நிருபமாவின் பாத்திரப்படைப்பு
ராஜ் கமல் இண்டர்நேசனல் தயாரிப்பில் வந்து
தமிழமெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படம் விஸ்வரூபம். பல எதிர்பார்ப்புகளுடன்
ஆரம்பித்து பெரும் எதிப்புகளை சந்தித்து ஒருவழியாய் படம் ஓடிக்கொண்டிருகிறது. மிக
சிறிய வயதிலிருந்தே கமல் ரசிகனாக இருப்பதால் நானும் அதிதமாய் எதிபார்த்தேன். என்ன
சொல்வது.
மகாநதியை தந்த பெரும் கலைஞன் பலகோடி கொட்டிஎடுக்கும்
படம் என்பதாலும் எதிர்பார்ப்புகள் எல்லோருக்குமே இருந்தது. நிச்சயமாக விஸ்வரூபம்
ஒரு மைல்கல் திரைப்படம். ஆனால் சில விசயங்கள் என்னை ரொம்ப கடுப்பேத்துகிறது.
அதில் ஒரு விசயம் நிருபமாவின் பாத்திரம். ஒரு
ஏழை பிராமணப் பெண் மேற்படிப்புக்காக அஜக் மாமாவை திருமணம் செய்துகொண்டு இயல்பான வாழ்விற்கு
ஏங்கும் பெண். இதுவரை ஓகே ஆனால் இவரது அலுவலகத்தில் பக் வைத்து நிருபமாவும் அவள்
முதலாளியும் பேசும் விசயங்களை விஸ்ஸின் (கமல்)ஒற்றர் குழுவே கேட்கிறது. தேசப்
பற்று, கடமை இத்யாதி இத்யாதிக்காக கமல் அமைதியாக இருக்கிறாராம். ஆகா என்னவொரு
கடமையுணர்ச்சி கொண்ட பாத்திரபடைப்பு!
குறிப்பாக இரவில் மிக தாமதாமாக வந்த நிருபமா
கமல் தூங்குவதாக நினனதுக்கொண்டு அருகே சத்தமில்லாமல் படுப்பார். சற்று கோணம்
மாறும் காமிரா செல்லில் குறட்டை ஒலியை வைத்துவிட்டு விழித்திருக்கும் கமலை
காட்டும். ஆகா ஒரு விழிப்பில் கமல் காட்டும் கொடூர உணர்வு ஜோர்.
அதெல்லாம் சரி பாஸ் சும்மா நிருவின் பாத்திரப்
படைப்பை கொஞ்சம் பார்ப்போம். ஒரு இளம் பெண் தனது மேற்படிப்புக்காக மனம்
செய்துகொள்ளலாம், படிப்பிற்காக இல்லற வாழ்வை கணவனுக்கு மறுக்கலாம். அப்புறம் கொஞ்சம் மேன்லியான ஆண்களுக்காக ஏங்கி தவிக்கலாம். படிக்கும்
போதும் பார்க்கும் போதும் இயல்பாக இருக்கும் இந்த விசயம் ஒரு அப்பட்டமான ஆணாதிக்க
சிந்தனையல்லவா? பெண்ணென்றால் ஒரு பொருளைப் போல கையாள வேண்டும் என்று சொல்லும் மனு
அல்லவா நினைவுக்கு வருகிறார்.
கமலிடம் இந்தமாதிரி குறைகளில்லாத படங்களைத்தான்
எதிர்பார்கிறேன். ஜேம்ஸ் பாண்ட் பார்க்கும் பெண்களையெல்லாம் பயன்படுத்திவிட்டு
போவார். பொதுவாக ஒற்றர் படமென்றால் இப்படி இருக்கவேண்டும் என்ற நியதியை தந்தவர்
பிளமிங்தான். கமல் அந்த அச்சையே பயன்படுத்தவேண்டுமா என்ன? உள்ளூருக்கும்
உலகத்திற்கும் சமன் செய்கிற விளையாட்டு ஒரு வேண்டா விளைவையே தரும்.
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக