லினக்ஸ் ஒரு அறிமுகம்
லினக்ஸ் ஒரு இயங்கு தளம், ஆபரேட்டிங் சிஸ்டம் இது இப்போது பெருவாரியான கணிபொறிகளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் இது முற்றிலும் இலவசமான ஒரு இயங்குதளம்.
மைக்ரோசாப்ட் தனது இயங்குதளமான விண்டோஸ் எட்டை விற்பனை செய்துகொண்டுள்ள இந்த தருணத்தில் லினக்ஸ் தேவையா என பலர் கேட்க கூடும். இந்த பதிலுக்கு நேரிடையான பதில் தேவைஎன்பதே. ஏன் என்பதற்கு சில பார்வைகள் நமக்கு அவசியம்.
எந்த பின்னணியிலிருந்து இலவச மென்பொருட்களுக்கான தேவை சூழல் எழுந்தது என்று பாப்போம். 

எண்பதுகளின் துவக்கத்தில் ஐ பி எம் பீசிக்களை அறிமுகம் செய்தபொழுது அவற்றை இயக்குவதற்கு தேவையான ஒ எஸ் தேவைப்பட்டது(இனி ஆபரேடிங் சிஸ்டத்தை ஒ எஸ் என்றே அழைப்போம்). இதை தெரிந்துகொண்ட பில் கேட்ஸ் நேரேபோய் தன்னிடம் புதிய பீசீகளுக்கான ஒஎஸ் இருப்பதாகவும் அதனை ஐ பி எம்முக்கு ஒப்பந்த அடிப்படையில் தருவதாகவும் சொன்னார். ஐ பி எமுக்கு ஓகே. 

நம்ம நாட்டின் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். ஒரு இளைஞன் பெருவணிக நிறுவனத்திற்குள் போவதே பெரும்பாடு. அதிலும் ஒரு ஒப்பந்தத்தை பற்றி அவன் பேசியிருந்தான் என்றால் விலாநோக சிரித்து அவனை நோகடிதிருப்பர்கள். அவனும் போங்கடா என்று அமெரிக்காவிற்கோ ஆசிக்கோ போயிருப்பான். நம் மனோபாவம் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது. இதனால்தான் எஞ்சினியரிங் படித்தவர்கள் அறநூறு பேரு கான்ஸ்டபில் வேலைக்கு வரிசையில் நின்றார்கள் என்ற செய்தி வருகிறது. இளைஞர்களுக்கு நல்ல தளமும் வாய்ப்பும் இருந்தால் இங்கும் பல பில் கேட்ஸ்கள் வருவார்கள். சரி நம்ம மெயின் மேட்டருக்கு வருவோம். 

கேட்ஸ் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக பெற்றாலும் அவரிடம் பீசிகளுக்கான ஓஎஸ் இல்லை. உள்ளூர் பேராசிரியர் ஒருவர் க்யுடாஸ் (குய்க் அண்ட் டர்டி ஆப்ரேடிங் சிஸ்டம்) என்று ஒன்றை வடிவமைத்து வைத்திருந்தார். அடிமாட்டு விலைக்கு இதனை வாங்கிய கேட்ஸ் கொஞ்சம் இதை ஒக்கிட்டு மைக்ரோ சாப்ட் டாஸ் என்று ஐ பி எம் நிறுவனத்திற்கு கொடுத்தார். அப்புறம் நடந்ததுதான் எல்லோருக்கும் தெரியுமே. அறிவு யுகத்தின் யுகபுருசராக பில் கேட்ஸ் மதிக்கப்பட்டார். அதுவரை உலக பெரும் பணக்காரரான சவூதி இளவரசரை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் பணக்காரராக மாறியிருந்தார் ஒரு சாதாரண வழக்கறிஞரின் மகன் பில் கேட்ஸ். 

இந்தப் பின்புலத்தில் மென்பொருள் ஒரு பெரிய நுகர்வு சந்தையை கொண்டிருந்தது. ஓஎஸ் தயாரித்த எம் எஸ் ஆபீஸ் தொகுப்பையும் களமிறக்கி உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பாளராக ஒரு பிராமணிய வளர்ச்சியை பெற்றது. 

இதுவரை எல்லாம் சரிதான். ஆனால் மைக்ரோ சாப்டின் மென்பொருட்களை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்தாது காப்பியடித்து பயன்படுத்தினால் அறிவுசார் உடமைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி தண்டனை கிடைக்கும். எனக்கு தெரிந்து யாரும் எம் எஸ் மென்பொருட்களை விலைகொடுத்து பயன்படுத்தவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட சாரார் தரும் பணத்திலேயே கேட்ஸ் இன்னும் அசைக்க முடியாத இடத்திலேயே இருக்கிறார்! வெகு அரிதாகவே சட்டம் ஏவப்பட்டு பைரசி மென்பொருட்கள் கைப்பற்றபடுகின்றன, அதிலும் பணம் செலுத்திவிட்டால் தண்டனை கிடையாது. இது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் நாம் மீண்டும் லினக்ஸின் தோற்றத்திற்கு வருவோம். 

மாற்று சிந்தனைகள்

கணிப்பொறி மனிதகுலத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு அதன் பயன் அனைவரையும் சென்றடையவேண்டும் என்று நம்பும் சிந்தனையாளர்கள் பலர் உண்டு. இவர்கள் ஒரு கணிப்பொறியை வாங்கினால் அது பயன்படுத்தப்படாது இருக்கும் நேரத்தை அறிவிப்பார்கள். கற்க விரும்பும் பயன்படுத்த விரும்பும் மாணவர்கள் இவர்களின் கணிப்பொறியை இலவசமாக பயன்படுத்திக்கொள்வார்கள். மீண்டும் நம்மவர்களின் மனப்பாங்கு நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல. 

இப்படியாப்பட்ட மனப்பாங்கு கொண்ட சிந்தனைக் குழுக்களுக்கு மென்பொருள் என்பது ஒரு காப்புரிமை பெற்ற கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வுப் பொருளாக இருப்பதை எப்படி தாங்கிக்கொள்ள முடியம். காப்பிரைட் என்பதை திருப்பி போட்டு காப்பிலெப்ட் என்று ஒரு புதிய புரட்சிகரமான குறியீட்டை உருவாக்கினார்கள்.

தொடரும்...

Comments

 1. நல்ல விஷயம் சொன்னீங்கய்யா.
  அதை நமது கணினியில் எப்படிப் பயன்படுத்தலாம்
  எங்கே கிடைக்கும் -எம்.எஸ்.மாதிரி காப்பியடிக்க வேண்டியதில்லையே! எனும் விவரம் அல்லது தரவிறக்கும் ஐடி முகவரி தரலாம்ல?
  இதுபோலும் கணித்தமிழ் தொடர்பான தொழில் நுட்பச் செய்திகளை உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்
  -நா.முத்துநிலவன், http://valarumkavithai.blogspot.in/

  ReplyDelete

Post a Comment

வருக வருக