நிகழ்வுகள்


புதுகையில் செயல்பட்டு வரும் ஞானாலயா குறித்து புதிதாக ஏதும் சொல்லத்தேவை இல்லை.ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர்.கிருஷ்ணமூர்த்தி அவரது துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி இருவராலும் நடத்தப்படும் மாபெரும் நூலகம்.

கிடைத்தற்கரிய நூல்களின் பாதுகாப்பு பெட்டகம்.

அய்யாவின் வாழ்நாள் சேமிப்பு!

மூன்றுக்கும் நான்கு கூட்டங்களில் அய்யா பேசியதைக் கேட்டவுடன் எனக்கு இயல்பாக ஒரு ஆசை துளிர்த்தது.

வாரம் ஒருமுறை அய்யாவுடன் பேசி அதைக் காணொளிப் பதிவாக்கி யூ டியூபில் வெளியிடலாம் என்கிற எண்ணம்தான்.

ஆனால் அந்த ஆசை செயல்வடிவம் எடுக்கவில்லை.

தற்போது அனந்த விகடனின் அறம் செய விரும்பு இளைஞர்களில் ஒருவரான புதுகை செல்வா அய்யா குறித்த ஒரு செய்திப் படத்தை எடுத்து வருகிறார்.

வாரநாட்களில் ஐந்து முதல் ஒன்பது வரை அய்யா அவர்களை பேசச்செய்து அதை காணொளியிலும், ஒலிப்பதிவாகவும் செய்து வருகிறார்.

திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

உண்மையில் பிரமாண்டமான முயற்சி.

ஆம், ஒவ்வொரு நூலக அலமாரிக்கு முன்னும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அந்த அலமாரியில் இருக்கும் எல்லா நூற்களைப் பற்றியும் அய்யா பேச அதைத்தான் செல்வா பதிவு செய்து வருகிறார்.

பிற்காலத்தில் ஒவ்வொரு அலமாரியிலும் ஒரு டச் பேட் மூலம் அந்த அலமாரியில் இருக்கும் நூல்கள் குறித்து அய்யா பேசும் காணொளியை நாம் பார்க்கலாம்.

பிரமாண்டம் என்று ஏன் சொன்னேன் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ..

படக்குழுவில் புதிதாக எனது மருமகளும் இணைந்திருப்பத்தை அங்கே சென்ற பின்னர்தான் உணர்ந்தேன்.

தமிழ் ஓவியா இப்போது ஒரு உதவி இயக்குனர்!

வாழ்த்துகள் குழுவினர்க்கு.

அடுத்த நிகழ்வு

விதைக்கலாம் சேலம் கிளையை துவக்கிய இனிய செய்தி..

அடுத்த பதிவில்

அன்பன்
மது


Comments

 1. நல்லதொரு நிகழ்வு பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி....

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 2. போற்றுதலுக்கு உரிய முயற்சி

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 3. அனைவருக்கும் வாழ்த்துகள் தோழர்
  த.ம

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 4. ஆவணப் படம் காண ஆவலோடு காத்திருக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 5. மிக அருமையான விஷயம் ..நூல்களை பற்றி ஐயா பேச ஆவணப்படமாக காண ஆவலாக இருக்கு

  ReplyDelete
 6. மிகப் பெரிய முயற்சி!! ஆவணப் படத்தைக் காண வெயிட்டிங்க்!!

  ReplyDelete
 7. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...