ஜோக்கர் 2019 JOKER 2019

இந்த வருட ஆஸ்கர் விருதை ஜாக்வீன் பீனிக்சுக்கு பெற்றுத்தரப் போகும் படம் என்று சொன்னார் எழுத்தாளர் தூயன்.

ஹாலிவுட் சித்தன் கபில் வேறு மாமா படம் தாறுமாறா இருக்கும்னு பேசிகிறாங்க என்று ஏகத்துக்கும் ஹைப் ஏற்றிவிட்டான் படம் வருவதற்கு முன்பே.

பொதுவாக பேசப்படும், எதிர்பார்க்கப்படும் படங்கள் குறித்து அய்யா ராஜசுந்தர் ராஜன் என்ன சொல்கிறார் என்று பார்ப்பேன்.

நன்னா தூங்கிட்டேன் தியட்டரில் என்றார் அவர், ஒரு காமிக்ஸ் படக் கதாபாத்திரத்தை வாழ்விற்குள் கொண்டுவந்ததே பெரிய சறுக்கல் என்றும் சொல்லியிருக்க எனக்கு படம் குறித்து ஒரு எதிர்மறைப் பிம்பம் வந்துட்டு.

அதோடு இல்லாமல் படம் புதுக்கோட்டையில் ரிலீஸ் இல்லை!

ஏகத்துக்கும் எகிறிய விமர்சனங்களுக்குப் பிறகு ஒருவாரத்திற்கு பின்னர் விஜய்யில்வர, பணி அழுத்தங்களுக்கும் குறைய தியேட்டருக்குச் சென்றேன்.

டிசி காமிக்ஸ் உலகில் அதிபயங்கர வில்லன் ஜோக்கர்,  சிரித்துக் கொண்டே கொலைகள் செய்பவன் ஈவு இரக்கமில்லா கொலையாளி என்றுமட்டுமே பார்த்திருந்தோம்.

பாட்மேன் டு பேஸ் படத்தில் (டார்க் நைட்) ஒரு மேஜையில் பென்சிலைக் குத்தி வைத்து இதை மாயமாக மறையச் செய்யவா என்று கேட்டு அருகே இருந்தவனின் தலையை பென்சிலில் மோதி, பென்சில் அவன் தலைக்குள் போய்விட இப்போது மேஜையில் பென்சில் இல்லை ....பாத்தியா மேஜிக் என்பான் ஜோக்கர்.

அல்லு தெறிக்கும் பல சம்பவங்களின் சொந்தக்காரன்.

ஆனால் இப்படி ஒரு பிள்ளைப் பூச்சியாய் இருக்கும் ஜோக்கரை பார்த்ததே இல்லை!

ஒரு டெலிவிஷன் லைவ் ஷோவில் எழுந்து திருநங்கை போல உடலை அசைத்து குழந்தை போல வெகுளியாக பேசும் ஜோக்கர் சான்சே இல்லை.

ஒரு சினிமா வசூலுக்காக மட்டுமே எடுக்கப்படுவதில்லை, ஜாக்வின் பீனிக்ஸ் ஜோக்கராகவே மாறிவிட்டார்.

ஜோக்கர் அடிபடும் பொழுது, அவன் செய்யாத தவறுக்கு அவன் தண்டிக்கப்படும் பொழுது தன்னுடைய மரணம் வாழ்வை விட மதிப்பு வாய்ந்தது என்று விரக்தியில் எழுதுகிறான்.

படத்தில் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாத அளவிற்கு அடர்வும் மெனக்கெடலும் ..

நாயகன்  மருத்துவமனையில் அம்மாவை தலையணை வைத்து அழுத்திக் கொள்கிறான், நியாயமாக அடப் பாவி என்று சொல்ல வேண்டும்,  ஆனால் அடேய் யாரும் பாக்குறதுக்கு முன்னால சீக்கிரமாக முடிச்சுட்டு கிளம்புடா என்று கத்துகிறார்கள் தியேட்டரில்!

திரை ரசிகர்கள் தவிர்க்கவே கூடாத படம்.

வலி தரும் உணர்தல் நம் கொஞ்சம் கொஞ்சமாக ஜோக்கர் ஆகிறோம், நம் உணர்வுகள் அரசியல் நிகழ்வுகளால் நசுக்கப்படும் பொழுதும், நேர்மையாக இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் தோற்பதைப் பார்க்கும் பொழுதும் நமக்குள் இருக்கும் ஜோக்கர் என்கிற அனார்கிஸ்ட் விழித்துக் கொள்கிறான். உரத்த சிந்தனைகளுக்குப் பின்னர் அவன் தூங்கப் போய்விடுவதால் உலகம் அதன்போக்கில் போகிறது.

வாவ் மூவி.

மிஸ் பண்ணாம பாருங்க

அன்பன்
மது 

Comments

 1. //வலி தரும் உணர்தல் நம் கொஞ்சம் கொஞ்சமாக ஜோக்கர் ஆகிறோm//

  ஜோக்கர்  என்னுடையது ஒரே பொதுவான ஆதங்க  கேள்வி .இவைபோன்ற படங்கள் குறிப்பா ஜோக்கர் இன்னமும் அதிகமா மென்டல் இல்னஸ் மற்றும் வயலன்ஸை அதிகரிக்காதா ?
  எதற்கு வலி களை மீண்டும்  நினைவுகூர வைக்கிறார்கள் ?அது பாதிக்கப்பட்ட மனசை இன்னமும் சோர்வடைய செய்யாதா ?நான் இன்னும் இதை பார்க்கவில்லை .எங்கள் மகள் தடுத்துட்டா .தனிமையில் இருக்கும் ஒருவனின் நிராகரிப்பின் வலிகள் என்று புரிகிறது கதையின் கரு  அசுரனோ அல்லது ஜோக்கரோ ட்ரீட்மெண்ட் அவர்களுக்கு இல்லை அவர்களை சுற்றியுள்ளவங்களுக்கு தேவைப்படுது .


  aren't we and the exacerbating their symptoms ??? :(

  ReplyDelete
 2. விமர்சனம் நன்றாக இருக்கிறது கஸ்தூரி

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 3. அருமையான கண்ணோட்டம்

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...