கரண்டைக் கையில் பிடிப்பது எப்படி ?

சிடுமூஞ்சி குமார் சிரிச்ச மூஞ்சி குமராக மாற முடியுமா?

ரூல்ஸ் ராமானுஜம் ரெமோவாக முடியுமா?

நெல்லு சோறு சாப்பிடும் தென்னிந்திய நடிகர்கள் சிக்ஸ் பாக்ஸ் வைக்க முடியாது என்ற எண்ணத்தை அடித்துத் தகர்க்க சூர்யா செய்தது என்ன என்று பார்த்தாலே நமக்கு பதில் கிடைத்துவிடும்.

ஆர்வம், டயட்டிங், விடாத உடற்பயிற்சி, சிலமாதங்களில் சிக்ஸ் பாக்ஸ்.

கண்ணுக்கு தெரியும் தசைகளை நம்மால் கட்டமைக்க முடியுமென்றால், அதே கவனத்தை நமது மனப்பழக்கங்களில் காட்டினால் நிச்சயம் சாத்தியமே.

யோவ், மனப்பழக்கமா என்று குழம்ப வேண்டாம்.

சிலர் பேசும் பொழுது தோள்பட்டையை உயர்த்தி தாழ்த்துவார்கள்.

சிலர் ஒரு புருவத்தைமட்டும் மேலே ஏற்றி இறக்குவார்கள்.

இன்னும் சிலர் விரல் வித்தைகளைக்காட்டி நம்மை மிரட்டுவார்கள்.

இவையெல்லாம் வெளியில் தெரிகிற பழக்கங்கள்.

இவற்றைப் போலவே வெளியில் தெரியாத பழக்கங்கள் இருக்கின்றன.

மனப்பழக்கங்கள்.

என்னால முடியாது.

என்னால ஏன் முடியலேன்னா என்று காரணத்தைக் கண்டுபிடிப்பது,

நமக்கு எதுவும் செட்டாகாது, இப்படி வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே  ஒலிக்கும் குரல்கள் ஒரு மனிதனை எரித்துத் தின்றுவிடும்.

இவை அபாயகரமான மனப்பழக்கங்கள்.

தெரியாத வரை ஒன்றும் பிரச்னை இல்லை, இப்போ தெரிந்துவிட்டது என்ன செய்வது.

ஒவ்வொருமுறை இந்த எண்ணங்கள் மனதில் எழும் பொழுதும் விழிப்புடன் இருந்து அவரை நேர்மறை எண்ணங்களாக மாற்றிக் கொள்வதுதான்.

என்னால் முடியாது என்கிற எண்ணம் வருவதை உணர்ந்தால்

அப்டீன்னா வேற யாரால முடியும் என்று கேட்டுவிட்டு முயற்சி செய்தால் அதுவரை சவாலாக தெரிந்த விஷயங்கள் கூட எளிதாக தெரியும்.

வாழ்வு மலரும்.

தொடர்வோம்.

அன்பன்
மது

http://www.malartharu.org/2017/07/learn-to-be-happy.html

http://www.malartharu.org/2017/07/be-positive.html

http://www.malartharu.org/2017/07/say-cheese.html
Share on Google Plus

About Kasthuri Rengan

  Blogger Comment
  Facebook Comment

6 comments:

 1. உண்மை தோழர் சூழலுக்கு தகுந்தாற்போல் மனதை மாற்றி வாழ்கிறோம் அதுபோல் இதுவும் சாத்தியமே....
  த.ம

  ReplyDelete
 2. அப்டீன்னா வேற யாரால முடியும்....யோசிக்க வைத்த கேள்வி :)

  ReplyDelete
 3. நல்ல தன்னம்பிக்கை உந்துசக்தி....தொடரா?! ...தொடர்கிறோம்

  ReplyDelete
 4. எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால்.....

  சிறப்பான பகிர்வு மது. பாராட்டுகள்.

  ReplyDelete
 5. அருமையான நேர்மறைப் பதிவு. இதுபோன்ற எண்ணம் நம்மை மேம்படுத்தும்.

  ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...