என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 4


இது அவன்ஜர் எண்ட் கேம். 

உண்மையில் அயர்ன் மேனுக்குத்தான் எண்ட் கேம். இந்த சீரிசை இத்துணை வருடங்கள் உயிர்ப்போடு வைத்திருந்ததில், பெரும் வெற்றிப்படமாக மாற்றியதில் ராபர்ட் டௌனிங் ஜூனியருக்கு பெரும் பங்கு இருக்கிறது.

இந்தப் படத்திற்காக ஊதியமாககிட்டத்தட்ட அறநூறு கோடிகளை   பெற்றவர்.

நடிப்பில் எந்தக் குறையும் வைப்பதில்லை மனுஷன்.

கண்முன்னே துகள்களாகும் ஸ்படியை கண்டு பதறுவதாகட்டும், மீண்டும் வரும் அவனை அணைத்துக்கொள்வது, ஹோலோகிராம் மூலம் மகளிடம் லவ் யூ திரீ தவுசன்ட் என்பது என படம் முழுக்க அயர்ன்மேன் பஞ்ச் உண்டு. ரொம்ப பலமாகவே. அயர்மேன் அல்லவா.

டைம் ஹீஸ்ட்டில் தன்னுடைய அப்பாவை கண்டு பேசுவதாகட்டும், தனக்கு குழந்தை பிறக்கப் போகிறது, அந்த நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என்று அவர் கேட்பது, (மகனிடமே, எதிர்காலத்தில் இருந்து வந்திருப்பதால் தெரியாது!)

அவரைக் கட்டி அணைத்து ஒரு குட்பை சொல்வது, இது முதல் அயர்ன் மேன் படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவருக்கு ஒரு குட்பை சொல்லக் கூட போயிருச்சு என்று அயன்மேன் வருத்துவதை காட்டியிருப்பார்கள்.

ரூசோ பிரதர்ஸ் அந்த புள்ளியை கொணர்ந்து என்ட் கேமில் இணைத்து ஒரு பாசமழை காட்சியை உருவாக்கிவிட்டார்கள்.

கொஞ்சம் நினைச்சுப் பாருங்க கடந்த 2007முதல் வெளிவந்த இருபத்தி இரண்டு படங்களில் இருந்தும் இப்படி ஒவ்வொரு விஷயத்தை எடுத்து கச்சிதமாக பொருத்தி தெறிக்க விட்டிருக்கிறார்கள் இயக்குனர்கள்.

செமை இல்லையா? 

அதேபோல இறுதிக் காட்சியில் நான் தவிர்க்க முடியாதவன் என்று சொல்லும் தானோஸிடமிருந்து நொடிக்குள் கற்களை ஆட்டையப் போட்டு நான் அயர்ன் மேன் என்று சொல்லி வில்லனின் படைகளை ஒரு நொடியில் அழிப்பது, அதைத் தொடர்ந்த நெகிழ்வுக்காட்சிகள்.

அதேபோல அயர்மேன் இறுதி சடங்குகளில் இதுவரை வந்த எல்லா சூப்பர் ஹீரோக்களும், இனி வரப்போகிற சூப்பர் ஹீரோக்களும், இன்னொரு இருபது வருடத்தை மார்வல் பிரச்சனயே இல்லாமல் ஓட்டும்.

வசூல் மழைதான்!

அன்பன்
மது.

இப்போதைக்கு மார்வல் பதிவுகள் முற்றும். 

பி.கு. ரொம்ப சீரிஸா எழுதும் பதிவுகளுக்கு, சமூகம் கல்வி குறித்து எழுதும் பதிவுகளுக்கு பார்வைகள் குறைவு, மார்வல் பதிவுகளுக்கு அதிகம் எனவேதான் எழுதினேன். 

அறிவியல் பதிவுகளை தொடர விருப்பம். 
பார்க்கலாம்.


Share on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...