ஜூராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம்

ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் இந்தவார ஹாலிவுட் ரிலீஸ், மைக்கேல் கிரிக்டனின் வெற்றிகரமான நாவல் ஒன்றை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஜுராசிக் பார்க் என்று படமாக்க அது புது வரலாறு படைத்தது திரை ரசிகர்கள் அறிந்ததே.இந்த வரிசையில் இது ஐந்தாவது படம்.

இதுவரை இல்லாத வகையில் புதிதாக ஒன்றைச் செய்திருக்கிறோம் தியேட்டரில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இயக்குனர் சொல்ல எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்திருந்தன.

படத்தின் கதை நான்காம் பாகம் முடிந்ததில் இருந்து துவங்குகிறது. கைவிடப்பட்ட ஐல் நேபுலார் தீவில் யாருமின்றி அலைந்து கொண்டிருக்கும் டைனோசர்களை அவற்றின் மரபணு மாதிரிகளை சேகரிக்கிறது ஒரு குழு.  தீவின் எரிமலை ஒன்று வெடிக்கத் துவங்குகிறது. யாரும் கவனம் எடுக்கவில்லை என்றால் தீவின் அத்துணை டைனோசர்களும் எரிந்து போய்விடும்.

கிளைர், தலைமையில் இயங்கும் இன்னொரு குழு டைன்சர்களை காக்க வேண்டும் என்று ஒரு பிரசாரத்தை செய்து வருகிறது. பிரசாரத்துக்கு உதவ லாக்வுட் என்கிற பெரிய கை முன்வர, அவரது அரண்மனையில் அவரை சந்திக்கிறாள் கிளேர்.

லாக்வுட், ஹாமென்ட்டுடன் இணைந்து முதல் ஜுராசிக் பார்க்கை உருவாக்கியவர். லாக்வுட்டின் மேனஜேர் மில்ஸ்  தீவில் இருக்கும் டைனோசர்களை மீட்டு அவற்றை ஒரு பெரும் தீவில் விட்டுவிட விரும்புவதாக சொல்ல கிளேர் தீவுக்கு புறப்பட தயாராகிறாள்.

இறுதியாக மில்ஸ் தீவில் இருக்கு வெலோசிராப்டர் ஒன்றை ஓவன் கிராடியை கொண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்ல, ஓவனை சந்தித்து உதவி கோருகிறாள் கிளேர்.

ஒருவழியாக ஊடல் முடிந்து எரிமலை வெடித்துக்கொண்டிருக்கும் ஐல் நெபுலார் தீவுக்கு செல்கிறார்கள். அங்கே யாரும் எதிர்பாரா விதமாக் ஒரு திருப்பம் நடக்கிறது.

என்னதான் ஆக்சன் படமாக இருந்தாலும், மசாலா படமாக இருந்தாலும் தேர்ந்தெடுத்த இயக்குனர்கள் ஒரு காட்சியையாவது காவியப்படுத்திவிடுவார்கள்.

அப்படி கண் முன்னால் நிற்கும் ஒரு காட்சி இந்தப்படத்தில் இருக்கிறது. ப்ராச்சியோசரஸ் டைனோ ஒன்று வெடித்து பரவும் எரிமலை புகை மூட்டத்தில் பின்னணியில்  நகரும் கப்பலை நோக்கி பரிதாபமாக கதறுவதும், மெல்ல மெல்ல அந்த டைனோ தீக்குளம்பில் கருகுவதும், இரக்கமே இல்லாத வேட்டையர்கள் கூட அதை கையறு நிலையில் பார்ப்பதும்... யாருப்பா அந்த பாயோனா (இயக்குனர்) என்று கேட்க வைக்கிறது.

படத்தில் இயக்குனரின்  கிளாசிக் டச் இந்த காட்சி.

வழக்கம்போல விமர்சகர்கள் சரிபாதி படத்தை கொண்டாட மற்றொரு பிரிவு மோனோடோனஸாக இருக்கிறது என்கிறது.

ஒரு விஷயம் உறுதி, படம் உங்களை ஆகர்சிக்கும். குழந்தைகள் இருந்தால் தவிர்க்க கூடாத படம்.

ஒரு தபா பார்க்கலாம். 

Comments

 1. பார்க்க வேண்டும்...

  ReplyDelete
 2. படம் பார்ப்பதுபோல இருந்தது. நானும் குழந்தையாகிவிட்டேன்.

  ReplyDelete
 3. ஜுராசிக் வேர்ல்ட் - ஐந்தாம் பாகம் வரை வந்து விட்டதா.....

  தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி மது.

  ReplyDelete
 4. அருமையான விமர்சனம்
  நன்றி நண்பரே

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை