ஆதி பகவன்


தலைப்பினால் சர்ச்சையில் மாட்டிய இன்னொருபடம் ஆதி பகவன். ஆதி என்கிற நிழலுக தாதா பாங்காக்கில் ஒரு அண்டர் வேர்ல்ட் டான், பகவான் என்கிற பெயரில் மும்பை தாதா. எந்த இடத்திலும் எந்த மதத்தையும் புண்படுத்தாத படம் தலைப்பினால் சிக்கலை சந்தித்தது ஒரு காமெடி.


குறுக்கு வழியில் பணம் செய்யும் மகனை வெறுத்து மகளோடு வெளியேறும் தாய், பணத்தின் ருசியில் தவறு மேல் தவறு செய்யும் ஆதியாக நல்லாவே செய்திருக்கும் ஜெயம் ரவி ஒரு எதிர்பாரா ஆச்சர்யம். முரட்டு கதாபாத்திரத்தில் தன்னை நன்றாக பொருத்திக் கொண்டு மிளிர்ந்திருகிறார். யோகி பார்த்ததிற்கு பின் இந்தப் படத்தை பார்த்தால் ரவி பேசும் போது அமீர் அமானுஷ்யமாக பேசுவதாக உணர்ந்தேன்.

பாங்காக்கை அருமையாக காட்டியிருப்பதுடன் அங்கெ எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் ஜோர். நீத்து சந்திரா ரவியை ப்ராக்கெட் போடுவதை பெரும்பாலான ஆடியன்ஸ் யூகிக்கவில்லை. மாபியோசா என்றால் துரோகம் நெருங்கிய நண்பர்களிடம் தான் ஆரம்பிக்கும் இது ஒரு ரூல். இந்த டைப் கதைகளில் இப்படிதான் எடுக்க முடியும். எழுத்தாளர் மரியோ பூசோ ஆரம்பித்தது இது.

சில காட்சிகள் திரையரங்கில் பார்த்தல் சில நகை அனுபவங்களை தரும். நெஞ்சிலே சுடப்பட்டு மீண்ட ரவி  ஒரு ரோஜாவை எடுத்து நீட்டி என்னை கல்யாணம் செஞ்சுக்கோ என்று சொல்கிறபோது விசில் பறந்தது தியேட்டரில்.

ஆகா நம்ப விசிலடிச்சான் குஞ்சுகள் சும்மா அதிரடியில் யாரையாவது ஏமாற்றி சொகுசு காரில் ஒரு பாப்பாவை செட் பண்ணுவதை ரொம்பவே ரசித்தார்கள். ஆனால் நான் ரசித்தது அதே பாப்பா வைப்பாளே ஒரு ஆப்பு நம்பி வந்த ரவி நாயடிபடுவார். மிதி உதை எல்லாம் வாங்கும் போது அத்துணை வி.குவும்  அமைதியாகிவிட்டனர். வாழ்க்கை புரிந்திருக்கும் போல. அமீர் தந்த செய்திகளில் இதை நான் முக்கியமாக கருதுகிறேன்.

பகவானாக வரும் ரவி ஒரு திருநங்கை. இரண்டு பாத்திரங்களையும் அருமையாக செய்திருக்கிறார் ரவி. இசை யுவன். மூன்று எழுத்தே போதும் என்று நினைக்கிறேன், யுவன், தரம், அருமை, செழுமை. ஹாட்ஸ் ஆப் யுவன்.

சமீப கால படங்களில் ஒரு பெண் கேரக்டர் இப்படி பவர் புல்லா இருந்ததில்லை. நீது டூம்ப் ரைடர் ஜூலி போலவே சண்டையிடுகிறார். நிச்சயமாக அமீரை இதற்காக பாராட்டியே ஆகவேண்டும்.

அமீர் மேக்கிங் அருமை. விறுவிறுப்பு கடைசிவரை சுறுசுறு.  மேக்கிங் அருமை என்று சொன்னதால் ஒவ்வொரு விசயத்தையும் விளக்கமாக எழுதவேண்டாம் என்று நினைக்கிறன். தமிழ் திரைக்கு ஒரு அருமையான வரவு. இந்தப் படம் கொஞ்ச நாளைக்கு டச் ஸ்டோன் படமாக இருக்கும். அதாவது இந்தப் படத்தை வைத்து இந்தக் களத்தில் வரும் படங்களை ஒப்பிட்டு பார்ப்பார்கள்

படம் அருமையாக இருக்கிறது. நீங்கள் என்ன சொல்லறீங்க என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன்.

அன்பன்
மது

குழு

Comments