புதுகை வரலாறு ஒரு மொழிபெயர்ப்பு



வணக்கம் புதுகை முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவுப்படி புதுகை கல்வியின் துவக்கத்தை மொழிபெயர்ப்பு செய்யும் குழுவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிடைத்த தரவுகளை அப்படியே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். ஒரு சிறிய வரலாற்றுப் பயணத்திற்கு தயாரா?
------

புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்றின் நீண்ட நெடிய காலம் தொட்டு பேரரசுகளின் எல்லைப்பகுதியில் இருந்துவந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர பேரரசுகளின் எல்லையில் இருந்ததால்    இம்மாவட்டம்   அப் பேரரசுகளின் கலை கலாச்சார பிரதிபலிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இடையறாத போர்களாலும் பதாகைகளின் அசைப்புகளினாலும், குளம்பொலிகளாலும், இச் சமஸ்தானம் துயருற்று வந்துள்ளது. பேரரசுகளின் எல்லைப்பகுதியில் இருந்ததால் குறுகிய இச்சமஸ்தானத்தில் அத்துணை பேரரசுகளின் கட்டிடக்கலை  பாணிகளையும் காணஇயலும். பல்லவ, சோழ பாண்டிய மற்றும் விஜயநகர கட்டிடக்கலைகளும் பரிசோதிக்கப்பட்டு அவற்றின் மூல பாணிகளை காட்டிலும் செழுமையுற்று பரிணமிப்பது   இம் மாவட்டத்தின்   தனிசிறப்புகளுள் ஒன்று.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதிக்குடியிருப்புகள் நிறைந்ததோர் மாவட்டம். இன்றளவும் இக்குடியிருப்புகளின் எஞ்சியபகுதிகள் மாவட்டமெங்கும் நிறைந்திருக்கின்றன.

தனது அமைவிடத்தின் காரணமாக புதுகை தனது அண்டை பேரரசுகளின் கலாச்சார தாக்கங்களுடன் ஒரு தனித்துவம் வாய்ந்த சிறிய சமஸ்தானமாக மலர்ந்தது.

சாகசம் நிறைந்த, தொண்டைமான்களின் ஆட்சியும், அவர்களின் உறுதியான ஆங்கில ஆதரவு கொள்கையும் புதுக்கோட்டையை ஒரு தனித்துவம் வாய்ந்த சிற்றசாக வளர்த்தது. விடுதலைக்கு பின்னால் தெனிந்தியாவில் இருந்த ஒரே பூர்வ தமிழ் முடியரசாக இருந்தது புதுகை சமஸ்தானம் மட்டுமே.

இம்மாவட்டம் கலவையான நிலப்பரப்பையும் ஆர்வத்தை அள்ளும் அதே சமயம் வேகமாக அழிந்துவரும் தாவரங்களையும் விலங்கினங்களையும் கொண்டது.

தனித்துவம் வாய்ந்த இனக்குழுக்கள் புதுகையின் ஒரு அடையாளங்களில் ஒன்று

கருணையற்ற இயற்கையும் பல தருணங்களில் மிக மோசமாக பாதிப்புகளை ஏற்படுத்தும் இயற்க்கை சூழலையும்  எதிர்த்து தங்கள் வேளாண் பணிகளை செய்த தீவிர மிக்க உழவர்கள் இம் மாவட்டத்தின்  மற்றோர் அடையாளம்.

புதுகையின் பாய்ச்சலான முன்னேற்றமும் தொழிற்சாலை மோகமும் பல்வேறு வரலாற்று ஏடுகளில் காணக்கிடைக்கின்றன  1916  ஆம் ஆண்டில் மன்னர் கல்லூரியின் முதல்வரும் பெரும்புகழ் பெற்ற கணித விற்பன்னருமான எஸ். ராதாகிருஷ்ண ஐயர் அவர்களால் எழுதப்பட்ட புதுக்கோட்டை ஒரு பொது வரலாறு என்கிற நூல் குறிப்பிடத்தக்கது. இந்த நூல் 1938 மற்றும் 1944 ஆம் ஆண்டுகளில் கே. ஆர். வேங்கடராம ஐயர் அவர்களால் சர் அலக்ஸாண்டர் டாடன்ஹாம் அவர்களின் மேற்பார்வையில் எழுதப்பட்ட புதுகை சமஸ்தான கையேடு என்னும் நூலை அடிப்படையாக கொண்டது.

பெட்டி செய்தி ஒன்று
 
சர் அலக்ஸாண்டர் டாடன்ஹாம் 1934 இல் இருந்து 1946 வரை புதுகையின் திவானாகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய புதுகை அலுவக கையேடு தான் தற்போது தமிழக அரசு அலுவலக கையேடு என அழைக்கப்படுகிறது இந்திய அரசு ஊழியர்கள் எழுதும் முதல் துறைதேர்வு இதுதான்.

புதுக்கோட்டை மாவட்டம்   அரசிதழ் குறிப்புகளின் படி 1974-75 ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு வழங்கப்பட்ட பதவிகளின் விவரம்


பதவி
 எண்ணிக்கை
துறை
1
மாவட்ட புள்ளியியல் அலுவலர்
1
புள்ளியியல் துறை
2.
மாவட்ட கல்வி அலுவலர்  
1
கல்வித்துறை
3
முதல்வர், மாட்சிமை தங்கிய மா மன்னர் கல்லூரி
1
கல்வித்துறை
4
முதல்வர், அரசு மகளிர் கலைக்கல்லூரி
1
கல்வித்துறை
5
முதல்வர், அரசு கல்வியியல் கல்லூரி
1
கல்வித்துறை
6
முதல்வர், அரசு தொழிற் பயிற்சி பள்ளி
1
கல்வித்துறை



புதுகை மாவட்டம் 17 துவக்கப்பளிகளையும் 13 உயர் துவக்கப்பளிகளையும் ஆறு உயர்நிலைப் பள்ளிகளையும் கொண்டிருந்தது. இவற்றில் முறையே 5840,7200 மற்றும் 4380 மாணவர்கள் பயின்று வந்தனர். (1974-75).
மாணவர் நல கூட்டுறவு சங்கங்கள் 
 புதுகையில் பாடநூல்கள் மாணவர் நல கூட்டுறவு சங்கங்களின் மூலம் மானர்வர்கட்கு கட்டுப்படுத்தப்பட்ட விலையில் வழங்கப்பட்டன. ஏற்கனவே இயங்கி வந்த 3 மாணவர் கூட்டுறவு சங்கங்களுடன் 13 புதிய சங்கங்கள் துவக்கப்பட்டன. இவை பாடப்புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் மற்றும் எழுத்து பொருட்களையும் கொள்முதல் செய்து மாணவர்களுக்கு மலிவு விலையில் வழங்கிவந்தன.
இதற்குப்பின் செயலிழந்து இருந்த மேலும் இரு மாணவர் நலச் சங்கங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படத்துவங்கின. மாவட்டத்தில் மொத்தம் 29 மாணவர் நல கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன.
1976 அம ஆண்டில் இச் சங்கங்களின் மூலம் வழங்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 3.21 இலட்சங்கள் ஆகும்.


1
கல்வி நிறுவனங்கள்  
மாணவர் எண்ணிக்கை
2
துவக்கப்பள்ளிகள்
  5840
3
உயர்துவக்கப்பளிகள்
7200
4
உயர்நிலைப்பள்ளிகள்
4380
5
மகளிர் கல்லூரி
950
6
மன்னர் கல்லூரி
1800

தமிழக அரசின்  ஆதி திராவிடர்களுக்கான கல்வி செயல்பாடுகள் சிறந்த முறையில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. தமிழக அரசு ஆதி திராவிடர்களின் நலன்கருதி மாவட்டத்தில் ஆதிதிராவிடர்நலப்பள்ளிகளை துவக்கியது.
மாவட்டத்தில் நான்கு ஆதி திராவிடர் நலப் துவக்கப் பள்ளிகளும் ஒரு ஒரு  ஆதி திராவிடர் நடுநிலைப்  பள்ளியும் இருந்தன. இப்பள்ளிகளோடு ஐந்து ஓராசிரியர் பள்ளிகளும் துவக்கப்பட்டன. இப்பள்ளிகளை ஆதிதிராவிடர் நலவாரியம் துவக்கியது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கட்கு இலவச மதிய உணவுபாடப்புத்தகங்கள்,  குறிப்பேடுகள், மற்றும் எழுது பலகைகளும் வழங்கப்பட்டன.
இப்பள்ளிகளில் பயின்ற பிற முன்னேறிய சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. இலவச மதிய உணவு மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து அவர்களின் ஆரோகியத்தையும் மேம்படுத்தியது.

ஆதி திரவிடக் குழந்தைகள் பள்ளியில் தொடர்ந்து பயில பல்வேறு மானியங்களை அரசு வழங்கியது. இவர்களுக்கு வழங்ககப்பட்ட கல்வி உதவித் தொகையானது துவக்கப் பள்ளியில் துவங்கி உயர்கல்வி வரை வழங்கப்பட்டது. மருத்துவ, பொறியியல் மற்றும் சட்டப் படிப்பிற்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இச்சமுகக் குழந்தைகளுக்கு மாவட்டத்தின் அணைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் இலவச கல்வி வழங்குவது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த உதவிகள் பெற்றோரின் வருவாயை கணக்கில் கொள்ளாமல் வழங்கப்பட்டது.
பெற்றோரின் வருவாய் தொழிற்படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகைக்கு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது
ஆதிதிராவிட மலைக்குடி மக்களுக்கு 4 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டது.
                பத்தாம் வகுப்பிற்கு மேல் மத்திய அரசின் வழிமுறைகளின் படி கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. இவ்வுதவித் தொகைகளை பெற மாவட்ட நல அதிகாரியினால் வழங்கப்பட்ட வருவாய்ச் சான்று அவசியம். ஆண்டு வருவாய் ரூபாய் 9000 மிகாமல் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் கல்வி உதவித் தொகைகளை பெற தகுதி பெற்றோராவர். 1974-75 ஆம் ஆண்டில் 333  மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப் பட்ட தொகை ரூ. ….. ஆகும்.
மாநில அரசால் வழங்ககப்பட்ட கல்வி உதவித் தொகை பத்தாம் வகுப்பிற்கு கீழ் பயின்ற மாணவர்கட்கு வழங்கப்பட்டது. 1974-75 கல்வியாண்டில் 3,518 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இது ரூ. 73,96,50 ஆகும்.

கல்விக் கடன்களும்  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை வட்டியில்லாது வழங்கப்பட்டு எளிய தவணைகளில் வசூல் செய்யப்பட்டன. பெற்றோரின் வருவாய் வரம்புக்கட்டுப் பாடுகள் கல்விக்கடுனுக்கு இல்லை. 1974-75 இல் மாவட்டத்தில் 20 மாணவர்கள் மொத்தம் ரூ. 6000/ கல்விக்கடனாக பெற்றிருந்தனர்.

காந்தியார் நினைவு கல்வி உதவித்தொகை ஒன்றும் வழங்கப்பட்டு வந்தது. இது பல்கலை கழக முன் தேர்வில் முதலில் வரும் ஆதி திராவிட மாணவர்கட்கு வழங்கப்பட்டது. 1974-75 இல் புதுக்கோட்டையில் ஒரு மாணவர் இந்த பெருமை மிகு கல்வி உதவித்தொகையை பெற்றிருக்கிறார்.
ஆதி திராவிடர்களின் கல்வி மேம்பாட்டிற்காக விடுதிகளும் வாரிய மானியங்களும் வழங்கப்பட்டன.

1975ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 14 மாணவர் விடுதிகளும் 3 மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வந்தன.


நல விடுதிகள்
மாணவர்
1
கல்லுரி மாணவர் விடுதி
200
2
நல விடுதி அறந்தாங்கி
44
3
நல விடுதி கந்தர்வகோட்டை
33
4
நல விடுதி குமாரமங்கலம்
30
5
நல விடுதி ஆலங்குடி
122
6
நல விடுதி திருமயம்
69
7
நல விடுதி கீரனூர்
130
8
நல விடுதி பொன்னமராவதி
100
9
நல விடுதி அரிமளம்
43
10
நல விடுதி கறம்பக்குடி
30
11
நல விடுதி புதுக்கோட்டை
66
12
நல விடுதி ஏம்பல்
50
13
நல விடுதி மலையூர்
30
14
நல விடுதி அன்னவாசல்
30
15
நல விடுதி வெட்டன்விடுதி 
30
16
உயர் நிலைப் பள்ளி மாணவியர் விடுதி, புதுக்கோட்டை
97
17
உயர் நிலைப் பள்ளி மாணவியர் விடுதி, கீரனூர் 
30
18
உயர் நிலைப் பள்ளி மாணவியர் விடுதி, இலுப்பூர் 
30

ஆதி திராவிட மலைக்குடி மக்களுடன் தீண்டாமை ஒழிப்பினை கருத்தில் கொண்டு இந்த விடுதிகளில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் அனைத்து சமுக மாணவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது 
பிற்பட்டோருக்கான கல்வி செயல்பாடுகள்

பிற்பட்டோருக்கான கல்வி உதவித் தொகைகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பயின்ற 1323 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இது ரூ 46,000 ஆகும். மேற்படிப்பிற்கான 567 பிற்பட்ட சமுகத்தை சார்ந்த மாணவர்கட்கு ரூ. 15,800 வழங்கப்பட்டது. குற்றப் பரம்பரையை சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 1974-75 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை பயின்று வந்த 1,262 மாணவர்களுக்கு ரூ. 32,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் 125 மாணவர்களுக்கு ரூ. 48.000 அவர்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. பிற்பட்டோர் நலத்துறை மாவட்டத்தில் 10 இடங்களில் மாணவர் தங்கும் விடுதிகளை நடத்தி வந்தது. இவற்றில் 639 மாணவர்கள் தங்கி பயின்று வந்தனர்.

விடுதி 
மாணவர் எண்ணிக்கை 
1
 கல்லூரி மாணவர் விடுதி, புதுக்கோட்டை
115
2
 கல்லூரி மாணவர் விடுதி(கூடுதல்), புதுக்கோட்டை
75
3
 மாணவர் விடுதி, பொன்வெட்டி 
40
4
 மாணவர் விடுதி, ஆலங்குடி 
40
5
 மாணவர் விடுதி, திருமங்கலம்
30
6
 மாணவர் விடுதி, விராலிமலை
75
7
  மாணவர் விடுதி, அறந்தாங்கி 
40
8
 மாணவர் விடுதி, கந்தர்வகோட்டை 
50
9
  மாணவர் விடுதி, புதுக்கோட்டை
44
10
 மாணவர் விடுதி, புதுக்கோட்டை

30

மொத்தம்
639

Comments