சர்வ வல்லமை பொருந்திய தலையாரிகள்


விசித்திர தலையாரிகள்
(ஒரு கற்பனைச் சம்பவம்)

தலையாரிப் பதவி என்பது மதிப்பிற்குரியது. ஊரில் எழும் பிரச்சனைகளை லாவகமாக தீர்ப்பது தலையாரிகளின் வேலை.
பல தலைமுறைகளாக தலையாரிகள் அற்புதமாக பிரச்சனைகளைக் கையாண்டு வந்தார்கள்.

அவர்களின் செயல்பாடு அறம்சார்ந்து இருந்ததால் அவர்கள் போற்றப்பட்டனர்.

காலங்கள் ஓட தலையாரிகள் தங்கள் சமூக செல்வாக்கை பல்வேறு வகைகளில் பொருளாகவோ, பணமாகவோ மாற்றிக்கொள்ளத் துவங்கினர்.

வினோதத்திலும் வினோதமாக ஒரு சம்பவம் நடந்தது.

ஊரில் புகுந்த திருடனை பிடித்த இளைஞர்கள் அவனை தலையாரியிடம் ஒப்படைக்க அவரோ திருடனை விடுதலை செய்துவிட்டு பிடித்தவன் தவறு செய்துவிட்டான் என்று எச்சரிக்க ஊரே டரியல் ஆனது.

இந்தக் கொடுமை போதாதென்று திருடனைப் பிடித்த இளைஞர்கள் வீட்டில் அன்று இரவு களவும் போக தலையாரியைக் கண்டாலே தெறிக்க ஆரம்பித்தனர் மக்கள்.

பக்கத்து வீட்டை பட்டா போட்டவனுக்கு அந்த வீட்டை சட்டப்படி மீட்டுக் கொடுத்தது, குளங்களில் மென்பொருள் நிறுவனங்கள் துவக்கி அந்நியச் செலவாணியை உயர்த்தியது என தலையாரியின் புகழ் வளர்ந்து கொண்டே போனது.

ஒருமுறை ஒரு ஓட்டல்காரர் பிராது கொடுத்தார்.

அதாவது அவர் ஓட்டலின் முன்னே மக்கள் சும்மா சும்மா நடந்து வணிகத்துக்கு இடையூறு செய்வதாகவும், எனவே நடப்பவர்கள் ஓட்டலுக்கு பத்து ரூபாய்கள் தர வேண்டும் என்பதாக கோர, அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டார் தலையாரி.

இன்னொரு முறை இரயில் நிலையத்தில் பிளாட்பாரம் கூட்டிக் கொண்டிருந்த ஒருவர் பயணிகள் வருவதால்தான் குப்பை பெருகுகிறது எனவே இரயில்களே வரக்கூடாது என பிராது கொடுக்க

சர்வ வல்லமை பொருத்திய தலையாரி சொன்னார் "அப்படியே ஆகட்டும்"

தலையாரிகள் வாழ்க (வேறு யாரும் என்மீது பிராது கொடுக்காமல் இருக்கட்டும்)

அன்பன்
மது

Comments

  1. நல்லதொரு பகிர்வு.

    ரயிலே வரக்கூடாது!

    இப்படியும் நடக்கலாம்...

    ReplyDelete
  2. இந்த தலையாரி சர்தார்ஜிக்கு சொந்தம்போலிருக்கே :)

    ReplyDelete
  3. படிக்க வந்த என்மீது பிராது வராமல் இருக்கட்டும்
    த.ம.

    ReplyDelete

Post a Comment

வருக வருக