பாஸ்ட் அண்ட் பியூரியஸ் எட்டு மீண்டும் ஒரு பதிவு fate of the furious 8

என்னதான் ஹாலிவுட்டே ஆனாலும் படைப்பாளிகள் சில வார்ப்புகளை தொடர்ந்து பயன்படுத்திவருகிறார்கள்.



பல வசதிகள் இருக்கிறது. ஷேக்ஸ்பியர் காலத்தில் ஒருவனை மிக மோசமான மனிதன், சுயநலவாதி, வட்டிக்காரன் என்று நீட்டி முழக்காமல், ஒரே வார்த்தையில் அவன் ஒரு யூதன் என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.

ஆங்கில அகராதிக்கு நாற்பதாயிரம்  வார்த்தைகளைத் தந்த ஷேக்ஸ்பியர் கூட இதே போல ஒரு வார்ப்பைத்தான் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்.

ஹாலிவுட்டுக்கு கதை செய்பவர்கள்  மட்டும் விதி விலக்கா என்ன?

வின் மற்றும் எல்சா 
சமீபதில் வெளிவந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் தொடரின் எட்டாம் திரைப்படம் இம்மாதிரி ஒரு வார்ப்பில் வந்திருப்பதை கவனிக்கலாம்

லெட்டி
கதையின் நாயகன் வின் டீசல், புஜ பல பராக்கிரமன். ரேஸ் சூரன். பெண்களின் இதயத்துடிப்பு.

இதுவரை ஓக்கே, ஆனால் இந்த டெம்ப்ளேட்டை அப்படியே விரித்துக் கொண்டே போய் ஒரு முக்கோணகாதல் கதையில் நிறுத்துகிறார்கள்.

ஒரு விபத்தில் நாயகன் டொமினிக்கின் (வின் டீசல்) ஆசைக் காதலி லெட்டி மரணமடைய, அவன் மீது இன்னொரு பெண்ணுக்கு காதல் வருகிறது.

டொமினிக் ஒரு மோஸ்ட் வாண்டட் கிரிமினல், ஆனால் அவனை காதலிக்கும்  எலினா எப்.பி.ஐ அதிகாரி!

காதல் வருகிறது.

இதற்கிடையே திடீர் திருப்பமாக லெட்டி மரணமடையவில்லை எனும் தகவல்.

டொமினிக் லெட்டியைத் தேடி மீட்கிறான்.

இந்த புள்ளியில் நம்ம எப்.பி.ஐ அதிகாரி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.

டொமினிக் பழைய காதலியுடன் வாழத் துவங்குகிறான்.

அப்போ நடுவில் வந்த எலினா?

அவளை போட்டுத் தள்ளி அவளுக்கு பிறந்த "ஆண்" குழந்தையை மட்டும் மீட்டு  டொமினிக்கிற்குத் தருவதற்காவே ஒரு கதாபாத்திரம் வருகிறது.

சைபர் எனும் வில்லிதான்!(ஆகா இவள் ஹீரோவிற்கு நல்லதுதானே பண்ணியிருகிறாள், அப்புறம் ஏனப்பா வில்லின்னு சொல்றீங்க? என்றெல்லாம் கேட்கக்கூடாது)

ஆமா, சூப்பர் டூப்பர் ஹிட் தரும் இந்த கதையின் ஆசிரியர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?

புஜ பல பராக்கிரம ஹீரோ பல பெண்களை மணக்கலாம்.


அவனைப் கைது செய்ய வரும் எலீனா அவனை காதலித்து ஒரு பிள்ளையையும் பெற்றுக் கொள்ளாலாம்.

அத்தோடு அந்தப் பாத்திரம் செத்துப்போக வேண்டும்...


எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.


நான் கதையின் இந்தப் பகுதியை அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையின் வெளிபாடு என்றே கருதுகிறேன்.


சமூகத்தை ஒரு வார்ப்பில் தள்ளும் பணிதானே இது.


டெம்ப்லேட்கள் பயன்படுத்த எளிமையாக இருக்கலாம், ஆனால் உளவியல்  ரீதியாக டெம்பிளேட்கள் அனுப்பும் சமூக சிந்தனைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.


ஏண்டா டேய் இதில என்ன தப்பைக்கண்ட என்போருக்கு

மேற்கண்ட வார்ப்பில் ஆண் கதாபாத்திரங்களில் இடத்தில் பெண்களையும், பெண்கள் இடத்தில் ஆண்களையும் வைத்துப் பார்த்தால் புரியும்.

அப்படி ஒரு பியூரியஸ் படம் வந்திருந்தால் அதற்கு நம்ம ஆட்கள் நீலப்படம் என்றுதான் தலைப்புத் தந்திருப்பார்கள்.


டெம்பிளேட்கள் பயன்படுத்த சுலபமானவையாக இருக்கலாம், ஆனால் அவை அனுப்பும் செய்திகள் ஆபத்தானவை.

மீண்டும் சநதிப்போம்,

அன்பன்
மது


Comments

  1. வேறு கோணம் ஆனா சரிதான்

    ReplyDelete
  2. -----ஷேக்ஸ்பியர் காலத்தில் ஒருவனை மிக மோசமான மனிதன், சுயநலவாதி, வட்டிக்காரன் என்று நீட்டி முழக்காமல், ஒரே வார்த்தையில் அவன் ஒரு யூதன் என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.----

    உண்மைதான். யூத வெறுப்பு ஐரோப்பா முழுவதும் இருந்தது. ஆனால் ஹிட்லர் மட்டும் மாட்டிக்கொண்டார் வரலாற்றில்.

    படம் பார்க்கவில்லை. ஆகவே சொல்வதற்கு எதுவுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி இசைக் காதலரே

      Delete
  3. அதை ஒரு கமர்ஷியல் உத்தியாக மட்டும்தான் பார்க்கிறார்கள். அதில் இருக்கும் பின்விளைவுகளை இங்கு யாரும் கண்டுக்கொள்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆம், நண்பரே, வருகைக்கு நன்றி

      Delete
  4. Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  5. தொ கா தொடர்கள் பலவும் இந்த வார்ப்பில்தான் வருகின்றன !சிந்திக்காமல் இந்த சீரழிவுத் தொடர்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் :)

    ReplyDelete
  6. ஆணாதிக்க சிந்தனைதான் உலகம் முழுக்க பரவியிருக்கிறதே! இதில் ஹாலிவுட் படங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? நம் பார்வைக்கு அவர்களின் காதலும் சென்டிமென்டும் வினோதமாக காட்சியளிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா ரசிகரே

      Delete
  7. நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள் மது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete

Post a Comment

வருக வருக