கம்யூனிச சைனாவை பார்க்கப் போன ஒரு சபலிஸ்ட் அமரிக்கனின் அனுபவங்களாக விரியும் படம். சைனாவின் இன்றைய இரும்புத் திரை வாழ்வை கொஞ்சம் வெளிச்சமிட்டுகாட்டியிருகிறது ரெட் கார்னர்.
பணிநிமித்தம் சீனா செல்லும் ஹீரோ அங்கு ஒரு மங்கையுடன் ஜாலியாக இருக்கிறான். திடீரென அந்தப் பெண் கொலைசெய்யப்பட பழி ஹீரோமேல் விழுகிறது.
ஜாலியான பயணம் திடீரென சிறையில் தள்ளும் பொழுது அதுவும் செய்யாத
குற்றத்திற்காக ஹீரோ என்ன செய்து மீள்கிறான் என்பதே கதை.
அலோ அலோ இதே மாதிரி ஒரு தமிழ்படம் வந்துருக்கே என்பவர்களுக்கு இந்தப் படம் வெளியான ஆண்டு 1997.
ரிச்சர்ட் கியர் நடிப்பை ரசிக்க விரும்புவர்கள் தவறாமல் இந்தப் படத்தை பார்க்கலாம். குறிப்பாக சட்டப் புத்தகங்களை சிறையில் படிக்கும் போதும் மறுநாள் கோர்டில் சட்டம் பேசும் இவரைப் முடக்க சிறை அறையின் விளக்குகளை அணைக்கும் தருணத்தில் ரிச்சர்ட் கியரின் முகபாவங்கள் அருமை.
தன்னை சுற்றிய பத்மவியுகத்தை உடைத்து ஹீரோ வெளியே வருவது ஒரு த்ர்லிங் அனுபவம். புதிர் விடுவிக்கும் பயணம்தான் திரைப்படம் என்றாலும் மிக அருமையாக சொல்லப்படிருப்பது படத்தின் பலம்.
படக்குழு
இயக்குனர் ஜோன் ஆவ்நெட்
கதை ராபர்ட் கிங்
இசை தாமஸ் நியூமென்
ஒளிப்பதிவு கார்ல் வால்ட்டர் லிண்டேன்வப்
கதாநாயகன் ரிச்சர்ட் கியர்
நடு நிசி நாயகி ஜெஸ்சி மெங்
சைன வழக்குறைஞர் பை லாங்
''கம்யூனிச சைனாவை பார்க்கப் போன ஒரு சபலிஸ்ட் அமரிக்கனின் அனுபவங்களாக விரியும் படம். சைனாவின் இன்றைய இரும்புத் திரை வாழ்வை கொஞ்சம் வெளிச்சமிட்டுகாட்டியிருகிறது ரெட் கார்னர்." - -என்று தொடங்கும் உங்கள் படவிமர்சனம் பார்த்தேன்.
ReplyDeleteஅமெரிக்காவை சும்மா அமெரிக்கா என்றே அறிமுகப் படுத்திவிட்டு, சைனாவை கம்யுனிச சைனா என்பதும், அதைவிட “சைனாவின் இன்றைய இரும்புத்திரை வாழ்வை” என்பதும் புரியலயே!....
தவறுதான் சைனா குறித்த பல விசயங்கள் நெருடல்தான்
ReplyDeleteகம்யுநிசம் குறித்த எனது பார்வை சரிதான்.
இந்த வாக்கியம் ஒரு பொறி மாதிரி உங்கள் வேலைப் பளுவுக்கும் இடையே ஒரு கருத்தை எனக்கு பெற்று தந்திருக்கிறது என்பது தான் எனக்கு புரிகிறது
மரபணுவில் கம்யூனிசம் ஏறிவிட்ட மாதிரி தெரியுது
இவ்வலோவு டைம் உங்களிடம் இருப்பது தெரிந்தால் அடியேன் அடுத்த பாகத்திற்கு வந்திருப்பேன்