கவிஞர்கள் பொருத்தருள்க

சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்கள் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாக்களால் புதுக்கோட்டையை திணறடித்தனர்.



வெகு நேர்த்தியான கவிதைகள்

சச்சின், ஸ்டாலின், செல்வக்குமார் (இரண்டு தொகுப்புகள்!) தூயனின் அசத்தல் சிறுகதைத்தொகுப்பு ஒன்று என வாசிக்க வேண்டிய நூற்கள் குவிந்துவிட்டன.

எல்லா நூற்களையும் வாசித்துவிட்டாலும் எதிர்பாராவிதமாக எனது வாசிப்பனுபவ பகிர்வை வலைப்பூவில் தரஇயலவில்லை.

காரணம் வேறொன்றும் இல்லை.

காணொளி மூலம் விமர்சிக்கலாம் என்கிற ஐடியா இருந்ததுதான் காரணம்.

பின்னொரு நாள் அண்ணன் தங்கம் மூர்த்தி அவர்களிடம் பேசிய பொழுது என்னதான் செய்தாலும் எழுத்தின் இடத்தை வேறு எதுவும் பிடிக்க  முடியாது. எனவே எழுதுங்கள் என்று சொல்ல எழுதத் துவங்கினேன்.

இவற்றிற்கெல்லாம் முதலாக நான் வாசித்த ஆகப் பெரும் படைப்பான அஞ்ஞாடி குறித்து விரிவான காணொளிப் பதிவுகளை வெளியிட விரும்பினேன்.

ஒளிப் பதிவு ஆனால், ஒலி இல்லை, ஒலி இருதால் ஒளி இல்லை என்கிற நிலை. புரிகிறமாதிரி சொல்ல வேண்டும் என்றால் கல்லைக் கண்டால் .... நிலைதான்.

ஒருவழியாக இரண்டு தொகுப்புகளை குறித்த வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துவிட்டேன்.

இனி வெளிவர இருக்கும் பதிவுகள்

ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார்,
ஆரஞ்சு மணக்கும் பசி,
இருமுனை
சின்னவள்,
பட்டைமிளகாயும் ...

நண்பர்கள் மன்னிக்க.

பதிவுகள்
தொடரும்

அன்பன்
மது 

Comments

  1. எழுத்தில் இருப்பதை வாசிப்பது ஒரு அனுபவம் என்றால் காதால் கேட்பது வேறு விதம். எனக்கென்னமோ படிப்பதே பிடித்திருக்கிறது மது....

    வாசிப்பனுபவம் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பு சத்தியமாய் வரம்தான் .
      நன்றிகள் தோழர்

      Delete
  2. பதிவுகள் தொடரட்டும் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தொடர்கின்ற தோழர்

      Delete
  3. ஆவலுடன்.... நானும்
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  4. காத்திருக்கிறோம் தோழர்.
    த ம

    ReplyDelete
    Replies
    1. வருகிறேன் தோழர்

      Delete
  5. "என்ன தான் செய்தாலும் எழுத்தின் இடத்தை வேறு எதுவும் பிடிக்க முடியாது." என்பது சரி தான்.
    எழுதி வைச்சுத் தானே வாசிக்கின்றோம்.
    ஒலி (Audio), ஒளிஒலி(Video) பதிவாக வெளியிடுவதில் தவறில்லை. சுவைப்பட வெளியிட்டால் அவற்றிற்கும் தகுதி இருக்குமே!
    எழுத்து(Text) வாசகரையும் ஒலி (Audio) கேட்போரையும் ஒளிஒலி(Video) பார்வையாளரையும் நிறைவடையச் செய்வது நம்மில் தான் இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete

Post a Comment

வருக வருக