டெத் ரேஸ் 3
ஜேசன் ஸ்டாத்தோம் கலக்கிய டெத் ரேஸ் படத்தின் அடுத்த பாகம். ஜேசனுக்கு பதில் லூக் காஸ். யூனிவர்சல் நிறுவனத்தின் 100வது வருடம் என்கிற பிரமாண்டம் வேறு.

அப்படியா? அப்போ படம் ஜோராஇருக்குமே என்றால் ஏமாந்து போவீர்கள். ஹாலிவுட் படங்கள் எல்லாமே நல்ல படங்களாக இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எல்லோர்க்கும் அடிசறுக்கும்.

2032இல் அமெரிக்க அரசு திவாலாக சிறையை நடத்த முடியாமல் தனியாரிடம் தாரைவார்க்கிறது. அவர்கள் கொலை கைதிகளுக்கு இடையே ஒரு கார் ரேஸ் ஒன்றை வைத்து அதை இணையத்தில் ஒளிபரப்ப வருவாய் கொட்டஆரம்பிகிறது.

கொலைகார ஆயுதங்களுடன் கார்கள் அதனை செலுத்தும் சைக்கோ கொலையாளிகள் என பல அதிர்சிகளுக்கும் திருப்பங்களுக்கும் சாத்தியம் உள்ள ஒரு கதைக்களம். அப்படியே கம்யூட்டர் ரேஸ்கேம் ஒன்றை திரையில் பார்க்கிற மாதிரி இருக்கிறது.

இந்த ரேஸில் அதிக ரசிகர்களை கொண்ட பிரான்க்கைன்ஸ்டீன் நாலு ரேஸ்களை வெற்றிகரமாக முடிக்க, ஐந்தாவது ரேஸில் ஜெயித்தால் விடுதலை என்கிற கட்டத்தில் துவங்குகிறது படம்.

பார்த்து சலித்த ரேஸ் காட்சிகள், அதிலும் சில சொதப்ஸ். அப்புறம் மார்டல் காம்பாக்ட் பாணியில் பெண் கைதிகள் ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொண்டு சாவது எத்துனை முறை பார்ப்பது? என்ற அலுப்பூட்டும் காட்சிகள்.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கொஞ்சம் நல்லாஇருக்கிறது. பிரான்கைன்ஸ்டீன் வில்லனின் முகத்தை விபத்தில் சிதைத்து அவனை பிராங்காக மாற்றி தப்புவது அருமை.

ஒரு கில்டைம் படம்.

குழு 

லூக் காஸ், டானி ட்ரேஜோ, டெயின்டட் பீனிக்ஸ்....

இயக்கம் 
ரோயல் ரெயினி

இசை 
ட்ருவர் மோரிஸ், 

ஒளிப்பதிவு 
வைன் ஷீல்ட்ஸ்,ரோயல் ரெயினி 

Comments