விஸ்வரூபம் 2



நாசர் ஒரு நல்ல இயக்குனர் என்பது எத்துனை பேருக்கு நினைவிருக்கிறது என்பது தெரியாது. ஆனால் தென்றல் வந்து தீண்டும் நேரம் என்கிற இசை அற்புதத்தை கேட்கும் பொழுதெல்லாம் நாசர் என்கிற இயக்குனர் நினைவில் வருவார்.
அவருடைய தேவதை என்கிற படத்திற்கு விமர்சகர் ஒருவர் இப்படி எழுதியிருந்தார் “நாசர் சராசரி ரசிகர்களுக்கெல்லாம் படம் எடுக்க மாட்டார் போல..” தேவதை தந்த அடி நாசர் என்கிற இயக்குனரை இயக்கத்தில் இருந்து விடுவித்தது.

எத்துனை முறை அடிவாங்கினாலும் திரும்பத் திரும்ப ஒரே பாணியில் படங்களை கொடுக்கிறார் கமல். த்தா புரிஞ்சா பாருங்கடே இல்லாட்டி போங்கடே என்கிற தொனி தெறிக்கும் படைப்புகள் கமலின் கேரியரில் நிறைய, ராஜபார்வை, குணா எனக்கு நினைவில் இருக்கும் முயற்சிகள்.

குறிப்பாக குணா விவாதம் ஒன்றில் யாருப்பா அந்த அபிராமி என்றால் அந்த போர்ஷன படம் நீளம் என்று வெட்டிவிட்டோம் என்று ரொம்ப கூலாக சொன்னார் . இருக்கப்பட்ட மகராசன் இன்னும் எத்துனை முறைவேண்டுமானாலும் முயற்சிக்கலாம்.
அப்படி ஒரு முயற்சியாகத்தான் விஸ்வரூபம் இரண்டு வந்திருக்கிறது.

படத்தில் என்னைக் கவர்ந்த விசயங்கள் என்றால் முதலில் ஏற்படும் கார் விபத்து, வாய்ப்பே இல்லாத தொழில் நுட்ப உச்சம். கமல் குறித்து முழுமனதோடு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொணர முடியாமல் செய்வது இதுபோன்ற அடைவுகளே. வாய்ப்பே இல்லை.

தம்பி சி.ஜி பார்த்துட்டு இப்படி பினாத்தாதே என்போருக்கு, நான் பார்த்தவரை ஆங்கிலப் படங்களில் கூட இப்படி ஒரு கார் ரோலிங் இல்லை, பாஸ்ட் ஒன்றுமுதல் எய்ட் வரை பார்த்திருக்கிறேன், எம்.ஐ இரண்டில் மலைப்பாதையில் சுழலும் கார்கள், டீனேஜ் மியூடன்ட் நிஞ்சாவில் சரியும் பெரும் டிரக்கிற்கு மேலும் கீழும் ஊடாடும் ஒரு மியூடன்ட் என நினைவில் இருக்கும் அத்துணை கார் சாகசங்களையும் நினைவில் கொணர்ந்தாலும் உச்சியில் நிற்பது விஸ்வரூபம் இரண்டின் கோஸ்வாமி கார் பாய்ச்சல்தான்.

ஹாட்ஸ் ஆப் சொல்ல வேண்டியது இதற்குத்தான்.

இன்னொரு பாத்திரம் ஆண்ட்ரியா ஜெரோமியா நடித்திருக்கும் அஸ்விதா. படத்தை தூக்கி நிறுத்தும் பாத்திரங்களில் ஒன்று. படத்திற்கு படம் வித்யாசம் காட்டி, வேற லெவல் என்பதை நிறுவிக்கொண்டே இருக்கிறார் ஆண்ட்ரியா.

அமர்த்தலான ஸ்க்ரீன் பிரசன்ஸ் சேகர் கபூர், அரட்டல் ராகுல் போஸ் என ஸ்கோர் செய்யும் நடிகர் பட்டாளம்.

பூஜா குமார், எந்தவித தொடர்பும் இல்லாமல் அதீத சிக்கல்கள் நிறைந்த மிஷன்களில் ஈடுபடுவதாக காட்டியிருப்பது சொதப்ஸ்.
இசையில் கிப்ரான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை, அல்லது நான் பார்த்த ஆர்.கே.பி தியேட்டரின் ஸ்பீக்கர் சிஸ்டங்கள் அவுட்டாகிவிட்டதா என்கிற சந்தேகமும் இருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் மக்கள் நீதி மைய்யத்தின் ஒரு ஷோ ரீல் போடுகிறார்கள். இது அறமா என்பதை விட இது நமது கலாச்சாரம் என்று போய்விட வேண்டியதுதான், சிலப்பதிகாரத்திற்கு வசனமெழுதியவர் படம் தொடங்கும் முன்னர் அமர்த்தலாக பேசியதை ரசித்த தலைமுறையின் நீட்சிதானே நாம்.

இந்த ஷோ ரீல் யாரை கவர்ந்ததோ இல்லையோ, அரசு கண்காணிக்கிறது. இடைவேளையில் அரங்கில் நுழைந்து இருக்கைகளை பார்த்துவிட்டு சென்றார் ஒரு வட்டாட்சியர்.

படத்தின் ஒளிப்பதிவு நான் எதிர்பார்த்த நேர்த்தியில் இல்லை. இதை சொன்னால் நம்பச் சிரமாக இருக்கும் ஆனால் என்னுடைய உணர்தல் இது.

படத்தில் ரொம்ப சோதித்தது பூஜா குமார் எல்லா தருணங்களிலும் பேசிய நெடியடிக்கும் பாஷை. என்ன __க்கு இந்த ஸ்லாங்கை விடாமல் பேசுகிறார் என்றே புரியவில்லை. மஹாநதியில் பூர்ணம் விஸ்வநாதனை கலாய்ப்பார், இதில் ஆனந்த் மகாதேவன், “நான் உங்க ஆளே இல்லை” என்று.

வெளியில் பேசப்படா பெரிய விஷயம் என்றால் தேம்ஸ் நதிக்குள் நடக்கும் நீரடி மோதல் உண்மையில் நிலத்தில் படமாக்கப்பட்டது என்கிறார்கள். கில்லர்மோ டெல் டேரா தன்னுடைய தி ஷேப் ஆப் வாட்டர் படத்தில் இந்த முறையை பயன்படுத்துவதற்கு ஓராண்டு முன்னரே விஸ்வரூபம் படத்தில் அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்திவிட்டார் என்கிறார்கள்.

கில்லர்மோ ஆஸ்கர் பெற்றுவிட்டார், விஸ்வரூபம் அத்துணை உழைப்பையும் வாங்கிக்கொண்டும், என்போன்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தும் இறுதியில் ஏமாற்றிவிட்டது.

ஏன் ஏமாற்றம்?

கமலிடம் இருந்து மிக அதிகமாக எதிர்பார்க்கிறோம் வேறொன்றுமில்லை. கதைக்காக இன்னுமே உட்கார்ந்து வேலை பார்த்திருக்க வேண்டும். வஹீதா ரஹ்மான் என்கிற பாத்திரமே தேவையில்லை, இந்த போர்ஷன் முழுக்கவே வாஹீதவிர்கான கமலின் தனிப்பட்ட மரியாதையை செய்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது. குறிப்பாக பக்திபூர்வமாக அவர் காலை கமல் தொட்டு வணங்கும் பொழுது இப்படிதான் தோன்றுகிறது.
திரைக்கதை ஆகப்பெரும் பின்னடைவு, தேவையே இல்லாத பல காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

பல காட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன, தேம்ஸ் நதிக் கரை கோஸ்ட் கார்ட் அலுவலத்தை விட நேர்த்தியாக இருப்பது படத்தில் அங்கு இருப்பதாக காட்டப்பட்ட கழிவறைதான். பட்ஜெட் என்று சொல்விட்டு போய்விட முடியாது.

ஷியர்ன்ஸ் பகுதியில் இப்படி ஒரு கப்பல் பெரும் குண்டுகளோடு மூழ்கிப் போனதை கதையோடு இணைத்திருப்பது வாவ்.
சம்தத் சைனுதீன் ஒரு பெரும் படத்தில் தன்னுடைய கற்றலை மேற்கொண்டிருக்கிறார். இல்லை கமலிடம் பேசி காட்சிக்கோணங்களை சரியாக வைக்க முடியாமல் போனதா? ஒளிப்பதிவு மிகப் பெரிய பின்னடைவு.

முதல் பாகத்தை வெளியிடும் பொழுதே இந்தப் பாகத்தின் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அவற்றை வீணாக்காமல் பயன்படுதியிருக்கிறார்கள்.

ஒமாரிடம் உன் குழந்தைகளை டாக்டருக்கு படிக்க வை, என்ஜினியருக்கு படிக்க வை என்று கமல் சொல்கிற பொழுது தியட்டரில் ஒரே கோரசாக கோஷம்.

டாக்டருக்கு படிக்க வை ஆனா என்ஜினியருக்கு மட்டும் படிக்க வச்சுராதே...

கமலஹாசன் எத்துனை அதிர்வுகளை, எத்துணைக் கொண்டாட்டங்களை ஏற்படுத்திய பெயர். வேட்டையாடு விளையாடு கொடுத்த மகிழ்வைகூட கொடுக்க இயலவில்லை இந்தப்படம்.

மிக அழுத்தமாக கமல் மீண்டும் நமக்கு சொல்லியிருக்கிறார்...
நான் எடுப்பதுதான் படம்
முடிஞ்சா பாரு இல்ல ஓடு ...

நாசர் இயக்கத்தில் இருந்து விடைபெற்றுவிட்டார். கமல் விடைபெற வேண்டாம் தொழில் நுட்பத்தில் காட்டும் அக்கறையை ஏன் திரைக்கதையில் காட்டவில்லை ?

மார்வல் காமிக்ஸ் கதையை பத்து ஆண்டுகள் திரைக்கதை எழுதிய பின்னர்தான் கையில் எடுக்கிறார்கள். மேற்கின் திரைக் கருவிகளை, நுட்பங்களை லாவகமாக கையாளும் கமல் எப்போது அவர்களைப் போல அக்கறையுடன் திரைக்கதையை எழுதுவார்?

விஸ்வரூபம் 2
வாமன அவதாரம் ...

விஸ்வரூபம் குறித்த எனது பார்வையை சிறு இற்றையாக முகநூலில் பகிர்ந்த பொழுது சார் படம் பற்றி சரியா எழுதுங்க, ஆண்ட்ரியா பற்றி ஒண்ணுமே எழுதலை, கமல் நிறைய சொல்லியிருக்கிறார் நிதானமாக பாருங்கள் என்று என்னிடம் இன்பாக்ஸ் வாதத்தில் வந்தது ஒரு இஸ்லாமிய இளவல்... அந்தவகையில் படம் வெற்றிபெற்றிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

அன்பன்
மது

Comments

  1. 50% பிடித்திருக்கிறது... அப்படித்தானே...?

    ReplyDelete
  2. படம் பார்க்கும் உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. எப்படியும் இந்தப் படம் நான் பார்க்க வாய்ப்பில்லை - குறிப்பாக வெளிவந்த சில நாட்களில்.... எப்போதாவது ஊருக்கு வரும்போது டி.வி.யில் போட்டு பார்த்தால் தான்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக