அசத்தும் ஹோண்டா சூப்பர் பைக்குகள் 1


Honda CBR250


ஜப்பானிய மோட்டார் தொழில்நுட்ப நிறுவனமான ஹோண்டாவின் ஒரு தயாரிப்பு சாலைக்கு வருகிறது என்றால் அது உன்னத தரத்தோடு இருக்கும் என்பதை அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல மோட்டார் விமர்சகர்களும் சொல்வார்கள்.நாற்பத்தி நான்காயிரத்தில் துவங்கும் ஹோண்டா பைக்குகளின் விலை அல்லு தெறிக்கும் விலையான முப்பது லெட்சம் வரை இந்தியாவில் விற்கப்படுகின்றன.

இந்தப்பதிவில்  உச்சநிலை பைக்குகளை மட்டும் பார்ப்போம்.

ஹோண்டா CBR250R

ஏ.பி.எஸ் வசதியோடு ஒரு மாடலும் இல்லாமல் ஒரு மாடலும் சந்தையில் இருகின்றன.

பிஎஸ் நான்கு நிலைக்கு மேம்படுத்தவதற்காக கொஞ்சகாலம் விற்பனையிலிருந்து விலக்கிவைக்கப்படிருந்த டூரர் வகைபைக் இப்போது மேம்படுத்தப்பட்டு சந்தையை கலக்குகிறது.

இரட்டை காம்ஷாப்ட்களை கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் இந்த இயந்திரக் குதிரையின் இதயம்.

அதிகபட்ச வேகம் நூற்றி முப்பத்தி ஐந்து கி.மி என்கிறார்கள். ஆனால் இது போங்கு என்பது நமக்குத் தெரியும். ஸ்பீடாமீட்டர் ரொம்ப ஈசிய நூற்றி அறுபதைத்தொடலாம்.

இரநூற்றி ஐம்பது சி.சி என்று சொல்கிறார்கள், இதுவும் போங்குதான். இந்திய வாகனச்சட்டத்தின் முதுகைச் சுற்றி வரவேண்டும் என்பதற்காக  சொல்லியிருக்கலாம்.

உண்மையிலேயே அதீத திறன் கொண்ட பைக்கை, சட்ட விதிகளுக்காக திறனைக் குறைத்து சந்தைப்படுத்தியிருக்கலாம் ஹோண்டா.

சார் எவ்வளவு சார் மைலேஜ் தரும் என்று கேட்பீர்கள் என்றால் அய்யா சாமி இது ஸ்போர்ட்ஸ் பைக், திறன்வெளிப்பாடுதான் முக்கியம் வண்டியின் புகைபோக்கி வழியாக பணத்தை அனுப்பும் இந்த பைக்.  167கிலோ எடைகொண்ட இந்த பைக் ஹோண்டாவின் வார்த்தைப்படியே இருபத்தி ஒன்பது கி.மீதான் கொடுக்கும்.

இரண்டு சக்கரங்களுமே அலாய்வீல்கள் கொண்ட டிஸ்க் பிரேக்தான், இரட்டை சானல் ஏபிஎஸ், டிஜிட்டல் ட்ரிப் மீட்டர், ஓடோ மீட்டர் என ஹை டெக் பாய்ஸ் டாய்.
Honda CBR250

முன்புற சஸ்பென்சன் டெலிஸ்கோபிக் என்றால் பின்புற சஸ்பென்சன் மோனஷாக்.

முகப்பு விளக்குகள், வால் விளக்குகள், வளைவுணர்த்தும் விளக்குகள் எல்லாமே பளீர் எல்.இ.டி.

இந்த பைக் இரண்டு மாடல்களில் வருகிறது, 1.65 லட்சத்திலிருந்து 1.95 லட்சம் வரை விற்பனையாகிறது.

தொடர்வோம்
அன்பன்
மது

Comments

 1. என் பையன் கண்ணுல இந்த பதிவு தென்படக்கூடாதுடா சாமி. ஒரு வருசமா அவன் பைக் வாங்கும் ஆசையை தட்டிக்கழிச்சுக்கிட்டே வரேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் சோதனைப் பதிவுத்தொடர்தான் இது...வரவேற்பு இருக்கிறதா என்பதற்காக எழுதுகிறேன்

   Delete
 2. பைக் சூப்பராக இருக்கிறது. நல்ல இன்ஃபொ.

  துளசிதரன்

  பைக் ஆஹா அழகா இருக்கே. ஓட்டவும் தெரியும் ஆனா வாங்கும் சக்தி கிடையாது பைக் வெயிட்டை ஹேண்டில் பண்ணவும் முடியாது...கால் எட்டாதே தரையை...ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிகள் தோழர்

   Delete
 3. அது சரி... பைக் ஓட்டத் தெரிந்தவர்களும்,, பைக் பிரியர்களும் விரும்பிப் படிப்பார்கள். பின்னால் அமர்ந்து போகும் எனக்கு எந்த பைக்கானாலும் ஓகே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிகள் தோழர் ...இந்தமாதிரி பைக்குகளை ஒட்டுவதுதான் உத்தமம். பின்னால் உட்கார்ந்தால் பயப் பிராந்தியாக இருக்கும் ...

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

ஜான் விக் 3

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2 வீரபாண்டிய கட்டபொம்மன்

நாளைய மனிதர்களின் நேற்று