இனி ஏற்றம் பெரும் தமிழ் வலைப்பூ உலகம்


எழுதினால் பணம்.


உங்கள் வலைப்பூவை வாசகர்கள்  பார்வையிட்டால் உங்கள் வங்கிக்கணக்கில் பணம்.



இது எப்படி என்கிறீர்களா?

கூகிள் திட்டம் ஒன்று இருக்கிறது.

கூகிள் ஆட்ஸ்ன்ஸ் என்றபெயரில்.

நமது வலைப்பூவில் நாம் என்ன எழுதியிருக்கிறோம் என்று பார்த்து அதனை ஒட்டிய விளம்பரங்களை நமது வலைப்பக்கத்தில் காட்டி அதற்கு அந்த நிறுவனங்களிடம் பணம் பெரும் கூகிள். பெறுகிற பணத்தில் ஒரு கட்டிங் பதிவருக்கு கிடைக்கும்.

செமை இல்லை.

ஒரு விபத்திற்கு பின்னால் மீண்டு வந்திருக்கும் திண்டுக்கல் தனபாலன் அண்ணாவிடம் பேசிய பொழுது சில பதிவர்கள் சில லட்சங்களை மாதம் தோறும் பெறுகிறார்கள் என்றார்.

மகிழ்ச்சி.

தமிழில் காத்திரமாக எழுதிக்கொண்டிருக்கும் பதிவுலக ஆளுமைக்கு வாழ்த்துகள்.

இதற்காக ஒரு பெரும் குழு இயங்கியிருக்கிறது. அவர்களுக்கு நன்றிகள்.


அநேகமாக தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களில் முதல் அலையில்  எழுததுவங்கி பிறகு தடம்மாறி, ஒருவழியாக மீண்டும் மலர்தருவில் தொடர்ந்து எழுதும் பதிவர் நான்.

என்னுடைய முதல் ஆட்சென்ஸ் கணக்கு ஒரே ஒரு கிளிக்கில் கிடைத்து என்றால் நம்ப மாட்டீர்கள்.

இதைவிட நம்பமுடியாத இன்னொரு விஷயம் அன்றய பிளாக் சேவைகள் யாகூ ஐடிக்கள் மூலமே இயக்கக்கூடியதாக இருந்தன.

இன்றுபோல கூகிள்  கணக்கு தேவையில்லை.

அந்த வலைப்பூக்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றின் கடவுச் சொல்லையும் பயனர் பெயரையும் மறந்துவிட்டேன்.

பிறகு எல்டெக்ஸ் டாட் இன் என்கிற தளத்தை ஒருவருடம் சும்மாவே வைத்திருந்துவிட்டு  மூடினேன்.

பிறகுதான் மலர்த்தரு வந்தது.

முதலில் ஒரு வலைத்தளமாகத்தான் துவங்கினேன். பிறகு வலைப்பூவாக மாற்றிக்கொண்டேன்.

இதற்கு பிறகு டிரான்ப்ரூக் டாட் காம் என்கிற வலைப்பூவை துவக்கினேன்.

ஆங்கிலம் என்பதால் ஆட்சென்ஸ் எளிதாக கிடைத்துவிட்டது.

இன்னும் நிறய பணியாற்றினால்தான்  ஆட்ஸ்ன்ஸ் பலனளிக்கும்.

அந்தக்கணக்கில் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகத்தான் சேர்ந்திருக்கிறது.

ஆட்ஸ்ன்ஸை பொறுத்தவரை நூறு டாலர்கள் சேர்ந்தால்தான் நேரடியாக உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும்.

நூறு டாலர் இலக்கையே இன்னும் நான் அடையவில்லை.

காரணம் எளிது, கவர்ச்சிகரமான எழுத்து இல்லை.

அதிகம் தேடப்படும் விஷயங்கள் குறித்து எழுதுவதில்லை.

மூன்றே விஷயங்கள்தான் முன்னணி.

செக்ஸ், சினிமா, உணவு இது மூன்றையும் அடித்துக்கொள்ள முடியாது.

 ஆக நாம் எழுதக்கூடிய வாய்ப்பைத்தரும் மீதம் இரண்டு தலைப்புகளில் எழுதினாலே போதும்.

ஆட்ஸ்ன்ஸ் குறித்து நிறய படித்த காலங்கள் உண்டு.

ஓவர்ச்சர், ட்ரண்ட் போன்ற தளங்களை ஆராய்ந்தால் எந்த விஷயத்தை அதிகம் தேடுகிறார்கள் என்று கண்டறிந்து அதற்கு நாம் கட்டுரைகளை எழுதமுடியும்.

இம்முறையில் புதிய வாசகர்களை ஈர்க்க முடியும்.

பெரும் அளவிலான வாசகர்கள் நேரடியாக கூகிள் சர்ச் தளத்தில் இருந்து வருவது  ஆர்கானிக் டிராபிக் எனப்படும்.

ஆர்கானிக் டிராபிக் அதிகமாக அதிகமாக தளத்தின் மதிப்பு கூடும்.

இதைத்தாண்டி இன்னும் சில உட்டாலக்கடி வேலைகள் இருக்கின்ற என்கிறார்கள் பட்சிகள்.

சில ஸ்கிரிப்ட்களை இணைப்பதன் மூலம் தளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள்.

இது ஆட்ஸ்ன்ஸ் விதிமுறைகளுக்கு முரணானது.

ஆட்ஸ்ன்ஸ் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

ஆம், சிலர் குறுக்கு வழியில் யோசிப்பார்கள்.

சிபிசி, சிபிஆர் என்ற வழிமுறைகள் இருக்கின்றன.

அதாவது வாசகர்கள் நம் பதிவைப்  படித்துக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் கண்களில் ஆட்ஸ்ன்ஸ் விளம்பரம் தென்பட்டால் ஒரு பைசா போன்ற ஒரு கணக்கீட்டில் உங்கள் அக்கவுண்டில் பணம் ஏறும்.

அதே வாசகர் உங்கள் பக்கத்தில் இருக்கும் விளம்பரங்களை கிளிக் செய்தால்  அதைவிட பத்துமடங்கு பணம் கணக்கில் ஏறும்.

ஓ இம்புட்டுதான் விஷயமா ?

நானே கிளிக் செய்கிறேன் ஆயிரம் தபா என்று கிளம்புவார்கள் கணக்கு  டெலிட் ஆகிவிடும்.

கூகிளின் திறன்வாய்ந்த கருவிகள் இந்த போங்காட்டங்களை கண்டறிந்து  காலிசெய்துவிடும்.

இப்படி நிறய விஷயங்களை பேசலாம்.

பேசுவோம்.

அன்பன்

மது.

நான் இன்னும் தமிழுக்கான ஆட்ஸ்ன்ஸ்க்கு விண்ணப்பம் தெரிவிக்கவில்லை.

குறைந்தது இருப்பது கட்டுரைகளுக்கு பின்னர்தான் விண்ணப்பிக்கவே போகிறேன். 

Comments

  1. //இதைத்தாண்டி இன்னும் சில உட்டாலக்கடி வேலைகள் இருக்கின்ற என்கிறார்கள் பட்சிகள்//

    அவை எவை என்று சொல்லுங்கள். அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

    ReplyDelete
  2. நேரம் கிடைக்கும் இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்...

    ReplyDelete
  3. நல்ல தகவல்! நன்றி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக