கனவுப் பள்ளி

 பள்ளிகள் எதிர்காலத் தலைமுறைகளை வாழ்க்கைக்கு தயார்படுத்தி, தரமேற்றி மனிதகுலத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் உன்னத ஆலயங்கள். ஆனால் இதை இப் பள்ளிகள் தரமாக செய்கின்றனவா? விடை தெரிந்தும் பகர்வதில்லை பலர். ஒரு சின்ன உதட்டு சுளிப்புடன் எல்லாரும் செய்வதைத்தான் செய்யவேண்டும். வேறென்ன செய்ய இயலும்.

பள்ளிகளின் தொடக்கம்

பன்னெடுங் காலத்திற்கு முன் குருகுலமாகவும். பின்னர் திண்ணை பள்ளிகள், மிசன் பள்ளிகள் என்று வளர்ந்தது நமக்கு தெரியும். ஆனால் மேற்குலகில் பள்ளிகள் வேருன்ற துவங்கியது தொழிற் புரட்சியின் போதுதான். வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளை என்னசெய்வது? பள்ளிகள் சரியான இடமாக பட்டது. தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் விட்டுவிட்டு தொழிற்சாலைகளை நோக்கி நகர்ந்தனர். திடீரென கூடிய மாணவர் எண்ணிக்கையை சமாளிக்க நிர்வாகம் திணறியது. மேற்குலகின் சில பள்ளிகளில் மாணவர்களை அமைதிப்படுத்த அபின் கூட பயன்படுத்தப்பட்டது.

கல்வியாளர்களால் பள்ளிசெயல்முறைகள் தீர்மானிக்கப் படாது, சூழல் தீர்மானித்தது. இன்றளவும் இதனுடைய நீட்சியாகத்தான் வகுப்புகள் தீர்மானிக்கப்படுகிறது. ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பு பதினைந்து வயதில் பத்தாம் வகுப்பு என்பது இப்படி ஏற்பட்டதுதான். இது முற்றிலும் கற்றல் முறைகளுக்கும் மனித கற்றல் செயல்பாடுகளுக்கும் எதிரானது.

கொஞ்சம் டீப்பா பார்ப்போம்

 நீங்கள் காலில் அணிந்திருக்கும் செருப்பை கவனியுங்கள். எந்த நாள் எந்த ஆண்டு எந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என்ற விவரம் அச்சிடப்பட்டிருக்கும். இப்போ நீங்க என்ன படிச்சிருக்கீங்க என்பதை கொஞ்சம் சொல்லிப்பாருங்க. 2009 அரசுப்பள்ளியில் SSLC 2013 ஆம் ஆண்டு பிளஸ் டூ என்று வரிசையாக ஆண்டு, பள்ளி, படிப்பு என்றுதான் கூறுகிறோம்.

இது தொழிற்புரட்சியின் நீட்சிதான். ஐந்து வயது மாணவர்கள் அனைவரும் முதல்வகுப்பில் இருக்கவேண்டும் என்பதும் ஆறாம் வயதில் இரண்டாம் வகுப்பில் இருக்கவேண்டும் என்பதும் இயற்கைக்கும் கற்றலுக்கும் எதிரானது என்பது தற்போதய கல்வியாளர்களின் கருத்து. சர் கென் ராபின்சன் மிக அழகாக சொல்கிறார் கல்வியில் தேவை எவலுஷன் அல்ல ரெவலுசன் என்று.
நமக்கு  தேவை பரிணாம வளர்ச்சியல்ல புரட்சி.

ஒத்தவயதையுடைய குழந்தைகள்  ஒரே கற்றல் திறனுடன் இருப்பது என்ற அனுமானத்தின் அடிப்படியில் செயல்படும் தற்போதய கல்விமுறை மாற்றப்படவேண்டும். உலகளவில் இந்த மாற்றம் வரும்வரை காத்திருக்காது இந்தியா இம்மாற்றங்களை முன்னெடுத்தால் நல்லது. நமது மக்களவை உறுப்பினர்களுக்கு இதெற்கெல்லாம் நேரமிருக்கிறதா என்ன?

இந்த பதிவை உருவாக்கிய காணொளி

Comments