ஸ்பின் சைக்கிள்



புதிய கண்டுபிடிப்புகள்



துணி துவைத்தல் அனைவருக்குமே அலுப்பூட்டும் பணி அதுவும் ஒரு ஆதரவற்றோர் விடுதிக்கு சேவை செய்ய போன ஒரு கல்லூரி மாணவனிடம் முப்பது முறை துணிகளை துவைக்க சொன்னால் என்ன ஆகும்? பலபேர் நைசாக நழுவிவிடுவார்கள் அனால் ரிச்சர்ட் ஹெவிட் அப்படி நழுவவில்லை. 30 மூட்டை துணிகளும் அவருக்கு ஒரு சிந்தனையை விதைத்தது. ஒரு புது கண்டுபிடிப்பு மலர்ந்தது. அதுதான் ஸ்பின் சைக்கிள்.


பிருண்டி என்ற மத்திய ஆப்ரிக்க நகரில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் பணிபுரிந்தபோது தோன்றிய கருவியே ஸ்பின் சைக்கிள்.

ரிச்சர்ட் ஹாலம் நகரில் கருவி வடிவாக்கம் குறித்த ஆய்வு படிப்பை மேற்கொண்டிருந்தார். தனது ஆப்ரிக்க அனுபவங்களை கொண்டு அவர் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் ஒரு ட்ரம்மை பொருத்தி அதன் மேல் ஒரு சுழற்றியையும் சோப்பு தூள் வழங்கும் இன்னொரு டப்பாவையும் பொருத்தி தனது முதல் ஸ்பின் சைக்கிளை வடிவமைத்தார். பல்வேறு மறுவடிவாக்கங்களின் பின்னர் அருமையான மாதிரி இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.





ரிச்சர்ட் தனது கண்டுபிடிப்புக்கு பொருத்தமாக ஸ்பின் சைக்கிள் என பெயர் வைத்து வளரும் நாடுகளின் பணிச்சுமை குறைக்கும் நடவடிக்கையாக இக்கருவியை அறிமுகப்படுதவுள்ளார். தேவையற்ற மின்சார செலவினை குறைக்கும் சாதனம் என்பதால் மலர்தருவும் இக்கருவியை வாழ்த்தி வரவேற்கும் பல்வேறு செய்தி ஊடகங்களோடு பெருமையோடு இணைகிறது. வெற்றிபெற வாழ்த்துக்கள் ரிச்சர்ட்!

Comments