அலிட்டா யுத்த தேவதை


கிழக்காசிய நாடுகளில் வசூல் சாதனை செய்துகொண்டிருக்கும் படம். வரும் ஆனா வராது என்கிற நிலையில் இருந்த படம்.



ஜேம்ஸ் கேமரான் 2003இல் துவக்கிய படம். லைவ் ஆக்சன் அனிமேஷன் படம்.

1990இல் யுகிடோ கிஷிரு எழுதிய காமிக்ஸ் படக் கதைதான். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஜேம்ஸ் இந்த கதையைப் படமாக்க விரும்பினாலும் லைவ் ஆக்சன் அனிமேஷன் துறை இன்னும் கொஞ்சம் வளர்ந்தால்தான் நேர்த்தியாக செய்ய முடியும் என்று காத்திருந்து 2003லில் துவங்கிய படம்.

வரும் ஆனா வராது என்ற நிலைக்கு போய்விட்டது படம்.

ஜேம்ஸ் கேமரான் அவதார் படம், மற்றும் ஒரு ஆழ்கடல் ஆய்வில் இருந்ததால் அலிட்டா படபிடிப்பு தள்ளிப் போய்விட்டது.

பிறகு ஜேம்ஸ் தன்னுடைய நண்பர் ராபர்ட் ரோட்ரிக்ஸ்சிடம் படத்தை ஒப்படைத்தார். ரோசா சல்சார் அலிடாவாக மோசன் காப்ச்சரிங் செய்ய படம் ஒருவழியாய் இந்த வாரம் திரையரங்குக்கு வந்துவிட்டது.

படத்தின் இயக்கத்தில் இருந்து விலகிக் கொண்டாலும் ஜேம்ஸ் திரைக்கதை எழுதினார். அலிட்டா காமிக்ஸ் பாகங்கள் பலவற்றை படித்து அவற்றில் இருந்து வெற்றிகரமான ஒரு திரைக்கதையை எழுதிவிட்டார் ஜேம்ஸ்.


கதை என்ன என்று கேட்போருக்கு

வர்க்க போராட்டம்தான் ஆனால் செமை.

வானில் மிதக்கும் ஷாலோம் நகர் அதன் குப்பையை கொட்டும் இடமான அயர்ன் சிட்டி. அயர்ன் சிட்டி சைபோர்க் மருத்துவர் டைசன் இடோ குப்பை மேடுகளில் தேடி சைபோர்க் உடல் பாகங்களை சேகரித்து அவற்றை சைபோர்க்களுக்கு பொருத்தி வருமானம் பார்ப்பவர்.

ஷாலோம் நகருக்கு போய்விட வேண்டும் என்பதே அயர்ன் சிட்டிவாசிகளின் வாழ்நாள் கனவு.

அப்படி ஒரு குப்பை கிளரும் நாளில் அவருக்கு கிடைகிறது ஒரு பெண் சைபோர்க். மூளை மட்டும் சேதமடையாமல் இருக்க அவளை உயிர்பிற்கிறார் இடோ.

தன்னை யாரென்றே தெரியாத அந்த பெண் சைபோர்க்கிற்கு அலிட்டா என்கிற பெயரை வைக்கிறார்.

அலிட்டா ஒரு இயந்திரப் பெண்ணாக இருந்தாலும் அநீதி கண்டு கொதித்து எழுபவளாக இருக்கிறாள். (அயர்ன் சிட்டியில் அடிமைகளின் ஆட்சி இல்லாததால் அவள் வாய்க்குள் கைத்துப்பாக்கியை  விட்டு சுட ஏவல் துறை ஏதும் இல்லை).

புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் போரிட பான்ஸ்தர் குன்ஸ்ட் என்கிற தற்காப்பு கலை தெரிந்த ஒரே சைபோர்க் அலிட்டா மட்டுமே.

இந்த தற்காப்பு கலையும், ஒரு பெரு நகருக்கு சக்தியளிக்கும் வல்லமை கொண்ட இயந்திர இதயத்தையும் கொண்ட அலிடாவின் தாக்குதலில் நிலை குலைகிரார்கள் அவளது எதிரிகள்.  பெரும் பணக்காரர்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழைகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான கள தேவதையாக இருக்கிறாள் அலிட்டா.

நான் ஒரு முழுமையான பெண் இல்லை என்று சொல்லும் அலிடாவிடம், இன்றைக்கு உலகில் இருக்கும் பெண்களில் முழுமையான பெண் நீதான் என்று டாக்டர் இடோ சொல்வது ஒரு வலி நிறைந்த முரண்.

முப்பரிமான காட்சியில் வந்திருக்கும் இப்படம் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தான்.

தொழில் நுட்பத்தின் வாயிலாக மனித வர்க்க போராட்டத்தை சொன்ன விதத்திற்காக, இதயத்தை எடுத்துக்கோ என்று எடுத்து காதலன் கையில் கொடுக்கும் அந்த காதலுக்காக பார்க்கலாம்.

படத்தின் இறுதியில் ஷாலோம் போக விரும்புவோர் எப்படி அங்கே அனுப்பப்படுவார்கள் என்பதை காண்பிக்கும் பொழுது ஆடிப்போய்விடுவீர்கள்.

பொன்னுடல் அடைந்து விண்ணுலகு அடைதல்தான்.

கதைகளின் மூலம் ஒன்றுதான் ஆனால் களங்கள் வேறு.

சந்திப்போம்

அன்பன்
மது  

Comments

  1. 1980களில் வெளியான ஃப்ரான்ங்கஸ்டன் திரைப்படத்தைப் பார்த்த நினைவு வந்தது.

    ReplyDelete
  2. பொதுவா ஆங்கில படங்களைப் பார்ப்பதில்லை. உங்களுடைய விமர்சனம் நன்றாக இருக்கிறது நண்பரே

    ReplyDelete
  3. பார்க்கத் தூண்டும் அறிமுகம். நன்றி மது.

    ReplyDelete
  4. பார்த்துடுவோம்

    ReplyDelete

Post a Comment

வருக வருக