மனிதம் சேவித்த இயக்கங்கள்.தொழிற்சங்கள் என்பவை தங்களின் தேவையை மட்டுமே முன்னெடுத்து செல்லவேண்டும். திசை மாறக் கூடாது என்பதில் நிலையாக இருப்பவை.இந்த நிலைப்பாட்டை மீறி பல்வேறு அரசு ஊழியர், ஆசிரிய இயக்கங்கள் கஜா தினங்களில் களம் புகுந்தன.


பதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி சங்கம், மன்றம், ஆசிரிய சங்கம், திருமிகு.முன்னால் எம்.எ.ல்.சி.மாயவன் அவர்களின் பட்டதாரி ஆசிரியர் சங்கம் என எல்லாச் சங்கங்களும் தங்கள் நிலைப்பாட்டை கஜா வீசிய திசையில் எறிந்துவிட்டு களத்தில் இறங்கிச் செயல்பட்டன.

ஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்பார்த்தது போலவே களத்தில் சுழன்றது. தோழர் நாரயணன், தோழர்.விக்கி தோழர்.சலோமி என பெரும் படை மீட்பில் இருந்தனர்.


அறிவியல் இயக்கத் தோழர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மீட்பில் ஈடுபட்டார்கள். சிறுநாங்குபட்டி சென்ற பொழுது என்னையும் அழைத்தார்கள். செல்ல முடியவில்லை. அறிவியல் இயக்கத்தின் பாலசுப்ரமணியன், வீரமுத்து, தலைவர் மணவாளன், தோழர் உஷா நந்தினி போன்றோர் தங்கள் தோழர்கள் அனைவரையும் நிவாரணப் பணிகளில் இறக்கிய வண்ணம் இருந்தார்கள்.
Comments

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை