ஜோரான முகநூல் பக்கம்


என்னை கவர்ந்த முகநூல் பக்கங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி
 இந்தப்பதிவின் முகநூல் பக்கம்
பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s 

கோடையைச் சமாளிக்க 10 வழிகள்!

1. கோடைக் காலங்களில் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தவும். வெள்ளை நிற மிருதுவான துணிகள் நல்லது. கருப்பு நிறத் துணிகளைத் தவிர்க்கலாம்.

2. குளிர்ச்சியான உணவுப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மோர், பழ ரசங்கள், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

3. வெப்பம் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி மைதானங்களில் விளையாடுவதைத் தவிர்க்கலாம்.

4. கோடையில் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி, ஆங்காங்கே கொப்பளங்கள் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் டாக்டரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. சில சமயங்களில் வெயில் அடித்துக் கொண்டு இருக்கும்போதே மழை பெய்யும். அப்போது மழையில் நனையக் கூடாது. ஏனெனில் பூமியில் இருந்து வெளியேறும் வெப்பம் உடல் சூட்டை ஏற்படுத்தும்.

6. தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

7. சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ளலாம்.

8. தண்ணீர் அதிகமாகக் குடிக்கவும்.

9. வெளியில் விளையாடப் போகும்போது தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்ளலாம்.

10. தலையில் அதிகளவு முடி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக முடி இருந்தால் வியர்வைத் துளிகள் தலையிலே தங்கிவிடும். இதனால் ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

Via Chutti Vikatan


அன்பன்
மது 

Comments