சோ ஸ்வீட் வலைப்பூ 4


போட்டோசாப் பாடம்http://tamilpctraining.blogspot.in


 வலைப்ப்பூக்கள் என்கிற இணையத்தின் இன்னொருமுகம் படைப்பு திறன் உள்ள தமிழர்களை உலககெங்கும் கொண்டுசேர்க்கும் ஒரு அற்புதத்தை சத்தமின்றி செய்யத்துவங்கி பலகாலம் ஆகிறது. ஹும் இந்த தொழில்நுட்பம் சற்றுமுன்னேரே வந்திருந்தால் புதுக்கோட்டையில் பல கவிதைக்காரர்கள் உலக மேடையில் கோலோச்சி இருப்பார்கள் என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.


 நீங்கள் கணிப்பொறியைப் பொறுத்தவரை எதைவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் இணையமும் ஆங்கிலமும் தெரிந்திருந்தால். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இது மிகுந்த வருத்தத்தை தரும் செய்தி. கொஞ்சம் பொறுங்கள் இந்த நிலை மாற ஆரம்பித்து சிலஆண்டுகள் ஆகிறது. போட்டோஷாப் பிரியர்களுக்கு உதவும் ஒரு ப்ளாக் பற்றி இந்த பக்கத்தில் காண்போம். தமிழில் எண்பத்து ஒன்போது பாடங்களை போட்டோ ஷாப் மென்பொருளை பயன்படுத்துவதை குறித்து எளிய தமிழில் அழகாய் விளக்குகிறது இந்த ப்ளாக். போட்டோ ஷாப் பிரியர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு பிளாக் இது

Comments