கஜா ரணத்தின் ஆறுதல்கள்


பெல்,

திரு.சுப்பிரமணியன் எனது வகுப்புத் தோழர். சின்னவயதில் எல்லோரும் அவரை பெல் அன்று அழைக்கவே ஒரு கட்டத்தில் தன்னுடைய ஆதார் அட்டையை பெல் என்ற பெயரிலேயே வாங்கிவிட்டார். தனித்துவம் மிக்க களப் பணிகளால் எங்கள் பகுதியின் நகராட்சி மன்ற உறுப்பினரானார். கடலூரில் வெள்ளம் என்றாலே முதல் ஆளாக நிற்பார். கஜா வைத்து செய்தது புதுகையின் பெரியார் நகர் என்கிற பொழுது களம் புகாமல் இருப்பாரா?




சிவா,
பெரியார் நகர் சிவா என்கிற முகவரியில் புதிதாக வளர்ந்துகொண்டிருக்கும் அடுத்த தலைமுறை அரசியல் புள்ளி. அ.ம.மு.கவில் பொறுப்பில் இருக்கிறார். இவர் கஜா களப் பணிகள் உண்மையில் பாராட்டுக்குரியவை. பெரியார் நகரின் அணைத்து தெருக்களிலும் குறைந்த பட்சம் மூன்று முறையாவது சென்று வந்திருப்பார்.

கஜா சாய்த்துப் போட்டிருந்த மரங்களைத் தாண்டி இந்த சாதனையை செய்தது உண்மையில் ரொம்ப பெரிய விசயம்.

வளர்க சிவா
எழுத்தாளர் ஏகாம்பரம்


பொறுப்புமிக்க ஆசிரியர், முன்னாள் பத்திரிக்கையாளர், பாடநூல் தயாரிப்பில் வித்தகர், தன்னுடைய மாணவர்களை தரணி அறியச் செய்வதில் தமிழகத்தில் இவர்தான் முதல் ஆசிரியர். இவரது பள்ளி மாணவர்கள் மீண்டும் மீண்டும் தொலைகாட்சி நிகழ்சிகளில் வருவதைக் கவனித்திருப்பீர்கள்.

கஜா தினங்களில் களத்தில் சுழன்று சுழன்று இவர் செய்த பணிகள் நெகிழ்வு.

நாடோடி இலக்கியன்

நகைச்சுவை ததும்பும் முகநூல் இற்றைகள் எழுத்தாளர் அய்யாசாமியின் அடையாளம். இவர் எழுதும் இலக்கிய இல்லறம் முகநூல்வாசிகளின் ஸ்ட்ரெஸ்பஸ்டர். முக்நூல் வாசிகளின் ஆயுளை அரைநாளவது கூட்டும் வல்லமை கொண்டவை இவரது இற்றைகள்.

தனியொருத்தி என்ற நூலில் பாடகி ஸ்வர்ணலதா குறித்து இவர் இசை அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். வெகு நேர்த்தியான ரசிகர்.

கஜா கோரத்தாண்டவமாடியதே இவரது சொந்த ஊரான வெட்டுக்காடு பகுதியில் என்கிற புள்ளியில் தன்னுடைய நண்பர்களை ஒன்றிணைத்து பெரும் மீட்புப் பணிகளில் இறங்கினார்.

இரண்டுமுறை தொலைபேசியில் பேசினேன். வார்த்தைகளை அளந்து அளந்து மிகக் கவனமோடு பேசினார். ஒரு சர்ரியலிச அனுபவம் இது. இற்றைகளில் நம்மை உருண்டு பிரண்டு சிரிக்க வைக்கும் இவர் பேசுவதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்று நினைத்தேன்.

இவரை பாடாய்ப்படுத்தி இவரது சகோ நடராஜ் அலைபேசி என்னை வாங்கி சேமித்தால் அது ஏற்கனவே பதிவாகியிருந்த  நடராஜ் இங்கிலீஷ் என்கிற நண்பரைக் காட்டியது.

மணி பாரோ குழுவில் இருந்த நூர் மழைத்துளிகள் குருமூர்த்தி, மற்றும் மழைத்துளிகள் மாரிமுத்து அவர்கள் மூலம் வெட்டிக்காடு பகுதிக்கு திருச்சி சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்தை அழைத்து சென்று அவர்கள் விருப்பப் படி அவர்கள் கரங்களாலேயே நிவாரணப் பொருட்களை வழங்கச் செய்தனர்.

அனுபவங்கள்
தொடரும்
மது

Comments

  1. சிறப்பான மனிதர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி மது.

    ReplyDelete
  2. மது, இந்தப் புதிய வலைவடிவமைப்பு முன்னர் இருந்ததை விட ஒன்றும் சிறப்பாக இல்லையே! முன்னர் இருந்த தெளிவு இல்லாமல் குழப்பம்தான் மிஞ்சுகிறது. ஏன் இப்படி?
    மாற்றம் முன்னேற்றமாக இருந்தால் சரிதான். ஆனால் அன்புமணி போல இருந்தால்... அதைத்தான் மாற்றவேண்டும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக