அலைகள்-கோஸ்ட் ரைடர் 2

கோஸ்ட் ரைடர் 2


கோஸ்ட் ரைடர் முதல் பாகத்திற்கு வந்த ஒரு விமர்சனத்தில் நிக்கலஸ் கேஜ் யாரையாவது எரிக்க விரும்பினால் முதலில் அவருக்கு இந்த படத்தை ஒப்பந்தம் செய்த மானேஜரை எரிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
 படம் அந்த அளவுக்கு மோசமான திரைக்கதையுடன் வந்திருந்தது. அற்புதமான நடிகரான நிக்கலஸ் கேஜ், அழகான ஹீரோயின், ஒரு குறுங்கதை மாதிரியான ஒரு குட்டி காதல் கதை என அனைத்தும் இருந்தும் படம் சுமாராகத்தான் போனது.


ஆங்கில படங்களைப் பொறுத்தவரை ஒரு பாகத்தை வைத்து அடுத்த பாகத்தை எடை போடா முடியாது. எனவே இரண்டாம் பாகத்தை பார்க்க தீர்மானித்தேன்.

விரைகின்ற மோட்டார் பைக் பின்னால்  தொடரும் கேமரா படத்தின் முதல் காட்சியிலேயே பார்வையாளர்கள் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. ஒரு மடாலயத்திற்குள் நுழையும் பைக்கில் இருந்து இறங்கும் மேன்லியான ஸ்டைலான கருப்பு ஆப்ரோ அமெரிக்கனைப் பார்த்தவுடன் சர்த்தான் இந்த படத்துல கருப்பு கோஸ்ட் ரைடர் என்று பார்வையாளன் முடிவு எடுக்கிறான்.அது போலவே அடுத்து வரும் சண்டைக் காட்சியில் மாடிபடிகளில் பறந்து இறங்குகிறார் இட்ரிஸ் எல்பா.


ஆனால் அரைமணிநேரம் கழித்துத்தான் இட்ரிஸ் எல்பா ஒரு பாதிரியார் என்றும் தனது சக்திகளை மறைத்து ஓடி ஒளிந்துகொண்டிருக்கும் கோஸ்ட் ரைடரை உசுப்பேற்றுவதே அவரது வேலை என்றும் தெரிகிறது. அத்துடன் படத்தில் இருந்து கிளைமேக்ஸ் வரை காணாமல் போகிறார் இட்ரிஸ் எல்பா.

ஆபத்தில் இருக்கும் ஒரு சிறுவனை பாதிரியாரிடம் (இட்ரிஸ் எல்பாவிடம்) ஒப்படைத்தால் சாதாரண மனிதனாக வாய்ப்பு இருப்பதாக கோஸ்ட் ரைடர் உணர்கிறான். இதன் விளைவுகள் என்ன ஆனது என்பதே கதை. மார்வல் காமிக்ஸின் மாவீரர் வரிசையில் உருவானவன்தான் கோஸ்ட் ரைடர்.

சிறு குழந்தைகளின் படக்கதையாக இருந்தாலும் அதை திரைப்படமாக ஆக்கியிருப்பதால் எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் இதை 3 டியில் படமாக்கி இருப்பதே கொஞ்சம் பெரிய வித்தியாசம்தான்

நெடுஞ்சாலைகளில் கார்களை துரத்தும் காட்சி மிக அருமையாக உள்ளது. ஒரு மிகப்பெரிய அகழ்வு இயந்திரத்தை கோஸ்ட் ரைடர் தன சக்தியை பயன்படுத்தி ஒரு நெருப்பு கக்கும் ஆயுதமாக மாற்றுவது கிராபிக்ஸ் கும்மாளம்.
.

இயக்கம் :     மார்க் நேவேல்டினே , ப்ரியன் டயலோர் (Mark Neveldine, Brian Taylor)
எழுத்து :        ஸ்காட் M. கிம்ப்லே (திரைக்கதை) சேத் ஹாப்மன் (திரைக்கதை)
                           Scott M. Gimple (screenplay), Seth Hoffman (screenplay)
நட்சத்திரங்கள்
    நிகோலஸ் கேஜ்,
சைரன் ஹிண்ட்ஸ்
மற்றும் இட்ரிஸ் எல்பா
தயாரிப்பு செலவு :
    சுமார் ஏழரைக்கோடி அமெரிக்க டாலர்கள்
வசூல்
முதல் வாரம் :
    இரண்டு கோடியே இருபத்தி இரண்டு லட்சம் டாலர்கள் (19 February 2012) (3174 Screens)
மொத்தம் :     ஐந்து கோடியே பதினாறு லட்சம் டாலர்கள்

Comments