ச்சீஸ்ஸ்ஸ் சொல்லுங்கள்


சீஸ் காமிராவிற்கு முன்னர் சொல்லப்படும்பொழுது முகங்கள் புன்னகைக்கிற பாவத்தில் வரும் என்பதால் ஷட்டர் பட்டனை அழுத்தும் முன் பொதுவாக எல்லோரும் சொல்லும் வார்த்தை. 

வில்லியம் ஜேம்ஸ் மனிதர்களின் உடல் செயல்பாடுகள், சிந்தனையை ஆதிக்கம் செலுத்தும் என்று சொல்ல அதற்கு பிறகு வந்த உளவியலாளர்கள் அது எப்படி என்று ஆய்ந்து பார்க்க விழைந்தார்கள்.


ஒரு ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் வாலன்டியர்களை சீஸ் என்கிற  வார்த்தையை சொல்லச் சொன்னார்கள். சிலநாட்களுக்கு பிறகு  சீஸ் என்று சொல்லும் குழுவின் மனஅழுத்தம் குறைவாக இருப்பதை ஆய்வுகள் சொன்னது. 
இன்னொரு  பல்கலைக்கழகத்தில் மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, பென்சில் ஒன்றை வாயில் வைத்துக் கடிக்கச் சொன்னார்கள். விளைவுகள் ஆச்சர்யமாக இருந்தன. அவர்களின் மன அழுத்தம் குறைந்திருந்தது. 


சீஸ், சொல்லும் பொழுது முகத்தில் என்ன நிகழ்கிறது  என்பதைப்  பார்த்தால் புரியும். சீஸ் என்கிறபொழுது முகத்தின் தசைகள் புன்னகையின் பொழுது இருப்பது போல மாறுகின்றன.

தசைகளோடு பிணையப்பட்ட நரம்புகள் மூளைக்கு பார்ட்டி சிரிக்கிறான் என்கிற செய்தியை   அனுப்புகின்றன. மூளை உடன் கார்டிசால் கண்றாவியை நிறுத்திவிட்டு செரோடோனினை சுரக்க  ஆரம்பிக்கிறது.

கார்டிசால் என்கிற ஹார்மோன் என்ன செய்யும் என்றால் மனஅழுத்தத்தில் இருக்கும்  ஒருவரின் மனதில் அவர் அதுவரை வாழ்நாளில் அடைந்த அவமானங்கள், தோல்விகள், வலிகள் அத்தனையும் நினைவூட்டும்.

பார்ட்டி பணால். இதே நிலை சில நாட்களுக்குமேல் தொடர்ந்தால் டிப்ரஷன் நிலைக்கு சென்றுவிடுவார்கள். மீட்க சிகிச்சை தேவைப்படும்.

ஆனால், சீஸ் சொல்கிற பொழுது என்ன நடக்கிறது என்றால் கன்ன தசைகள் சம்பந்தமே இல்லாமல் இவன் சிரிக்கிறான் என்கிற செய்தியை மூளைக்கு அனுப்ப கார்டிசால் சுரப்பு மட்டுப்பட்டு, செரோடோனின் சுரக்க ஆரம்பிக்கிறது.

செரோடொனினுக்கு இன்னொரு பெயர் ஹாப்பி ஹார்மோன்.

செரோடோனின் மனதை இலகுவாக்குகிறது. நம்பிக்கையைத் தருகிறது. பிரச்சனைகளை அணுக நல்ல மனநிலையைத் தருகிறது. அதோடு வாழ்வின் ஆசீர்வதிக்கப்பட்டதருணங்களை நினைவு கொணர்கிறது.

எங்கே இன்னொருமுறை ஒரு நீஈளமான சீஸ் சொல்லுங்கள் பார்க்கலாம்.

சீயீயீஸ்ஸ்
சிரமமாக இருக்கிறதா ஒரு பென்சிலை கவ்வுங்கள்.

தொடர்வோம்
அன்பன்
மது





Comments

  1. நன்று! த ம 3

    ReplyDelete
  2. அதான் கஸ்தூரி....சிரிப்பே மருந்து!!! வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்னு சும்மாவா சொன்னாங்க!!!

    அருமை!!!

    கீதா

    ReplyDelete
  3. சீஸ்! என்றும் மகிழ்ச்சியைத் துணை கொள்வோம்...

    நல்ல பகிர்வு. பாராட்டுகள் மது.

    ReplyDelete
  4. Anonymous1/8/17

    Good information!

    ReplyDelete

Post a Comment

வருக வருக