இராணுவ ஆட்சி ...இனி என்ன?

எழுபத்தி மூன்று ஆண்டுகளில் இந்த விடுதலை நமக்குத் தந்தது என்ன?


கொடிகாத்த குமரனின் கபால எலும்புகளை முறித்து ஆங்கிலேயே குண்டாந்தடிகள் என்ன செய்தனவோ அதையே இன்று இந்துத்துவம் செய்ய விளைகிறது. 

இந்துக்கள் அரசு, இந்துத்துவம் என்று போலி மாயையில் விழுந்த இந்த சமூகம் அரிய வைகை ஏழைகளின் குறைந்த பட்ச வருட வருவாய் எட்டு லெட்சம் என்றபொழுதும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

மருத்துவக் கனவோடு மரித்துப் போன குழந்தைகள் அன்றாடச் செய்தியின் இயல்பான அறிவிப்புகளான பொழுதும் சமூகம் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை. 

கும்பல் வன்முறைகள் காவிவெறியேறி நம் கண் முன்னே அறங்கேறிய பின்னரும் அதனாலே என்ன என்றே கடந்தோம். 

இதற்கான விலை? 

இந்த விடுதலை நாள் விழாவில் முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்கிற அறிவிப்பு. 

இதுவரை இந்தியாவில் இராணுவப் புரட்சி வரமல் இருப்பதற்கு காரணம் மூன்று படைகளின் தளபதிகளும் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் மட்டுமே ஒன்றுகூட முடியும் என்கிற பாதுகாப்பு வால்வுகள்தான்.

இப்போது அது தகர்ப்பட இருக்கிறது. 

மூன்று படைகளுக்கும் புதியதாக ஒரு தளபதியோ, அல்லது ___சோ வர வாய்ப்பு இருக்கிறது. 

இரநூறு ஆண்டுகள் போரிட்டு பெற்ற, தியாகங்களால் வென்றெடுத்த இந்த நாட்டின் விடுதலையை நாம் பெரும்பான்மைச் சமூகம் தன்னுடைய பேடித்தனமான மதப்பற்றால் தொலைத்துவிட்டது. 

இது நாம் பரிமாறிக்கொள்ளும் இறுதி விடுதலைநாள் வாழ்த்தாகக் கூட இருக்கலாம். 

எந்த சமூகம் இந்த வெறிநாய்களை தேர்ந்தேடுத்ததோ அதுவே முதல் களபலியாகும் என்பதே நிதர்சனம். 

சர்வாதிகாரம் இப்படித்தான் இயங்கும். 

இந்துக்கள் நலன் என்பது என்ன? 

வேதாந்தவிற்கு வாசல்களைத் திறந்துவிடுவது. 

பெருநிறுவனங்களின் தேவைகளை வேட்டை நாயின் வேகத்தோடு நிறைவேற்றுவது இவ்வளவே. 

இதைவிட பெரிய திட்டங்கள் அவர்களிடம் இருக்க வாய்ப்பே இல்லை. 

சதா எரிந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தை கட்டமைத்து அதன் வளங்கள் எல்லாவற்றையும் பிடுங்கித்தின்பதே இவர்களின் நோக்கம். 

அறம் நீர்த்த ஒரு சமூகத்தின் அங்கமாக இருந்ததற்காக நாமும் இதற்கான வலி நிறைந்த விலைகளை தர தயாராக இருக்க வேண்டும். 

முற்றாக நம்பிக்கை 
இழந்த 
உங்கள் 
மது  

Comments

  1. நம்பிக்கை இழக்காமல் மாணவர்களிடம் போராட்ட விதைகளை இப்பவே விதைக்க வேண்டிய தருணம் இது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

    ReplyDelete
  2. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

    ReplyDelete
  3. அறம் நீர்த்த ஒரு சமூகத்தின் அங்கமாக இருந்ததற்காக நாமும் இதற்கான வலி நிறைந்த விலைகளை தர தயாராக இருக்க வேண்டும்.

    உண்மை.

    ReplyDelete
  4. வலி தரும் உண்மை..

    ReplyDelete

Post a Comment

வருக வருக