எப்படி இருக்க வேண்டும் ஈமிஸ் பார்ம்?


தமிழக கல்வித் துறை ஈமிஸ் முயற்சி ஒரு நல்ல துவக்கம். இருந்தாலும் சில வசதிகளோடு தரவுகளை திரட்டுவது அவசியம் என்று கருதுகிறேன். ஒரு சில விசயங்களை மட்டும் இங்கே பார்ப்போம்
வேண்டிய வசதி நம்பர் ஒன்று
ஒரு ஆப். ஒரு ஆண்ட்றாயிட் ஆப் அல்லது டெஸ்க்டாப் ஆப் அவசியம். எப்போதும் தரவுகளை உள்ளிட்டு ஆன்லைனில் இருக்கும் போது அப்லோட்செய்துகொள்ளும் வசதி அவசியம். ஆப்லைன் என்ட்ரியை இது சாத்தியப் படுத்தும்.
இது சிரமமா?
நிச்சயம் இல்லை. சீரோ பட்ஜெட்டில் சாத்தியம். இருக்கிற ஆகக் சிறந்த பொறியியல் கல்லூரியில் இதை ஒரு ப்ரஜெக்டாக கொடுத்து வாங்கிகொள்ளலாம். மாணவர்க்கு வழிகாட்டுதலும் செய்தாச்சு கல்வித்துறைக்கு பைசாவும் மிச்சம்.

ஏன் இந்த வசதி அவசியம்
ஒரு பள்ளியில் உள்ள எல்லாக் கணிபொறிகளிலும் உள்ளிடலாம். எனவே தகவல் திரட்டுதல் சுலபம். தவறுகளை பள்ளி மட்டத்திலேயே சரி செய்து கொள்ளலாம். விரைவில் வேலை முடியும்.

சின்ன சின்ன மேம்பாடுகள் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு நம்மை தயார்படுத்தும்.

பாக்லாம் பாஸ்
மது

Comments