அசத்தும் வாத்து !


புதிதாய்ப் புயலாய் ஒரு தேடல் எந்திரம்பெரிய பெரிய கம்பெனியே கூகுளை போட்டுப்பார்த்து கையைச்சுட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கையில் தக்குனூன்டு கம்பனி ஒன்று தேடல் துறையில் மிக அழுத்தமாய் கால்பதிதிருக்கிறது. பெரிய தேடல் நிறுவனங்கள் தரும் லொள்ளு பிடித்த ப்ரைவசி பாலிசி ஏதும் இல்லாம செயல்படுவது இதன் சிறப்பு. இதை ஒருமுறை உபயோகித்துபார்த்தால் இதன் அருமை தெரியும். ஒரே ஒரு முழுநேர பணியாளருடன் செயல்படும் இந்த தளம் நிச்சயமாக ஒரு சிறந்த தேடல் என்ஜின் என்றால் மிகையாகாது. பயனர்களை பபுள் செய்வதோ பில்ட்டர் செய்வதோ இல்லாமல் இந்த சேவை வழங்கப்படுகிற காரணத்தினால் இத்ததளம் வெகு வேகமாக புகழ்பெற்றுவருகிறது தளத்தின் மோர் பட்டனை அழுத்தினால் அளிக்கும் இலவச சேவைகள் வாவ் ரகம்.


இதில் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் உணரேவேண்டியது நம்மாலும் முடியும் என்பதே. சொத்து சேர்க்க, சொகுசாய் வாழ, ஐ டி யில் வேலை என்று காலரைத்தூக்கிவிட்டுக்கொண்டு ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் நல்ல சம்பளம் வாங்க கனவுகாணும் சராசரி பொறியியல் மாணவர்களை அல்ல நாம் சொல்வது. சுயமாய் சிந்திக்க, செயல்பட, சாதிக்க துடிக்கும் நாளைய இந்தியாவின் லட்சிய யுவன்களைச் சொன்னோம்.


தளத்தின் உள்ளே

விழிப்பு இருந்தால் இருளில் கூட வெளிச்சம் தெரியும். இத தளத்தின் வெற்றி நமது யுவன்களை உருவேற்றினால் சரி. பயனர்களின் தேவையை மிகச்சரியாக கணித்து அவர்களை திருப்திப்படுத்தினால் போதும் இமயம் உங்கள் கால்களின் கீழே.

Comments