ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது

புதுகையில் செயல்பட்டு வரும் ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அய்யா திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்நாள் நூல்கள் சேகரிப்பு.வெறும் சேகரிப்பாளராக மட்டுமில்லாது அத்துணை நூற்களையும் பயின்று அவை குறித்து விரிவாக உரையாடவும் செய்வார்.

இவரது நூலகத்தைப் பார்க்க வரும் வி.ஐ.பி களின் எண்ணிக்கை சொல்லில் அடங்காது. கடந்த முறை நான் சென்றிருந்த பொழுது மாவட்ட நீதிபதி அங்கே இருந்தார்!

சமீபத்தில் தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் வந்திருந்து ஐநூறு நூல்களை கொடையளித்துவிட்டு சென்றார்.இந்நிலையில் செவ்வாய்க் கிழமை (24/04/2017) அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதினை பெற்றிருக்கிறார் அய்யா.

அவரது ரசிகர் திரு. செல்வராசு அவர்கள் அவர்களை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

திரு.உதயச்சந்திரன் அவர்களின் பொறுப்பில் நிகழ்ந்த தேர்வு இது. எந்த சிபாரிசோ, பின்னணி லாபிகளோ இல்லாமல் நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட விருது இது.

மகிழ்ச்சிதான்.


Comments

 1. மகிழ்ச்சியான விடயம்
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 2. பாராட்டுக்குரியவரைப் பாராட்டியதைப் பாராட்டியதற்கு நன்றி. பாராட்டுவிழாவில் பார்ப்போம் வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா

   Delete
 3. ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 4. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்தான் இவர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி மைத்துனரே

   Delete
 5. மகிழ்ச்சி தந்த செய்தி..... ஐயாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 6. வாழும் போது கௌரவிக்கப் பட்டுள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி !உறுதுணையாய் திரு ,உதயச் சந்திரன் அவர்களுக்கு நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நகைப்பணிச் செம்மலே

   Delete
 7. வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...