பி.சி. ஸ்ரீராம்இதயத்தை திருடாதே வந்த புதிதில் நண்பர் சிவக்கணி படத்தின் ஒளிப்பதிவை குறித்து சிலாகித்து பேசுவார்.  நாகார்ஜினின் காலனியில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் அவ்வளவு அழகாக படமாக்கப் பட்டிருக்கிறது என்று சொல்வார்.  இதுதான் பி.சி. ஸ்ரீராம் என்ற பெயரை நான் முதலில் கேட்டது


தமிழ் நாட்டில் சொட்டு நீலம் விற்பனை படுத்துவிட கடைசி முயற்சியாக ஒரு விளம்பரத்தை செய்தது ஒரு நிறுவனம். அது தமிழ் விளம்பர உலகின் பெருமைமிகு அடயாளாமாக மாறிப்போனது. அதுதான் சொட்டு நீலம்டோய் ரீகல் சொட்டு நீலம்டோய். இதற்க்கு பின்னர் சுமார் பத்தாண்டுகளுக்கு சொட்டு நீலம் விற்பனையில் கொடிகட்டிப் பறந்தது என்பது எல்லொருக்கும் தெரிந்ததே. இது பீ.சியின் தயாரிப்பு.

அழுது வடிந்துகொண்டிருந்த தமிழ் திரைகளின் தவத்திற்கு கிடைதத வரம் பி.சி. புதுமைகளையும், புதியவர்களயும் கொண்டாடும் ஆனந்த விகடன் விடாமல் பி.சி. பற்றி எழுதி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இவரது திரைப்படங்களையும், புகைப்படங்களயும் என் நண்பர் குழுவோடு ரசித்து சிலகித்தது இப்போதும் மகிழ்வு. தனது குழந்தயை இவர் எடுத்த படங்களை .வி வெளியிட்டு குழந்த்தைக்கும் நட்சத்திர அந்தஸ்த்து பெற்றுத்தந்தது. அதே குழந்தை அவரசமாய் போய்ச்சேர்ந்தபின் என்னைப் போலவெ பலலெட்சம் ரசிகர்களும் வருந்தியிருப்பார்கள். பி.சி. மீண்டிருப்பார் என்று நம்புவோம். பிரார்த்திப்போம்.என்பதுகளின் துவக்கதில் நடிகர்களுக்கு கொட்டும் தயாரிப்பாளர்கள் ஏன் டெக்னிசயன்களுக்கு  தருவதில்லை. அப்படி நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்று நண்பர்களிடம் விவாதிப்பதுண்டு. மிகச்சரியாக இந்த ஏக்கம் தமிழகமெங்கும் பரவியிருந்த பொழுது வராது வந்த மாமணியாய் வந்தவர் பி.சி. இவரது காமரா வெள்ளித்திரையை பார்வையாளனின் விழித்திரையில் பதியன் போட்டது. தமிழ்திரை மகத்தான மற்றொரு ஒளிப்பதிவாளனை கண்டெடுத்த தருணம் அது. இன்றும் நாம் ரசிக்கும் நீரவ் ஷா, சந்தோஷ் சிவன் எல்லரும் பி.சி என்கிற பல்கலைக்கழக மாணவர்களே.

ஸ்ரீராம் தனி மனிதராக பெற்ற அடையாளத்தை விட அவர் தனது சக கலைஞர்களுக்கு  கட்டற்ற ஒரு தளத்தை அமையாவும் காரணமானர். திடீரென பல நல்ல ஒளிப்பதிவாளர்களை தமிழ் திரைஉலகு காணவும் இவர்தான் காரணம். விக்கிபீடியா இவரை குரு ஆப் இந்தியன் சினிமோட்டோகிராபி என்று பதிந்திருப்பது சும்மாச்சுக்கும் அல்ல. 

ரொம்ப நாளைக்கு நான் ஒரு ஒளிப்பதிவாளனாக வரவேண்டும் என்று விரும்பிக்கொண்டிருந்தேன். பள்ளிப் பருவங்களில் வெறும் கையையே காமிராவாக வைத்துக்கொண்டு திரிய வைத்தது என்னுடைய ஸ்ரீராம் பித்து.


வரட்டும் ஷங்கரின் ஐ. ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல லென்ஸ் மேனை பார்க்க உங்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். 

அன்பன் 
மது

Comments