ஜஸ்டு மிஸ்ஸு

விண்கல் மோதல்  

பிப்ரவரி 15,2013 அன்று ஒரு விண்கல் புவியின் வளிமண்டலத்தில் ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் நகரின் மேலே 03:15 கிரீன்விச் மீன் நேரத்தில் வெடித்துள்ளது. இது புவியிலும் சிறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் செய்தி.

செலியாபின்ஸ்க் நகர்  ரஷ்யாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர். இங்கு பயணிக்கும் யாரும் ஒரு கிலோமீட்டருக்கு மேல் சோதனையின்றி பயணிக்க முடியாது.

இன்றுள்ள எந்த தொழில்நுட்பத்தினாலும் இதனை முன்னறிய முடியவில்லை. ரஷ்ய மீடியா நிறைய உயிரிழப்புகளையும் சேதங்களையும் தெரிவித்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் பெரும் வெடிச் சத்தத்தை கேட்டு யுத்தம் ஆரம்பித்து விட்டதாக நினைத்திருக்கிறார்கள். ஐந்து பெரும் வெடியோசைகளுக்குபின் மாடிக் கட்டிடத்தின் ஜன்னல்கள் ஆடியிருகிறது. தெருவில் நின்ற கார்களின் அலாரங்கள் அலறியிருகின்றன.

சுமார் 1000 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.  ரஸ்ய காவல் துறை நிறைய கரும் கற்களை சேகரித்திருக்கிறது.இது உண்மையில் ஒரு எச்சரிக்கை நிகழ்வாகவே கருதப்படுகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் இருக்க வேண்டிய அறிவியல் முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அறவியல் உலகை உந்தி இருக்கிறது இந்த நிகழ்வு.

ஹாலிவூட் என்ன செய்யும் 


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நாசா ஒரு சோதனையை நிகழ்த்தியது. இதன் மூலம் புவிக்கு அருகேயுள்ள விண்கற்களின் திசையை மாற்ற முயன்றது. இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பட்டதால் கைவிடப்பட்டது. சும்மா சுத்தும் ஒரு விண்கல்லை எதிரி நாட்டின் மீது குறிவைத்து இறக்கும் ஒரு போர் தொழில் நுட்பமாக வளர்ந்துவிடும் ஆபத்து இந்த துறைக்கு இருப்பதாக கருதப்பட்டதால் இது கைவிடப்பட்டது.

கொஞ்சம் கற்பனையை ஒட்டி ரஷ்ய ராணுவ நகரின்மீது விழுந்த விண்கல் ஒரு தாலிபான் சதி என்று பூசுற்றும் திரைப்படங்கள் வரலாம்!


Comments