ஹாண்ட்ஸ் ஆப ஸ்டீல்


எண்பதுகளில் டி.ஈ.எல்.சியில் படிக்கும் பொழுது நாங்கள் வகுப்பின் இடைவேளைகளில், மதிய உணவின் பொழுது இன்னும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பேசிய படம்.



அன்று தொலைக்காட்சிகள் பரவலாக இல்லாததால் நாங்கள் திரைப்படங்களை கொண்டாடும் விதமே தனி.

ஜவகர் அலிதான் இதுபோன்ற கதைகளை மீண்டும் மீண்டும் சிலாகித்துச் சொல்வான்.

இன்றும் இந்தப் படம் பார்க்கப்படும் தகுதியோடுதான் இருக்கிறது.

செர்ஜியோ மார்டினோ என்கிற இத்தாலிய இயக்குனர் எடுத்தபடம். செரிஜியோ ஜியோலோ வகை படங்களை இயக்குபவர். ஒரு கொலை, தொடர்ந்த புதிர், வேட்டை என்று தொடரும் படங்கள் செர்ஜியோவின் அடையாளம்.

பாகோ கோராக் ஒரு விபத்தில் உடல்பகுதிகளை இழந்துவிடுகிறான், அவனை மீட்டு ஒரு சைபோர்க்காக மாற்றி கொலைக்கருவியாக பயன்படுத்துகிறது பன்னாட்டு நிறுவனம் ஒன்று.

வ்வ்வ், என்பத்திஆறிலேயே பன்னாட்டு நிறுவனங்கள் கைக்கூலிகளை வைத்து சமூக ஆர்வலர்களை போட்டுத்தள்ளும் கதைக்களம் ஒரு மிகச்சாதரண இத்தாலியப் படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. தனியொருவன்கள் இரண்டாயிரத்து பதினைந்தில்தான் சாத்தியம் ஆகியிருக்கிறது இங்கே.

நமது ரசனை, நமது வாசிப்பு, நமது வாக்களிக்கும் பாணி எத்தகையது என்பதை சிந்தித்தால் சிரிப்போ சிரிப்பு.

பாகோ ஓர் சமூக ஆர்வலரை கொன்றுவிட்டு தப்பி ஓடுகிறான் எப்.பி.ஐ துரத்துகிறது.

ஆர்ம் ரெஸ்லிங் காட்சிகளுக்காக நிறையவே கொண்டாடப்பட்ட படம்.

எண்பத்தி ஆறில் வந்த அந்துனை இந்திய மொழித்திரைப்படங்களும் ஒரு காட்சியை ஆர்ம் ரெஸ்லிங்கிற்காக ஒதுக்கியது நினைவில் வருகிறது.

படம் எடிட்டிங் கூட செம டிரன்டியா இருக்கு.

ஜேன் ஆக்ரன் கதாநாயகியாக வருகிறார். இயந்திர மனிதன் பாகோ கோராக் இவருக்கு கட்டுப்படுகிறார். காதல் வயப்படுகிறார்.

டேய் எந்திரன் கதையை என்னத்துக்கு சொல்றே என்போர் மன்னிக்க படம் கொஞ்சம் முன்னால் வந்துட்டு.

டானியல் க்ரீனுக்கு என்ன வசதி  என்றால் சைபோர்க் என்பதால் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு முகபாவங்களைக் காட்டவேண்டாம். இதே முறையைத்தான் டேர்மினடேரில் தலை ஆர்னால்ட் ஸ்வாஸ்நேகரும் செய்திருப்பார். உணர்வுகள் வராவிட்டால் என்ன. இயந்திரம் சண்டை போட வேண்டும் அவ்வளவே.

நாம் பால்யத்தில் கொண்டாடிய படங்களை மீண்டும் பார்ப்பது ஒரு அலாதி அனுபவம் இல்லையா.

அதற்காக பார்க்கலாம்.

வாழ்க YIFY தளம்.

Comments

  1. YIFY தளம்... நல்ல அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. பயன் தந்தால் மகிழ்வே

      Delete
  2. YIFY தளம்... விளக்கம்...?

    ReplyDelete
    Replies
    1. டொராண்ட் சைட் அது ...

      Delete
  3. நன்றி நண்பரே
    சிறுவயதில் படித்த இரும்புக் கை மாயாவி காமிக்ஸ் புத்தகம் நினைவிற்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. ஒ நீங்களும் படித்திருக்கீர்களா ...

      Delete
  4. இளம் வயதில் நம்மை கவர்ந்த ஹீரோவை இன்றும் காண்பதும் சுகமே :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க பதிவுலக ஹீரோ

      Delete

Post a Comment

வருக வருக