ஏன் இடைவெளிகள் ?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இடைவிடாது இயங்கிய தளம்.

இப்போது அந்த வீச்சும் விரைவும் குறைந்திருக்கிறது.



குடும்பச் சூழல் ஒருபுறம் என்றால் முகநூல் இன்னொருபுறம்.

சில விசயங்களை இப்போது செய்தால்தான் முடியும் என்கிறபொழுது அதை அவசியம் செய்துவிடவேண்டிய கடமை இருக்கிறது.

இளையவள் மகிமா, ரொம்பவே வித்யாசமானவள்.

இரண்டு ஆண்டுகளு முன்புவரை காலை எழுந்திருக்கும் பொழுது சிரித்துக்கொண்டே எழுவது அவளது வழக்கமாக இருந்தது.

சில காரணங்களால் அம்மா ஒரு வருடம் சென்னையில் வடபழனியில் தங்க நேரிட்ட பொழுது மகிமாவின் இந்தப்பழக்கம் தலைகீழாக மாறிவிட்டது.

காலைப்பொழுதுகள் அவள் அடம்பிடித்த அழுகுரல்களால் நிரம்பியது.

நண்பர் குமாருடன் பேசியபொழுது அவளது பள்ளி நண்பர்களின் பெயரைச் சொல்லி எழுப்புங்கள் என்றார்.

நன்றாக ஒர்க்கவுட் ஆனது. ஆனால் எந்தப்பணியையும் மிக மெல்ல செய்யவதில் இருந்து மாறவில்லை.

அந்தகாலட்டத்தில் அடியேன் ஷட்டில்காக் பயிற்சியில் இருந்ததால் அதன் நேரடிப் பலன்களை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.

நாள்முழுதும் எனர்ஜியோடு வைத்திருக்கும், சுறுசுறுப்பைத் தரும் வல்லமை அதற்கு இருந்ததை உணர்ந்தேன்.

மாலை ஆறுமணி முதல் ஏழு மணிவரை மகிமாவிற்கான ஷட்டில் வகுப்பை ஏற்பாடு செய்தேன். இரண்டு மாதங்களில் நல்ல முன்னேற்றம். இப்போ சுறு சுறு மகி!

ஆகா காலை முகநூல் என்றால், மாலை மகிமாவின் வகுப்புகள். எனவே வலைப்பூவிற்கான நேரம் குறைந்துவிட்டது.

சரிசெய்துகொண்டிருக்கிறேன்.

மீண்டும்
சந்திப்போம்

அன்பன்
மது

Comments

  1. நேரம் இருக்கும்போது வாருங்கள். சந்திப்போம், எழுத்தின் வழியாக.

    ReplyDelete
  2. தொடர்ந்து வாருங்கள்நண்பரே

    ReplyDelete
  3. கஸ்தூரி முதலில் குடும்பம்....குழந்தைகள்...அப்புறம் வலைத்தளம்...எனவே நேரம் உங்களுடன் ஒத்துழைக்கும் போது வாருங்கள் பதிவுகள் தாருங்கள்.

    ReplyDelete
  4. நன்றி. மீண்டும் வருக.

    ReplyDelete
  5. வணக்கம் சகோ, நலமா ?

    என் வலைப்பூவின் நிலையும் இதே தான் !

    ஒரு சமூகத்தின் சீர்திருத்தம் ஒரு குடும்பத்திலிருந்துதான் ஆரம்பமாக முடியும் ! சில தனிமனிதர்களின் குழு குடும்பம் என்றால், பல குடும்பங்கள் சார்ந்ததே சமூகம். குடும்பத்துக்கான நேரம் அத்யாவசியமான ஒன்று.

    நேரம் கிடைக்கும் போது வாருங்கள் நண்பரே.

    நறியுடன்
    சாமானியன்

    எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
    https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

    ReplyDelete
  6. எனக்கும் அப்படித்தான்... கவலைகளும் வலிகளும் வேதனையும் கலவையாய்...
    அதிகம் வரமுடிவதில்லை... இருப்பினும் எப்போதேனும் ஒரு பகிர்வோடு இருப்பை தக்க வைக்கிறேன்...
    நேரம் இருக்கும் போது வாருங்கள் மது சார்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக