முத்தலாக் தீர்ப்பு சரிதான், ஆனால்


நான் பெரிதும் மதிக்கிற நேசிக்கிற கவிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தீர்ப்பு ஒன்றை கொண்டாடியிருந்தார். 

பெண் என்பதால் பெண்களின் மௌன அலறலை என்னைவிட நுட்பமாய் புரிந்துகொள்ளவும் கூடியவர்.
எனவே இஸ்லாமிய சகோதரிகள் பலரின் வாழ்வை அழித்த, பலிகொண்ட முத்தலாக் விசயத்திற்கு எதிரான தீர்ப்பை கொண்டாடியிருந்தார்.
கையை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம், அவருடைய இற்றையில் சென்று இதே நிலைப்பாட்டை தீர்ப்பு வழங்கும் அதிகாரிகளும், நிறுவனங்களும் தலித் அர்ச்சகர் விஷயத்தில் காட்டலாமே என்றேன்.
என் அலைபேசியில் தமிழ் உள்ளீடு இல்லாததால், ஆங்கிலத்தில் சொல்லியிருந்தேன்.
அவர் என்னை அழைத்து மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடலாமே, பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுக்கு வடிகாலாக வைத்திருக்கிறதே இந்த தீர்ப்பு என்றார்.
நான் சொல்லியிருந்த கோணத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் கொஞ்சம் வருத்தம்தான் அவருக்கு.
நான், இந்த தீர்ப்புக்கு எதிரானவன் அல்ல.
என் நட்பு வட்டத்தில் இருக்கும் தோழர்.சாதிக், தோழர், ரபீக், பெரியவர். ஷாஜகான் போன்றோரே கொண்டாடும் தீர்ப்புதான் இது.
எனக்கு என்ன புகைச்சல்.
இசுலாமிய மதக் கோட்பாடுகளை, காலத்தின் தேவை அடிப்படையிலும், மனிதத்தின் அடிப்படையிலும் திருத்தியிருக்கும் இந்த உச்ச தீர்ப்பு வழங்கும் அலுவலகம், அதே நோக்கில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் தலித் அர்ச்சகர்களின் பணி உரிமை குறித்து இதே நிலைப்பாட்டை ்கொள்ளுமா?
முடியுமா?
கேள்வி இரண்டு.
சமீபத்தில் நடந்து முடிந்த வடமாநில தேர்தல்களில் இஸ்லாமியக் குடும்பங்களின், சகோதரிகளின் வாக்கு பி.ஜே.பிக்கு விழுந்ததற்கு காரணம் இந்த அறிக்கைதான், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தீர்ப்பு வந்திருப்பதாக நான் கருதுகிறேன். இனி இஸ்லாமிய பெண்கள் அநேகரின் வாக்கு பி.ஜே.பிக்கு உறுதியாக்கிருக்கிறது.
இது ஒட்டு சேகரிக்கும் தீர்ப்பு என்று நான் சொல்ல காரணமும் இதுதான்.
அடுத்த வீட்டுக்கு பஞ்சாயத்து பண்ணி தீர்ப்பு சொன்ன நாம், நமது மதத்தை எப்போது அதே ___,___ அறிவியல் கண்ணோட்டத்துடன் சீரமைக்கப் போகிறோம்.
இதுகுறித்த வழக்கின் பொழுது இந்த உச்ச தீர்ப்பு வழங்கும் அலுவலக, அலுவலர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கிற பொழுது நமது அமைப்பில் ஊடுருவியிருக்கும், ஊறிப் போயிருக்கும் சாதிய அடிமை முறையும், அது செயல்படுகிற நரித்தந்திர வித்தைகளும் புலனாகிறது.
கூடுதலாக ஒரு தகவல்...
காஞ்சி சங்கராச்சாரியார் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றபொழுது, மிக அமைதியாக அப்படியென்றால் தந்தை மொழி தமிழ் என்ற வள்ளலார் பெருமகனார், பின்னர் செய்த வேள்வியில் ஜோதியோடு ஐக்கியமான பொழுது, விசாரிக்க விரும்பிய வெள்ளை அரசாங்கத்திடம் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா "இது எங்கள் மதத்தின் உள் விவகாரம், ஒப்பந்தப்படி நீங்கள் இதற்குள் வந்து விசாரிக்கும் உரிமை இல்லை"
அன்று மட்டுமல்ல என்றுமே இதுதான் நம் நிலைப்பாடு.
நிலைப்பாடுகள் மாறவேண்டும் என்றால் கருவறைத்தீண்டாமை அறவே தவிர்க்கப்படவேண்டும்.
சரிதானே அக்கா ?

Comments

  1. முத்தலாக் தீர்ப்பு சரிதான்.... ஆனால் உங்களால் தான் ஏற்று கொள்ள முடியவில்லை. இஸ்லாமிய பிற்போக்கு மதவாதத்திற்கு முட்டு கொடுக்க காரணம் தேடி திரிகிறீர்கள்.

    ReplyDelete
  2. //காஞ்சி சங்கராச்சாரியார் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றபொழுது மிக அமைதியாக அப்படியென்றால் தந்தை மொழி தமிழ் என்ற வள்ளலார் பெருமகனார் பின்னர் செய்த வேள்வியில் ஜோதியோடு ஐக்கியமான பொழுது விசாரிக்க விரும்பிய வெள்ளை அரசாங்கத்திடம் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா "இது எங்கள் மதத்தின் உள் விவகாரம் ஒப்பந்தப்படி நீங்கள் இதற்குள் வந்து விசாரிக்கும் உரிமை இல்லை"
    அன்று மட்டுமல்ல என்றுமே இதுதான் நம் நிலைப்பாடு.//

    முற்காலத்தில் நடந்த தவறை உதாரணமாக இங்கே கொண்டுவருகிறீர்கள். அது கூட அந்நியன் வெள்ளை அரசாங்கத்திடம் இந்தியர்கள் தெரிவித்தது. அதையே தலாக் தெரிவிப்பவர்கள் இஸ்லாமிய மதவாதிகள், இது எங்கள் மதத்தின் உள் விவகாரம் நீங்க இதில் தலையிட முடியாது என்று தனது நாட்டின் இந்திய அரசிடம் தெரிவிக்க முடியாது.
    தனது நாட்டில் இஸ்லாமிய மதவாத தலாக் முறையினால் பாதிக்கபடும் இஸ்லாமிய பெண்களை பாதுகப்பது இந்திய அரசின் கடமை.
    வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வந்து இஸ்லாமிய பெண்கள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்ரேலியா நாடுகளை போன்று இந்தியாவிலும் பாதுகாப்பாக வாழும் நிலை உருவாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. அருமையாக அலசியுள்ளீர்கள் தோழரே
    த.ம.

    ReplyDelete

Post a Comment

வருக வருக