நண்பா அறக்கட்டளையின் சிந்தனைத்திறனாய்வு 2012


நிகழ்வுகள்


நண்பாவின் இரண்டாம் ஆண்டு நம் மக்கள் எம் திட்டம் சிந்தனை திறனாய்வு விழா 8/01/2012 அன்று இனிதே நிகழ்ந்தது. வழக்கம்போல் துரை சரவணன் நிகழ்ச்சியை தொகுக்க புகழ்பெற்ற பேச்சாளர்கள் கஸ்துரி நாதன் மற்றும் வள்ளியப்பன் நடுவர்களாக இருந்து சிறப்பித்தனர். வழமையான பேச்சுபோட்டியாக இல்லாமல் சிந்தனை திறனாய்வு என நடத்தியது நண்பாவிற்கே உள்ள புதுமை. பல பங்கேற்பாளர்கள் சரளமாக பேசினாலும் சிலர் திக்கினர். இருப்பினும் பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களது சிந்தனையை தயங்கியோ திக்கி திக்கியோ சொல்ல அனுமதிக்கப்பட்டது அருமை. இது சிந்தனை திறனாய்வு அல்லவா? நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் அருமை. மிக அருமையாக திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு என்பது பார்த்தவுடன் பளிச்சென்று தெரிந்தது.


எல்லைப்பட்டி மற்றும் கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் அண்டக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குலபதி பாலையா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, எஸ்.எஃப்.எஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, மௌண்ட்சியோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி,வைரம்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, மற்றும் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவ மாணவியர் பங்கேற்று திறனாய்வை சிறப்பித்தனர். ஒன்பது பள்ளிகளிலிருந்து முப்பத்தேழு இளம் சிந்தனையாளர்கள் தங்கள் சிந்தனைகளை அருமையாக வழங்கினர். கவிஞர் மகா சுந்தர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மாணவர்களிடம் சமுக பொறுப்பை வளர்க்கும் விதமாக சமுக பிரச்சினை எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு மாணவர் விளக்குவதோடு அப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க தூண்டுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது சிறப்பு. நண்பாவின் அறிவை விரிவுசெய் பயிற்சி பங்கேற்பாளர்களும் நிகழ்வினில் தங்களால் இயன்ற பங்களிப்பை மிகச்சிறப்பாக செய்தனர்.

சிறந்த பேச்சாளர், சிறப்பான கருத்துக்கள், புரட்சிகரமான கருத்துக்கள் என பரிசுகள் மூன்று பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டது.

பரிசுபெற்றவர்களின் விவரங்கள்
பேச்சுக்கான பரிசுகள்
முதல் பரிசு த.லெ‌ஷ்மிபிரபா(ரூ.2000)
இரண்டாம் பரிசு மு.பிரியதர்ஷினி(ரூ.1000)
மூன்றாம் பரிசு வா.தேஜஸ்வினி(ரூ.500)
சிறந்த கருத்துக்கான பரிசுகள்
முதல் பரிசு வீ.ரெ.நிவேதாஸ்ரீ(ரூ.2000)
இரண்டாம் பரிசு ப.விஜயசிவசங்கர்(ரூ.1000)
மூன்றாம் பரிசு மு.ஐஸ்வர்யா(ரூ.500)
புரட்சிகரமான சிந்தனைக்கான பரிசுகள்
முதல் பரிசு சி.சேதுபதி(ரூ.2000)
இரண்டாம் பரிசு வீ.ரெ.இலக்கியாஸ்ரீ(ரூ.1000)
மூன்றாம் பரிசு நிஷாந்தினி(ரூ.500)

இதுபோன்ற புதுமையான நிகழ்வுகள் மாணவரிடையே சிந்தனையாற்றளையும் ஆக்கபூர்வமான படைப்பற்றலையும் வளர்க்கும் களங்கள் என்று மலர்தரு கருதுகிறது. நண்பவின் இத்திட்டம் வெற்றிகரமாக தொடர மலர்தரு தன்னாலியன்ற உதவிகள் அனைத்தையும் செய்யக்காத்திருக்கிறது.



Comments