டேய் நீங்கள்லாம் எதைக் கும்பிடுறீங்கன்னு தெரியுமா ?

எனது மேல்நிலை வகுப்புகளில் எனக்கு தமிழாசிரியராக இருந்தவர் ஒரு தீவிர திராவிடப்பற்றாளர். பெரியாரின் தொண்டர். 


நானோ எனது இடைநிலைக் கல்விவரை அம்மா சொல்படி சாந்தாரம்மன் கோவிலில் விளக்கேற்றும் பக்திப் பழம். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இறைவன் கூடவே வரவேண்டும் எனக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கும் பக்தப் பதராக  இருந்தவன். காலில் முள் தைத்தாலும் வரவேண்டும், சைக்கிள் பஞ்சரானாலும் வரவேண்டும்! 

இப்படி இருந்த என்னை இந்தத் தமிழ் வாத்தியார்கள் அதிரடித்தது போல் வேறு எந்த வாத்தியார்களும் அதிரடித்தது கிடையாது. 

ஒருமுறை வகுப்பில் இறை குறித்து பேசும் பொழுது டேய் நீங்கள்லாம் எதைக் கும்புடுறீங்கண்னு தெரியுமா என்றார். வெளியில சொல்லவாடா  முடியும் என்று தனது பளீரிடும் வழுக்கைத் தலையில் பட் பட் என்று போட்டுக் கொண்டார். 

கடும் அழுத்தத்தையும் அவமானத்தையும் தருவதாக இருந்தது அவரது அணுகுமுறை.

காலம் ஓட ஓட அந்த விசயம் மெல்ல மெல்ல மறைந்து போனது.  வழக்கம்போல்  எனது பக்திப் பயணங்கள் தொடர்ந்தன.

ஸ்டார் மூவிஸ் தந்த அதிர்ச்சி  

ரூபர்ட் முர்டாக் ஸ்டார் மூவிஸை ஆரம்பித்ததே என்னை நம்பித்தான் என்பது உங்களில் பலருக்குத் தெரியாது.  அத்துணைப் படங்களைப் பார்த்திருக்கிறேன். அப்புறம் வந்தது ஹெச்.பி.ஒ.

ஒரு மாலையில் ரொம்ப வித்யாசமான ஒரு திரைப்படத்தின் காட்சி ஒன்று என்னை குழப்பியது. ஒரு வெள்ளைக்காரர்  ஒரு சிவன் கோவிலில் நிற்க அவரது இந்தியத் தோழி லிங்கம் குறித்த விளக்கத்தை தெளிவாக தந்து கொண்டு இருக்க எனக்கு ஒரு 440வாட்ஸ் ஷாக். மிகத் தெளிவான நிதானமான ஆங்கிலத்தில்.

அப்புறம்தான் தெரியும் அது சேத்தன் பகத்தின் ஒரு நாவல் என்றும் அவரது குறும்புத் தனமான பாத்திரப் படைப்புகளும் காட்சிகளும் நவீன நாவல் உலகின் உச்சாணியில் அவரை வைத்திருப்பதையும் அறிந்தேன். 

தமிழாசிரியர் எழுப்பிய கேள்விக்கு விடைதந்த டான் பிரான் 

இன்னொரு அனுபவமாக 

உலகமே படிக்குதே நாம படிக்காட்டி நல்லா இருக்குமா என்று டான் பிரானின் டாவின்சி கோட் படித்தேன். 

நாவலா அது ..

எப்படி ஒரு சமகால சமூக வரலாற்றை அதுவும் மத வரலாற்றை சொல்ல வேண்டும் என்பதற்கான ஆகச் சிறந்த உதாரணம்! 

எத்துனைத் தகவல்கள்! அவற்றில் குவியலில் நான் ஒரு விசயத்தை படித்த பொழுது வியந்தேன்.

அது எல்லா மதங்களும் ஆதியில் காமத்தை வழிபாட்டுக்குரியதாக வைத்திருந்தன என்பதுதான். பின்னர் வந்த மதங்கள் வழிபாட்டை அவர்களின் கலாச்சார வடிவங்களுக்கு மேம்படுத்திக் கொண்டனர். 

ஆதி மதங்கள் எல்லாம் அப்படிதான் என்றும் அவர் நாவலின் போக்கில் நயம்பட சொல்லியிருப்பார்.

சிவலிங்க வழிபாடு என்பது ஒரு ஆதி மத வழிபாட்டின் நீட்சி! அது அவமானத்திற்குரியது அல்ல. அது உலகிற்கு வழிபாட்டை அறிமுகம் செய்தவர்களின் கலாச்சார நீட்சி. 

என்னத்தைடா கும்புடுரீங்க  என்று கேட்ட எனது தமிழாசிரியரிடம் இதுகுறித்து பேசவும் விவாதிக்கவும் வேண்டும் என்று தோன்றியது. 

நீண்டகாலமாய் அவமானமாக உணர்ந்த ஒரு விசயம்  பெருமிதத்திற்கு உரிய விசயமாக மாறிவிட்டிருந்தது. 

அடுத்தும் நான் நூல்களைப் படிப்பேன் என்றோ அவை மீண்டும் ஒருமுறை என் நிலைப்பாட்டை மாற்றும் என்றோ அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 

மாறிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை இல்லையா...

உங்களை மாற்றுவது எனது நோக்கம் அல்ல, 
பண்படுத்த நான் இறைத்தூதனும் அல்ல, 
ஒரு அனுபவப் பகிர்வு... 
அவ்வளவே. 

Comments

  1. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. கடந்த பதிவர் கூட்டம் முடித்த கையேடு எழுதியது இது ...
      நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருந்தது ...

      நம்ப முடியவில்லை இல்லையா...
      நன்றி வருகைக்கு

      Delete
  2. லிங்கத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கமாய் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ,நீங்கள் உணர்ந்ததை மற்றவர்களும் உணர!
    சிவ'லிங்க'த்தைப் பார்க்க 'லிங்க்' எதுவும் இருந்தா கொடுங்களேன் :)

    ReplyDelete
  3. ஒவ்வொரு நிகழ்வும் வயதளவிலும், அனுபவ அளவிலும் நம்முள் ஒரு மாற்றத்தினை உண்டாக்கும்.

    ReplyDelete
  4. இவ்வளவு வருடங்கள் கழித்து உண்மை தெரிந்ததா...? / புரிந்ததா...?

    ReplyDelete
  5. நம் வாழ்வில் நிகழும் பல நிகழ்வுகள் நம்முள் ஏதோ வித தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அந்தத் தாக்கம் புத்தகவடிவிலோ, ஆசிரியர் வடிவிலோ, நண்பர்கள் வடிவிலோ, பெற்றோர் உற்றார் உறவினர் இப்படிச் சொல்லிக் கொண்டெ போகலாம் ஏதேனும் ஒரு வடிவில், அல்லது நாம் பெறும் அனுபவங்களின் வழி ஒரு மாற்றத்தைச் சிறிதளவேனும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. செய்யும். அது அந்தந்தக் காலகட்டம், சூழல் நம் வயது, புரிந்து கொள்ளும் அறிவு, முதிர்ச்சியைப் பொருத்து மாறுகிறது. அந்த மாற்றங்கள் நல்லவையாகவும் இருக்கலாம் மாறாகவும் இருக்கலாம். நல்லவையாக இருப்பின் நன்மையே! நல்லதொரு அனுபவப் பகிர்வு கஸ்தூரி..

    ReplyDelete
  6. அருமையான பதிவு

    ReplyDelete

Post a Comment

வருக வருக