பென்ஹர்உலக திரை வரலாற்றில் அழியாத முத்திரையை அழுந்தப் பதித்த சில திரைப்படங்களில் முதல் பத்திற்குள் வருவது பென்ஹர். சுவாரஸ்யமான வாழ்வியல் நிகழ்வுகளில் கர்த்தரின் சமகாலத்தை இணைத்து படைப்பை அமரத்துவம் பெற வைத்துவிட்டதுதான் படத்தின் வெற்றி ரகசியம். வில்லியம் வைலர் என்கிற இயக்குனரை அமரருள் வைத்தது இந்தப் படம். நம்ம ஆட்களுக்கு சொல்லனும்னா அந்த கால ஷங்கர் படம்! 


கதை
ஆத்மார்த்தமாக பழகிய நண்பனே துரோகியானால்? ஆசைக்காதலனே காதலியை தொழுநோயாளிகளுடன் சிறையிலடைத்தால்? ஒரு பெரும் படைத்தலைவன் கப்பலின் துடுப்பை இயக்கம் அடிமையானால்? என எதிர் பார திருப்பங்கள் கொண்ட நிமிடத்திற்கு நிமிடம் ஆர்வமூட்டும் அதிர்வடைய செய்யும் திரைக்கதை படத்தின் அற்புதமான பலம்.
சார்ல்டன் ஹெஸ்டன் என்கிற மாபெரும் சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய படம் இது. ஜூடா பென்ஹர் என்கிற கதாபாத்திரம் அளவெடுத்து நச்னு தைத்த சட்டைமாதிரி இவர்க்கு பொருந்தியிருப்பதையும் நீங்கள் காணலாம்.


இந்தப் படத்தைப் பற்றி பேசினாலே இதன் கிளைமாக்ஸில் வரும் சாரட் பந்தயம் சிலாகிக்கப் படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இன்றைய தொழில் நுட்பத்திலேயே சிரமம் தரும் சீன் அது அன்றைக்கு செய்ததுதான் பெரிய விசயம். 

மிக நெகிழ்வான திரைத்தருனங்கள் இப்படத்தின் பலம். தொழுநோயால் பாதிக்கப்பட்ட தாயும் சகோதரியும் ஊருக்கு வெளியே விரட்டப்பட்டு ஒரு குகையில் ஒதுங்கும் போது உலகின் அத்துனை சோகங்களும் திரைப்படுதப்பட்ட மாதிரி ஒரு உணர்வு. ஒரு கதார்சிஸ் அனுபவம் சில நிமிடங்களில் தேவகுமாரன் சிலுவையில் அறையப்பட பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து ஓட அதில் ஒரு பகுதி குகையருகேவர தாயும் சகோதரியும் ஸ்வஸ்த்தம் ஆவது மிக நெகிழ்வான கிளைமாக்ஸ். நான் அந்தக் காட்சியின் போது விம்மியது இன்னும் என் நினைவில் இருக்கிறது! மறுநாள் நண்பரிடம் சொன்னபோது நானும் அப்படியே என்றார்! உங்கள் உணர்வுகளோடு ஒரு உன்னதமான பயணத்தை நடத்தி உங்களை பண்படுத்தும் ஆற்றல் இந்தப் படத்துக்கு உண்டு.

காட்சியோடு ஒன்றிய மிகலஸ் ரோஸாவின் இசை, இன்றும் அசத்தும்  அருமையான ஒளிப்பதிவு ராபர்ட் சர்டீஸ்யுடது, இயசுவின் சிலுவைப்பாடு என அற்புதமான காக்டெயில்.
திரை ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத படம் இது.
பாருங்க
அன்புடன்
மது


Comments

  1. மத போதனைகள் இல்லாமல் ஏசுவை மையமாக கொண்டு எடுக்கப்பட படம் பென்ஹர். பாலைவனத்தில் ரோமானிய சிப்பாய்கள் பென்ஹரை இழுத்துச்செல்லும் போது ஏசு அவனுக்கு தண்ணீர் தரும் காட்சியும் அப்போது விரட்ட வந்த ஒரு ரோமானிய சிப்பாய் ஏசுவை கண்டதும் மின்சாரம் தாக்கியது போல பின்னால் நகர்வதும் சிலிர்ப்பூட்டும் காட்சி.ஏசுவின் முகத்தை இறுதிவரை திரையில் காண்பிக்காமல் அவர் சிலுவையில் உயிர் விடும் காட்சியில் கீழே ஒரு சின்ன தண்ணீர் குட்டையில் ஒரே ஷாட்டில் அவர் முகத்தை காட்டுவதும் அபாரமான காட்சியமைப்புகள். பட துவக்கத்தில் அடிமை பென்ஹரும் அவனுடைய எகிப்திய நண்பனும் (சார்லஸ் ஹெஸ்டன் மற்றும் யூல் ப்ரைனெர் இருவரின் சிறப்பான நடிப்பில்) ஆக்ரோஷமாக விவாதிக்கும் காட்சியை தழுவியே தமிழில் பிற்பாடு தெய்வமகன் படத்தில் சிவாஜி, மேஜர் ஆரம்ப காட்சி எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக