வனமகன்- ராஜசுந்தர்ராஜன்


நாயகியின் முகச்சாயல் எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது. எங்கே யாரிடம் என்று மூளையைக் குடைந்ததில் சில காட்சிகள் கடந்துவிட்டன. விட்டுவிட்டோமே என்று வருந்துவதற்கு இல்லை.


‘பேலியோ’ உணவுமுறை வழிபற்றுபவன் நான். ஒரிஜினல் பேலியோ. அதாவது இறைச்சி, முட்டை இன்னின. இது எனக்கு சலிக்கவே இல்லை. பேலியோ விளம்பரதார் சொல்வதும் உண்மைதான் போலும். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றும் தொடரும் பயிர்விளை உணவுகள் இன்னும் நம் மரபணுக்களில் பதிவேறவில்லை. ஆதிகாலத்து வேட்டையுணவுக்கான ஏக்கம் ஆழப்பதிந்து இருக்கிறது. தாய்தந்தை சொல்லி, சாமி பாரு! கும்பிடு! எனக் கும்பிட்டுக்கொண்டு வந்த நாம், திருநீறா? குங்குமமா? தேவையில்லை எனத் தெளிந்து, உள்ளங்கை அழித்த பிறவிநாள் நெற்றியோடு திரிகிற விடுதலை உணர்வு, அரிசி/கோதுமை விலக்கப்பட்டு ஆடுகோழிக்கு மீள்வதிலும் கிடைக்கிறது.

ரோக்கோ (Rocco) எனும்பெயர் நீலப்பட நடிகர் ஒருவர் இருக்கிறார். நீளம்வண்ணம் பாரிய ’அது’ அவர்க்கு. அவர் நடித்த ”டார்ஜ்ஸான்” நீலத்தையும் பார்த்திருக்கிறேன். நாயகி இந்தியப்பெண் என்கிறார்கள். ஆனால் ’லத்தினோ’ என்றெனக்கு ஐயம். இருக்கட்டும், இரண்டும் தொன்மையோடு தொடர்புடையனதாமே? நாகரிக மாதொருத்தி தொன்மைநாயகனோடு தொடுப்புக்கொண்டு அவனில் திளைக்கிற கதைதான் எல்லாம், “ஜார்ஜ் ஆஃப் த ஜங்கிள்” உட்பட. இவற்றில், போ டெரிக் (Bo Derek) நாயகியாக நடித்த படமே எனக்குப் பிடித்தம். ரோக்கோ நடித்தது? அது பிடிக்காவிட்டால் நாம் ’மூன்றாம்பால்’ ஆகக்கூட லாயக்கில்லை.

“வனமகன்” படமும் அதே கதைதான். கூடவே, இயற்கை வளத்தை அழித்தலுக்கு எதிரான கருத்துள்ளதும் ஆம். நானறிய, ”எமெரால்டு ஃபாரெஸ்ட்” காலத்திலிருந்து “அவதார்” காலம்வரை இதே கருத்துள்ள படங்களைப் பார்த்திருக்கிறேன். கூடலுக்கு வனமகன் வேண்டுமென்றால் வனமும் வேண்டும்தானே?

புளியமரம் ஒன்றில் பேய் இருக்கிறது என்று சொல்லப்பட்டால், அந்த வழியாகவே அடிக்கடி போகவேண்டும் என்பார்கள். பயம்விட்டுப் போகும். அப்படியப்படி படம் எடுத்துக்கொண்டே அவர்கள் ’ரெயின் ஃபாரெஸ்ட்’டை கொள்ளையடித்தார்கள், யோகா யோகா என்று சொல்லிச்சொல்லி ஆனைபுழங்கு காட்டை ஆதியோகி ஆட்டையைப் போட்டது போல. ஆதலால், இதை சத்தீஸ்கர் பிரச்சனைக்கு நீட்டப்போவதில்லை.

இயக்குநர் விஜய் ஓரளவுக்கு நல்லபடம் எடுப்பார் என்று போனால், இடைவேளை மூத்திரக்கோப்பையில் கழுத்தறுபட்ட ரத்தமே வழிந்தோடுகிறது. இடைவேளைக்கு அப்புறம் மோசமில்லை. வேலராமமூர்த்தி வனராஜாவாக வரும் ஃப்ளாஸ்பேக் பகுதிதான் உள்ளதில் சிறப்பு. அந்தப் பெண்குழந்தை காட்டில் தவறுவது நல்ல தொடுப்பு.

ஹாரிஸ் ஜெயராஜ்க்கு ஐம்பதாவது படம் என்று அறிவித்து, அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அதில் ”டங்காமாரி ஊதாரி” போல இதில் காட்டுக்குத்தோதான ஒரு பாட்டுப்போட்டிருக்க வேண்டாவா? அருகிலிருந்த ஒருவர் பெரிய இசைரசிகர் போலும், அத்தனை பாட்டுகளுக்கும் எழுந்து ‘ஒன்னு’க்குப் போனார். அப்புறம்?

அப்புறம், மஞ்சுளா மகள் ஸ்ரீதேவி, மலையாள நடிகை லக்ஷ்மி கோபாலஸ்வாமி, தெலுங்கு/தமிழ் அனுஷ்கா ஷெட்டி, ஹிந்தி நடிகை காத்ரீனா கைஃப் எனப் பல முகச்சாயல்களை நினைவெழுப்பிய இப்படத்து நாயகியின் முகம்போன்றே கதையும் காட்சிகளும்.


Comments

  1. விமர்சனம் நன்று முடிவில் பார்க்கலாமா ? என்பதை சொல்லவில்லையே..... தோழர்
    த.ம.1

    ReplyDelete
  2. உள்ளது உள்ளபடி விமர்சனம் செய்திருக்கிறீர்கள் நண்பரே
    நன்றி
    தம 1

    ReplyDelete
  3. அப்போ பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  4. பர்மா பஜாரில் வாங்கிய சைனா புலியை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்கள் இந்த படத்தை பார்த்து தலை வலி வந்தது தான் மிச்சம் நல்ல நடிகரின் எதிர்காலம் எண்ணெய் தீர்ந்த அகல் விளக்கை போல் காட்சி அளிக்கிறது நல்ல இயக்குனர்கள் அவரை காப்பாற்றுவார்களாக !!!!

    ReplyDelete
  5. விமர்சனம் கண்டேன். பெரிய ரசிகர் பாட்டுக்கு வெளியே சென்றவிதம் ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக