அலைகள்-ஜான் கார்ட்டர்




கொஞ்சம் ஸ்டார் வார்ஸ் கொஞ்சம் அவதார் கொஞ்சம் பிளாஷ் கார்டன் போன்ற படங்களை பெற்றுக்கொண்டு ஒரு சீசாவில் போட்டுக் குலுக்கினால் கிடைப்பது ஜான்கார்ட்டர். இப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஜான் கார்டரிலிருந்துதான் அவதாருக்காக சில காட்சியமைப்புகளாக செய்தேன் என ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் சொல்லும் வரை.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் சிறப்பாக பணியாற்றிய கேப்டன் ஜான்கார்டரைக் கட்டாயப்படுத்தி ஒரு ராணுவ அணிக்கு தலைமையேற்க சொல்வதில் படம் ஆரம்பிக்கிறது.

ஒளிப்பதிவு அருமையாக இருந்தாலும் பல்வேறு கோணங்களில் பார்த்து சலித்த காட்சிகள். அனைத்து விதமான தகவல்களையும் பார்வையாளர்கள் பார்த்து சலித்தபின் வந்திருக்கும் ஒரிஜினல் படம். எப்படி 100 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் இக்கதையை யோசித்தார் என்பது பெருவியப்பு.


டார்ஜான், பிளாஷ் கார்டன், ஸ்டார் வார்ஸ் மற்றும் அனைத்து விண்வெளி சாகசப் படங்களின் ஆரம்பப் புள்ளி இப்படம். ஆனால் மிகத்தாமதமாக தயாரிக்கப்பட்ட படம். படம் பார்க்கும் போதே ஸ்டார் வார்சின் ஸ்கை வாக்கரின் சாகசங்களும் நினைவில் வருகின்றன. ஆனால் நம்ப ஆட்களுக்கு இந்த படத்தின் ஒரிஜினல் கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோவ்ஸ் தான் முதலில் அனைத்தயும் எழுதினார் என்பது தெரியாது. தாமதமாக வந்த இந்த ஒரிஜினல் நகலைப்போல தெரிவது பரிதாபம்.


Comments