ஆன்மன் பேரிடரில் சுடர்ந்த ஒளிஆன்மன்
முகநூல் நட்பு. இவர் குறித்து நம்மில் வாசிப்புள்ள நண்பர்கள் பலரும் அறிந்திருக்க கூடும். கடந்த கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் இவர் ஆற்றிய களப்பணி மனிதத்தின் உச்சம்.சிறு தொழில் அதிபரான ஆன்மன் தன் தொழிலை விட்டுவிட்டு சுமார் இரண்டு மாதங்கள் கேரள வெள்ள நிவாரணப் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இவரது களப்பணி குறித்து பல்வேறு பத்திரிக்கைள் சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. சக மனிதர்கள் மீதான அக்கரையில் இயங்கும் ஒரு பெரும் குழு ஆன்மனின் பலம். அய்யா ஷாஜ் ஜி முதல் நான் ராஜாமகள் (தேன்மொழி அம்மா) வரை ஒரு பெரும் குழுவின் ஒன்றிணைப்பின் களச் செயல்பாட்டாளர் ஆன்மன்.

ஆன்மன் போன்றோரின் மனிதநேயச் செயல்பாடுகளால்தான் இந்த உலகு இன்னும் சுழல்கிறது என்றால் அது மிகையல்ல.

கேரளாவிற்கு கொடுத்த அற்பணிப்பை தமிழ் மக்களுக்கு ஆன்மன் கொடுப்பாரா என்கிற கேள்விக்கு கஜா மூலம் விடை கிடைத்தது.

ஒரு நாளைக்கு ஒரு டன் அரிசி விநியோகம் செய்த ஒரு பெரும் குழுவை ஒன்றிணைத்து நிர்வகித்து தேவையுள்ள மனிதர்களுக்கு அது போய்ச் சேர்வதை உறுதி செய்தார் ஆன்மன்.

இவரது கஜா செயல்பாடுகளை அவரது காலக்கோட்டிற்கு சென்று பார்த்தால் புரியும்.

இவர் குறித்து விரிவாக எழுத வார்த்தைகள் போதுமா என்று தெரியவில்லை. ஒருமுறை இவரது முகநூல்  காலக் கோட்டிற்கு சென்று பாருங்கள் தெரியும். அனிதாவின் குழுமூர் சிறார்களின் கொடைநிவாரணப் பணிகள் ஒரு தொகுப்பு
நிவாரணப் பணிகள் ஒரு தொகுப்புShare on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

2 comments:

  1. உண்மை இவர்களைப் போன்றவர்கள் தான் வாழும் நம்பிக்கையை அளிக்கின்றனர்.மனிதம் தழைக்கட்டும்.

    ReplyDelete
  2. தொடரட்டும் அவரது சீரிய பணி. அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...