ரவீந்திரநாத் தாகூர்

ஒன்று 

கல்கத்தாவில் ஒரு வசதியான பிராமணக் குடும்பத்தில் பிறந்த ரவீந்திரநாத் தாகூர் 1828இல் லண்டனில் சட்டம் படிக்க விரும்பினார். ஆனால் பாதியிலேயே இந்தியா  திரும்பினார்.

கல்கத்தாவில் எழுத்து, இலக்கியம், பாடல்கள், நாடகம் மற்றும் கல்வி என இவர் தனது பன்முக ஆளுமையை வளர்த்துக்கொண்டார். தனது நண்பர் ஒருவரின் இதழில் தனது கவிதைகளை வெளியிட்டுவந்த தாகூரை கல்கத்தா தாண்டி யாருக்கும் தெரியாது.

தனது 51ஆம் வயதில் தனது மகனுடன் மீண்டும் இங்கிலாந்துக்கு சென்றார் தாகூர். மிக நீண்ட கடல் பயணத்தில் எதையாவது  செய்து பொழுதைபோக்க வேண்டும் என்று நினைத்தவர் தனது கீதாஞ்சலி கவிதை தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் என்று முடிவெடுத்தார். அதுவரை தனது அத்துணை படைப்புகளையும் வங்க மொழியிலேயே எழுதியிருந்தார் தாகூர்.

ஒரு சிறிய நோட்டில் எழுத ஆரம்பித்தார் தாகூர்.  அவர் மகன்  அந்த நோட்டை லண்டன் சப்வே ஒன்றில் ஒருபெட்டியோடு மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார். யாரோ ஒருவர் அந்த பெட்டியை பொறுப்பாக திரும்பக்கொண்டுவந்து ஒப்படைத்ததும் நடந்தது!

ரோத்தைன்ஸ்டீன் என்ற ஓவியர் தாகூரின் நண்பர். தாகூரின் மொழிபெயர்ப்பு குறித்து கேள்விப்பட்ட இவர் தாகூரிடம் கவிதைகளை வாசிக்க கேட்டார். மிகநீண்ட ஒரு போராட்டத்திற்கு பின்பே தாகூர் தனது நோட்டை கொடுத்திருக்கிறார்.

முதல் வாசிப்பிலேயே ரோத்தைன்ஸ்டீன் கீதாஞ்சலியின் மேன்மையை உணர்ந்துகொண்டார். அவரது நண்பர் டபுள்யு. பி. யேட்ஸ்சிடம் நோட்டை ஒப்படைக்கிறார்.

அப்புறம் நடந்ததுதான் அனைவருக்கும் தெரியுமே. 

Comments