தாய்மொழி -பாரதியின் பார்வையில்விடுதலைப் போராட்டத்தின்போது தேசப்பிதா மகாத்மா காந்தி சென்னையில் ஒரு எழுச்சியுரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் அவரது பேச்சை கேட்டுகொண்டிருந்த பாரதியார் அவருக்கு ஒரு கடிதம் எழுதிகிறார். தங்களது உரை எழுச்சி ஊட்டக்கூடியதாக இருந்தது. விடுதலை வேட்கையை தூண்டும் வண்ணம் காந்தியார் சிறப்பாக பேசியதாக குறிப்பிட்ட பாரதியார்  கடிதத்தின் பின்குறிப்பாக பின்வருமாறு குறிப்பிடிருந்தார் : தங்களது உரை இந்தியிலோ, குஜராத்தியிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாம் எந்த வெள்ளையனை வெளியேற்றப் பாடுபடுகிறோமோ அதே மொழியில் தங்கள் உரை அமைந்திருந்தது சரியல்ல.

இதற்கு பதிலளித்த காந்தியார் தான் ஒரு இமாலய தவறு செய்துவிட்டதாகவும் இனி தனது உரைகளை இந்தியிலோ, குஜராத்தியிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ பேசுவதாக குறிப்பிடிருந்தார். அவரின் கடிதத்திலும் ஒரு பின்குறிப்பு இருந்ததது. பின்குறிப்பு : ஆனால் பாரதி உங்கள் கடிதத்தை நீங்கள் ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கிறீர்கள்.

இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த பாரதி தான் யாரையும் குறைசொன்னலோ, விமர்சித்தாலோ அல்லது மனம்புன்படும் வகையில் பேசினாலோ தாய்மொழியை பயன்படுத்துவது இல்லை என்று குறிப்பிடிருந்தார்.

தாய்மொழி தாய்மையோடு பேச வேண்டிய மொழி. தாய்மை உணர்வோடு பயன்படுத்தவேண்டிய மொழி என்பதை பாரதியின் கடிதம் நமக்கு உணர்த்துகிறது .

சொன்னது திரு சத்திய சீலன் அய்யா அவர்கள். 12/12/12 அன்று புதுகையில் நடைபெற்ற பாரதி விழாவில். விழா ஏற்பாடு கவிராசன் அறக்கட்டளை மற்றும் உலக திருக்குறள் பேரவை.

Comments