சோ ஸ்வீட் வலைப்பூ 3

முத்துநிலவன் அவர்களின் வலைப்பூ
வளரும்கவிதை.ப்ளாக்ஸ்பாட்.காம்

இணையத்தில் வெற்றி உலா வரும் பண்பட்ட இலக்கியவாதிகள் பலர் புதுகை மாவட்டத்தில் உண்டு. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயலர். முத்துநிலவன் அவர்களில் முதன்மையானவர். அரசு தொலைகாட்சி குறித்த அவர் கவிதையில் எனக்கு பிடித்த வரிகள் இவை.

எப்போதோ பூக்கும்
ஒர் அத்திக்காக
எவ்வளவு நாள் தான்
இதற்கு
மின்-நீர் விடுவது?

சமீபத்தில் கொலையுண்ட ஆசிரியைக்கான இவர் கட்டுரையைப்படிக்க

"சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி" என்ற பாடலை என்றாவது கேட்டிருக்கிறீர்களா? அறிவொளி இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஒலித்த பாடல் இது. இப்பாடலை எழுதியவர் முத்துநிலவன் என்பது ஒரு ஆச்சரியமான தகவல். தமிழிலக்கியம் குறித்து ஒரு விரிவான பார்வை கொண்டவர். கவிஞர்.முத்துநிலவன். தமிழ் இலக்கியம் குறித்தும்,தமிழிலக்கிய வரலாறு குறித்தும் ஆர்வமுள்ளவர்கள் பார்க்க வேண்டிய தளம் இது.

Comments

 1. என் வலைப்பக்கத்தை அறிமுகப் படுத்தி, என் இயல்பை விடவும் அதிகமாகவே பாராட்டி எழுதிய உங்கள் அன்பிற்கு என் நன்றி.

  அது சரீ....
  அழகா இல்லாதவங்களையும்
  அழகா காட்டுற படங்களப் பாத்திருக்கேன்,
  அழகா இருக்கிறவங்களையும்
  அழகா காட்டுற படங்களைப் பாத்திருக்கேன்
  அழகா இல்லாதவங்கள அப்புடி..
  அப்புடியே காட்டுற உங்க படப்பிடிப்புத் திறமைய
  என்படத்தைப் பார்த்துததான் தெரிந்து கொண்டேன் என்னை இவ்வளவு அழ்ழ்ழ்ழழழக்க்க்கா படம் புடுச்ச உங்கள் கணினிக்கு என் வயித்தெரிச்சல் கலந்த நன்றிய மறக்காம மெயில் பண்ணிவிடுங்கய்யா!

  ReplyDelete

Post a Comment

வருக வருக