கில்ஃபி ஆகும் செல்ஃபிகள்


மக்களின் செல்பி மோகத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகிவருகிறது.சில விசயங்களைப் பார்த்தால் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற  கேள்வி எழுகிறது.

ஸ்பானிய காலை ஓட்டம் என்கிற மரபு சார் நிகழ்வில் ஆப்பிள் ஐ.போனோடு ஓடிய முப்பத்தி இரண்டு வயது டேவிட் லோபஸ் பின்னே துரத்திய இரண்டு காளை மாடுகளோடு செல்பி எடுத்துக்கொள்ள விரும்ப, அதுவே அவரது கடைசிப் படமாகிவிட்டது.

வெறியில் இருந்த காளைகள் அவரி குத்திக் கிழித்து விட்டன.

வடக்கு கரோலினாவில் அமைதியாக காரைச் செலுத்திக் கொண்டிருந்த கோர்ட்னி ஸ்டாண்ட்போர்ட் என்கிற பெண்மணி ப்ஹாரல் வில்லியம்சின் ஹாப்பி எனும் பாடலைக் கேட்ட நொடியில் ஒரு செல்பி எடுக்க விழைந்திருக்கிறார்.
நேரடியாக எதிரே வந்த வாகனங்களில் அவரது கார் மோதி ஒரு மரத்தில் முட்டிக் கொண்டு நின்றது.
அம்மணி ஹாப்பியாக போய்ச் சேர்ந்துவிட்டார்.


கேபோ டி ரோகா ஐரோப்பாவின் அதீத மேற்கில் இருக்கும் ஒரு அற்புதமான இடம்.  விபரீதமான செல்பிகளுக்கு இந்த இடம் பெயர் போனது. மூச்சை நிறுத்தும் உயரத்தில் குன்றில் இருந்து நீடிக்கக்கொண்டிருக்கும் பாறையில் நிற்கும் காதலன் காதலியை காற்றில் பிடிப்பது போல படங்கள் எடுத்துக் கொள்வது சர்வ சாதரணம்.

போலந்து தம்பதிகள் இந்த முயற்சியில் ஈடுபட்ட  பொழுது தவறி கீழே விழுந்து உயிர்விட்டிருக்கிறார்கள்.


இதில் ரொம்ப மோசமான இன்னொரு செய்தி அவர்கள் இருவரும் விழுவதை அவர்களின் குழந்தைகள் பார்த்துக் கொண்டே இருந்திருகிறார்கள்.
கொடுமை

சைனாவில் ஒரு செல்பி பிரியர் வால்ரஸ் விலங்குடன் செல்பி எடுக்க முயன்று இறந்திருக்கிறார்.

இலத்தீன் பாடகர் ஜெனி ரிவேரா தனது நண்பர்களுடன் விமானத்தில் எடுத்துக்கொண்ட செல்பி.
விமானம் வானேறும் நொடியில் எடுக்கப்பட்ட படம்.

அலைபேசியின் கதிரியக்கம் விமானத்தின் மின்அனுப் பொருட்களை சேதப்படுத்தியிருக்கலாம், இதனால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.

யூரல் மலையில் பணியில் இருந்த மூன்று ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் செல்பிக்கு ஒரு கையெறி குண்டு போதும் என்று நினைத்து அதன் பின்னை உருவியபடி செல்பி எடுத்து....

ஆகா இந்தியாவிற்கு கடும் போட்டியைத் தருவது இப்போதைக்கு ரஷ்யர்கள்தான்.

வயசோ நாற்பத்தி மூணு, இப்படி ஒரு செல்பி எடுக்கணும்னு என்ன ஆசையப்பா?

காமிரா பட்டனுக்கு பதில் துப்பாக்கி விசையை இழுத்து போய்ச் சேர்ந்த அமெரிக்கர்.

மின்னலோடு செல்பி எடுத்து ...


எலக்ட்ரிக் ட்ரைன் அருகே செல்பி எடுத்து உடலில் 27000 வால்ட் மின்சாரத்தை வாங்கி உயிரிழந்த அழகி...


காலெட் மொரோனோ தனது திருமணத்திற்கு பாச்சிலர் பார்டி கொடுக்க செல்லும் வழியில் செல்லை எடுத்து ஒரு செல்பி எடுக்க, காமிராவைப் பார்த்ததும் அவர் தோழி தான் கார் ஓட்டுகிறோம் என்பதை மறந்து ஈ காட்ட அதுதான் அவர்களது கடைசிப் படம்!அடுத்த தடவ செல்பி ஸ்டிக்க கையில எடுக்கும் பொழுது இதெல்லாம் நினைப்புல இருக்கனும்.

நான் என்னைச் சொன்னேன்.


அன்பன்
மது 

Comments

 1. என் உயிருக்கு ஆபத்து இல்லை காரணம் நான் செல்ஃபி எடுப்பது இல்லை

  ReplyDelete
  Replies
  1. உயிர் அவ்வளவு வெல்லம் இல்லையா மச்சான்

   Delete
  2. எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல,!?. உம்ம ஒரு செல்பி எடுக்க வைக்குறோம்.!.

   Delete
  3. அன்பே சிவம்

   Delete
 2. எனக்கு நினைப்பு இருக்கணும் தோழரே நான் இப்படி எடுக்க ஆசைப்பட்டதில்லை ஒபாமா மோடி போன்றவர்களுடன் மட்டுமே
  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. அவைகள் நல்ல செல்பிக்கள்தான்
   உயிர் போகும் அபாயம் இல்லை

   Delete
 3. புகைப்படம் எடுப்பது என்பது வாழ்நாள் முழுதும் நாம் பார்த்து ரசிக்க நினைவுகளை மீட்டு பார்க்க ..இந்த செல்பி மரணங்கள் அவர்களை பிறர் நினைத்து ப்ச் கொட்ட வச்சிரும் போலிருக்கே ! :( அந்த பாறைமுனை செல்பி முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் ..பாவம் அந்த குழந்தைகள் :( ..

  ReplyDelete
  Replies
  1. எந்த தருணத்தில் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை

   Delete
 4. இப்படிப்பட்ட முட்டாள்கள் போய் சேர்ந்ததே நல்லது என்று தோன்றுகிறது :)

  ReplyDelete
 5. இந்தப் பாறை முனை செல்ஃபி மிகவும் ஃபேமஸ். அது எப்படி இவர்களுக்குத் தோன்றுகிறது அந்த முனையில் எடுக்க....நல்ல செல்ஃபி.புள்ளைங்க..உயிருக்கே பணயம் வைத்து ...என்னவோ போங்க...போற போக்கு நல்லால்லே

  ReplyDelete
 6. குல்ஃபி விரும்பும் குழந்தைக்கும் ஏறியதே
  செல்ஃபி மோகம் தலைக்கு

  ReplyDelete
  Replies
  1. ஆகா வெண்பா முயற்சியா

   Delete
 7. செல்பி எடுப்பதும்
  செல்பியால் சாவதும்
  சிந்தித்துச் செயலாற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. சிந்தனை இருந்தால் சிரிப்பு

   Delete
 8. ஸ்மார்ட் போனால் பாதி வாழ்க்கை இழந்து போனோம். மீதி வாழ்க்கையையும் இந்த செலஃபீ யால் இழக்கலாமா!?

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்க வேண்டும் தோழர்

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை