதான் இந்த வாதம் எழுகிறது. அப்படியே இருந்தால் கூட போலிகளை உருவாக்க முடியாத வகையிலான புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தும் இந்தப் பணியை படிப்படியாக, யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் செய்திருக்கலாம். இப்படித்தான், பழைய நோட்டுகளை மாற்றி புதியவற்றை அறிமுகப்படுத்தும் பணி இதுவரை நடந்து வந்திருக்கிறது.


நவம்பர் 8 இரவிலேயே பனிச்சரிவு போல் கள்ள நோட்டுகள் வந்து குவியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கக் கூடிய நிலை இல்லையே. மக்களின் பாதுகாப்பு உணர்வின் மீதும், சவுகரியங்கள் மீதும் அதிரடியான ஆச்சரியமூட்டக்கூடிய பெரும் தாக்குதலை ஏன் அரசாங்கம் அந்த இரவில் தவிர்க்க வில்லை.?

மோடி அரசின் இந்த நடவடிக்கை, நவீன இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்ததில்லை. பெரும்பணக்காரர்கள் வைத்திருக்கும் நோட்டுகளை மட்டும் மதிப்பிழக்கச் செய்து, பிறரின் நோட்டுகளுக்கு விலக்கு அளித்த பிரிட்டிஷ் அரசாங்கம் கூட மோடி அரசை விட மக்களின் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளித்திருக்கிறது. இந்த அவசர நடவடிக்கை, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமுல்படுத்தும் வகையில் மோடி எடுத்துவரும் ஏராளமான பிற நடவடிக்கைகளைப் போன்றதுதான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது மக்களுக்கு எதிரானது.

_ பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

(தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்)

4.
Suhaib Ahamed
https://www.facebook.com/suhaib.ahamed.12
Yesterday at 6:20am ·
புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை

திருமண விழாக்களில் மொய் வைக்கும்போது

வாய்ஸ் நோட்டாக உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம்.


#நானோ_சிப் Satellite மூலமாக பதிவு செய்து மணமக்களை வாழ்த்தும்

11 comments:

  1. விரிவான, வியப்பான செய்திகள் தோழரே
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர் ...
      வியப்புகள் விழிப்புணர்வுகள் தொடரும் ..

      Delete
  2. 2௦௦௦ ரூபாய் நோட்டு வந்து விட்டது ,அதில் நானோ சிம்மோ ,வேறெந்த புதிய தொழில் நுட்பமும் இருப்பதாக தெரியவில்லை இதுவும் வதந்திதான் போலிருக்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  3. அருமையான வரிகள்

    உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  4. நல்ல தொகுப்பு... பேரிடர் நாட்குறிப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  5. ஹா... ஹா... ஹா... ஹா... தமாசு... தமாசு...

    ReplyDelete
  6. நல்ல விரிவான கட்டுரை. பகிர்விற்கு மிக்க நன்றி

    ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...

Labels

12 Years a Slave (2013) 2:22 2001: எ ஸ்பேஸ் ஆடிசி A Walk Among the Tombstones aathaar Amr Waked Avengers Age of Ultron avms kaarthik bairava blogging tips buds to blossoms c.c.e Fast and Furious 8 fb share geostorm 2017 Guardians of the Galaxy hariharasuthan honour killings innovations in Marketing into the storm Iyothee Thass jci jci pudukkottai central kalvi kannaki kovil keezhadi khan's academy kochadaiyaan review lakshmi short film linking fraud Lucy(2014) spoiler madurai Michiel Huisman Teresa Palmer Sam Reid Simone Kessell Maeve Dermody Min-sik Choi Morgan Freeman oblivion paleo diet personal change positive attitude வெற்றி இலக்கியம் Rafeeq Friend robin williams rouge one 2016 sasikala for cm Scarlett Johansson shajakaan society spoiler ssa T.V.18 yaathum oore episode 12 Tamil Short Story tasmac tesla motors thamizh thirai vimarsanm udayakkumar viswaroopam movie want to write ? War for the Planet of the Apes www.ted.com X Standard Tamil Memory Songs Tamil Nadu X-Men: Days of Future Past அ பெ கா பண்பாட்டு இயக்கம் அ.பெ.கா அசத்தல் அரசுப் பள்ளி அச்சம் என்பது மடமையடா அப்பா அமெரிக்கா அம்மா அம்மா ஜோதிமணியின் மரணத்தை முன்னிட்டு அயோத்தி தாசர் அரசு ஊழியர் ஓய்வூதிய போராட்டம் அரசு ஊழியர்களின் குரல் அரசுப் பள்ளிகள் அரிமளம் பள்ளி அரைவல் அலைகள் அலையும் குரல்கள் அவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் அறிவிப்புகள் அனுபவம் அன்னவாசல் கே. ரெங்கசாமி ஆஃபரா ஆங்கில கேட்டல் பயிற்சி ஆங்கிலத்தொடர்பாற்றல் ஆங்கிலப் படம் ஆங்கிலப் பயிற்சி ஆங்கிலம் ஆசிரியர் ஆசிரியர் தினம் ஆசிவகம் ஆசை தொடர் பதிவு ஆண்டனி ஆதிச்சநல்லூர் இசை இடஒதுக்கீடு இடைநிறுத்தம் இடைநிற்றல் இந்திய தேசிய ராணுவம் இந்தியா வரங்களும் சாபங்களும் இந்துத்துவம் இமான் இளையராஜா இறுதிச் சுற்று இனப்படுகொலை இன் டு தி ஸ்டார்ம் இன்னுமொரு சிறுகதை. புன்னகை இஸ்ரேல் ஈர்ப்பலைகள் ஈழம் ஈழம் சமுகம் உயிர்மை உலகின் பொருளாதாரக் கொள்கை உலோக உருக்கு ஆலை எக்ஸ்.மென் அபோகிளிப்ஸ் எட்ஜ் ஆப் டுமாரா எல்காம் எஸ்.எம்.எஸ். கொள்ளை ஏற்பாடுகள் ஐஸ் ஸ்டுபா ஒரு கோப்பை மனிதம் ஒரு முகநூல் பகிர்வு ஒலிம்பிக் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் ஓவியர்கள் கடிதம் கட்செவி பகிர்வு ஒன்று கட்டிடப் பொறியியல் கட்டுரைப் போட்டி கண்ணகி கோவில் கண்ணேநலமா - கண்ணாடி பவர் குறைபாடுகள் கதிர்வேல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கத்தி கயல் கருத்தாளிகள் கலாச்சராம் கலிலியோ அறிவியல் மையம். கல்வி கல்வித்துறை விழா கல்வியாண்டு கவண் கவிஞர் தங்கம் மூர்த்தி கவிஞர் நீலா கவிதை கவிதை அறிமுகம் கவிதை பகிர்வு கவிதைகள் கவிதைத் தொகுப்பு கவிநாடு கண்மாய் கவுரவக் கொலைகள் கற்க கசடற கற்பித்தல் யுக்திகள் கனகசபை ராமசாமி கனவில் வந்த காந்தி கனிமொழி காக்கா முட்டை காசு பணம் துட்டு மணி மணி காணொளிகள் சில காதர் காந்தி திரைப்படம் காப்டன் அப்பாஸ் அலி காப்புரிமை கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி கார்த்திக் கார்த்திக் கார்த்திக் காவியத் தலைவன் காற்றுவெளியிடை கிரமத்து குழந்தைகள் கிரேஸ் பிரதிபா கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கிஷோர் டேவிட் ராஜ ராஜன் கீழடி குருநாதசுந்தரம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் தினம் குறும்படம் கேவல் நதி கொசுவத்தி கொசுவர்த்தி கொஞ்சம் புதிய அறிவியல் கொஞ்சம் வெப் கொடி காத்த குமரன் கொம்பன் திரை விமர்சனம் கோச்சடையான் கோடை நகர்ந்த கதை கோபிநாத் கோவை ஆவி க்விஸ் சக்கரக்காலன் சக்தி சவுந்தர் ராஜன் சச்சின் சதுர ஆவுடைகள் சந்தானம் சந்திப்பு சந்திரமோகன் வெற்றிவேல் சந்தைப்படுத்துதல் சமணச் சிலை சமுகம் சமுத்திரக்கனி சமூகம் சர்தார் வல்லபாய் பட்டேல் சாதனைப் பெண்மணிகள் சித்தன்னவாசல் ஓவியங்கள் சித்தன்னாவாசல் இலக்கிய சந்திப்பு சிவகார்த்திகேயன் சிறுகதை சினிமா சின்னவள் கவிதைத் தொகுப்பு சீனு சுகு சுய முன்னேற்றம் சுயபுராணம் சுரபி சுரேந்தர் சூப்பர்மென் வெர்சஸ் பாட்மேன் செந்தூரன் பாலிடெக்னிக் செந்தூரன் பாலியின் தொடர் சாதனை செல்பி செவன்த் சென்ஸ் செவென்த் சென்ஸ் சொன்னாங்க சோ ஸ்வீட் வலைப்பூ ஞானாலயா ஆவணப் படம் டாக்டர் ஸ்ட்ரேஞ் டான் ஆப் ஜஸ்டிஸ் டி.எம்.என்.டி Teenage Mutant Ninja Turtles (2014) டினா அரீனா டெல்லி சம்பவம் ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டின்ஷன் தங்கமகன் தஞ்சை தபால்காரர் தமிழ் தமிழ் ஹிந்து தமிழ்ச் செம்மல் விருது தயான் சந்த் தர்மதுரை தலைமைப் பண்பு தலைவாரி பூச்சூடி தாயம்மாள் தாய்மொழி தாரை தப்பட்டை தி இத்தாலியன் ஜாப் தி பிரஸ்டீஜ் தி.ஆலை பள்ளி தியாக வரலாறு திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள் திரை இசை திரை வி மர்சனம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் தீபிகா படுகோன் தீரன் அதிகாரம் ஒன்று தீரன் சின்னமலை துவரங்குறிச்சி தேவதைகளால் தேடப்படுபவன் தேறி தொடர்பதிவு தொலைகாட்சி 18 தொல்காப்பியர் விருது தொல்லியல் ஆய்வுக் கழகம் தொல்லியல் சான்றுகள் தொழில் நுட்பம் தொழில் முனைவு தொழில்முனைவு தோழர் ரபீக் பதிவு நகை நடாஷா ரைட் நடிகர் சங்கத் தேர்தல் நத்தார் தின வாழ்த்துக்கள் நந்தன் ஸ்ரீதரன் நமக்கு நாமே திட்டம் நம்பிக்கை மனிதர்கள். நம்மாழ்வார் நலம் நன்றிகள் நாகூர் ரூமி நாடகக் கலைஞர்கள் நாயகர்கள் நாளைய மனிதர்களின் நேற்று நான் ஒரு குழந்தை நிகழ்வு நிகழ்வுகள் நிகில் நிறுவனம் நிகில் பயிற்சி நிலைப்பாடுகள் நிழல் பதியம் நீட் பார் ஸ்பீட் நீயா நானா நுட்பம் நூர் டீச்சர் நூல் அறிமுகம் நூல் பட்டியல் நூல் விமர்சனம் நேர நிர்வாக தளம் நேர நிர்வாகம் நேர மேலாண்மை நேர்மறைச் சிந்தனை பக்தி பஞ்ச் 75 படிக்க வேண்டாத பதிவுகள் பட்லர் பணமதிப்பு நீக்கம் பணிநிறைவு பதிவர் சந்திப்பு 2014 பதிவர் சந்திப்பு 2015 பதிவர் சந்திப்பு 2015 ஆல்பம் பதிவர் திருவிழா 2015 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் பயிற்சிகள் பயிற்சித்துறை பலூஸ்சிஸ்தான் பள்ளி பள்ளிக்கல்வி பாகுபலி பாட்டன் காட்டைத் தேடி பாபநாசம் பாரதி புத்தகாலயம் பாரத் ஸ்டேஜ் 4 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 Fast and Furious 7 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 8 பாஸ்ட் எய்ட் பிட் டோரறேன்ட் பிரபு சாலோமோன் பிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை பிராங்கின் படங்கள் பிரார்த்தனை பிரித்தாளுதல் பிரியங்கா பிரேமா தக்ஷிணாமூர்த்தி பிரேம்சந்த் பு.கோ.சரவணன் புகைப்படத் தொகுப்பு புதியவன் புதுகை குளம் மீட்பு புதுகை செல்வா புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம். புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம் புதுகை புத்தகத்திருவிழா 2017 தொடர் நிகழ்வு -2 book fest 2017 follow up activities புதுகைப் புத்தக திருவிழா 2017 புதுகையின் கல்வி முகங்கள் புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் புள்ளிகள் புறம்போக்கு பெரியார் பெற்றோர் பேப்பர் ஒன்று பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி பைரவா பொது பொதுப் போக்குவரத்து மேம்பாடு பொற்பனைக்கோட்டை போட்டிகள் ப்ரோசன் ப்ளாகர் டிப்ஸ் மணிகண்டன் ஆறுமுகம் மதத்தீவிரவாதம் மதுரை மதுரை வரலாறு மரபு நடை மரபு வழி நடை மராத்திய மொழிப் படங்கள் மலர்தரு மழைமனிதர்கள் மனிதர்கள் மாட் மாக்ஸ் ஃபியூரி ரோட் Mad_Max:_Fury_Road மாணவர் போராட்டம் மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள் மாண்புமிகு மகளிர் மாண்புமிகு மாணவர்கள் மாதொரு பாகன் மாத்யு ப்ளோரிஸ் மாமழை நினைவுகள் மார்க் அண்டோனி மாறாப்புன்னகை மாற்றத்தின் முகங்கள் மியான்மர் மிருதன் மிஷன் இம்பாசிபிள் 5 Mission Imposible Rogue Nation முகநூல் முகநூல் நிலைத்தகவல்கள் முகநூல் பகிர்வு முத்தலாக் முத்துக்கிருஷ்ணன் முத்துநிலவன் முனைவர் மு பிரபு முனைவர் ஜம்புலிங்கம் முனைவர். அருள்முருகன் மூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும் மெட்ராஸ் மெமரி கார்ட் மேயாத மான் ராஜாசுந்தர்ராஜன் அவர்களின் பார்வையில் மேன்மை இதழ் அறிமுகம் மொழி மொழித்திறன் மோசன் காப்ச்சர் யாதும் ஊரே யாழியின் இரண்டு தொகுப்புகள் ரபீக் ரபீக் பகிர்வு ரம்ஜான் ரவீந்திரன் ரஜனி ரஷ் ரஹ்மான் ராஜ கோபால தொண்டைமான் ராஜ சுந்தர்ராஜன் ராஜசுந்தர்ராஜன் ராஜா சுந்தர்ராஜன் ராஜேஷ் வைத்யா ரிச்சர்ட் அட்டன்பரோ ரியோ ஒலிம்பிக் ருத்ரையா ரோக் ஒன் movie review ரோஹித் வேமுலா லட்சுமி குறும்பட விமர்சனங்கள் லாரீனா லூசி லோகன் 2017 வகுப்பறை அனுபவங்கள் வகை ஒன்று வணக்கம் வண்ணதாசன் வலைச்சரம் வலைப்பதிவர் மாநாடு வலைப்பூ நுட்பம் வள ஆசிரியர்கள் வனமகன் வாசிப்பு வாசிப்பு அனுபவப்பகிர்வு வாழ்த்துக்கள் வாழ்வியல் திறன்கள் பயிற்சி. வாழ்வியல் திறன்கள் பயிற்சி. தன்னை அறிதல் பயிற்சி வானவில் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் விடைபெறல் விதைக்கலாம் வித்டிராயல் சிம்ப்டம் விப்லாஷ் விருது வில்வன்னி நாகரீகம் விவசாயம் விஜய் டீ.வி விஜூ கனைக்ட் விஷாலின் விஸ்வரூபம் வீணை இசை வீதி கூட்டம் வீதிக் கூட்டம் வீதிக்கூட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமுரசு சுப்பிரமணிய சிவா வெயிலில் நனைந்த மழை வெர்சடைல் ப்ளாகர் விருது வெள்ளைப் புலி வெற்றி இலக்கியம் வைகறை வைகறையின் ஜெய் நல நிதி ஜல்லிக்கட்டு ஜாக்கி சேகர் ஜாதவ் ஜியோஸ்டார்ம் 2017 ஜூராசிக் வோர்ல்ட் ஜெயப் பிரபு ஜெர்மனி ஜே.சி. பயிற்சி ஜேசி இயக்கம் ஜோக்கர் ஜோசப் விஜூ ஷபானா பாஸிஜ் ஷாமிலா தலுவத் ஷாருக்கான் ஷான் கருப்புசாமி ஷாஜகான் ஸ்டான்லி குப்ரிக் ஸ்பாய்லர் ஸ்பிலிட் ஸ்ரீதர் சுப்பிரமணியன் ஹாக்ஸா ரிட்ஜ் ஹாண்ட்ஸ் ஆப் ஸ்டீல் ஹாலிவுட் ஹெர்குலிஸ்