கொஞ்சம் புதிய அறிவியல்(5)

அறிவியல் உலகில் விவாதிக்கப்படும் சில தகவல்கள் (5)

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் முதல்முறையாக தனது லேசர் கற்றையை இயக்கியிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் காரனேசன் என்கிற மிகச்சிறிய கல்லின் மீது கியூரியாசிட்டி ரோவர் முதல்முறையாக தனது லேசர் கற்றையை செலுத்தியுள்ளது. பூமியில் சோதனையின் பொது செயல்பட்டதை விட லேசர் கற்றைகள் சிறப்பாக செயல்பட்டு சோதனைக்கான தரவுகளை வெற்றிகரமாக சேகரித்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த லேசர் கருவியை செய்ய எட்டு ஆண்டுகள் ஆனது குறிபிடத்தக்கது.இருவாரங்களுக்குமுன் கியூரியாசிட்டி ரோவர் தனது இரண்டாண்டு சோதனைகளைச் செய்ய பத்து கருவிகளுடன் தரையிறங்கியது தெரிந்த விசயம்தான். மேலும் தகவல்களுக்கு


http://www.nasa.gov/mission_pages/msl/index.html இது ஒரு துவக்க நிலை ஆய்வே ஆகும். லேசெர் கருவியை பழக்கபடுத்த செய்ததே ஆகும். இனி அடிக்கடி சுடும்! லேசரால் தூண்டப்பட்ட தகர்ப்பு ஸ்பெக்ட்ரோகிராபி என அழைக்கப்படும் இந்த தொழிநுட்பம் இப்போதுதான் முதல் முறையாக விண்வெளியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முக நூலில் தான் பார்ப்பேன் என அடம்பிடிப்பவர்களுக்கு http://www.facebook.com/MarsCuriosity

புதிய வெப்பகடத்தாப் பொருள் தினசரி பயன்பாட்டுக்கு உகந்த வகையில்
புதிய காப்பு பொருள் ஒன்று கண்டறியப்படுள்ளது. இப்பொருள் பயன்பாட்டுக்கு வருமானால் குளிர் கால ஆடைகள் முதல் குளிர்சாதன பெட்டிவரை புதிய மாறுதல்கள் சாத்தியப்படும். ஏற்க்கனவே உள்ள ஏரோஜெல்களை விட ஐநூறு ௦௦ மடங்கு உறுதியானது இது. நாசாவின் கிளென் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது இந்த புதிய படைப்பு. இந்த ஏரோஜெல் பயன்பாடிற்கு வந்தால் குளிர்சதனப்பெட்டிகள் திறன்மேம்பாடுபெறும். மேலும் ஆடைகளிலும் சுவர்களிலும் இதனைப்பயன்படுதலாம்.

வெயில் காலத்தில் நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் செலவிடுபவர நீங்கள்.
உங்கள் நீச்சல் குளத்தை இசையால் ரொப்ப ஒரு கண்டுபிடிப்பு இதோ. தண்ணீரில் மிதந்தவாறே படும் ஒலிபெருக்கிகள் தயார். முப்பது அடிகள் வரை ப்ளூ டூத் இணைப்பில் இது பாடும். எலிமா என்ற இந்த ஒலிபெருக்கிகள் நீச்சல் குளங்களை இசையாலும் நிரப்பும்.

Waterproofspeakers

எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க.
ஜிப் வசதியுள்ள இயர் போன். இடது ஒலிப்பானும் வலது ஒலிப்பானும் ஒரு ஜிபினால் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

Y earphones

keyloggers

உளவு கருவிகள் உசார்!
படத்தில் இருப்பவை சாதாரண யு எஸ் பி கனைக்டர்கள் அல்ல. இவை பொருத்தப்பட்டால் கணிப்பொறியில் நீங்கள் அழுத்தும் ஒவ்வொரு எழுத்தையும் பதியும். பின்னர் அவற்றை கேட்போருக்கு காட்டும். பேங்க் பரிவர்த்தனை, உங்கள் ஈமெயில் பாஸ்வோர்ட் என அத்துணை ரகசியங்களும் அம்பலமாக்கும் திறன் கொண்டவை இந்த இரண்டு இன்ச் சைத்தான்கள். எனவே அடுத்தமுறை நீங்கள் பயன்படுத்தும் கணிப்பொறியில் இவை பொருத்தப்பட்டுள்ளதா என சரிபாருங்கள்.

போட்டோ எடுக்க பிடிக்குமா உங்களுக்கு.
அப்போ அதை எல்லாரிடமும் காட்டவும் பிடிக்கும் தானே? க்ரோ பிரேம் என்ற ஒரு புது சட்டமிடும் நுட்பம் உங்களுக்கு பிடிக்கும். மரச்சட்டங்களை கண்ணுக்குதெரியாத காந்தங்களை கொண்டு இணைப்பதுதான் இந்த நுட்பம். மேலும் விவரங்களுக்கு http://thegrowframe.com/


Comments