தனிக் காடு இளம் பெண்( ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ்)



வல்லுறவுக்கு ஆளான பெண் மனதில் எத்துனை வன்மமாக பழிவாங்கும் உணர்வு இருக்கும் என்பதை அப்படியே காட்சிப்படுத்தியிருகிரார்கள்.
ஒரு பெண் எழுத்தாளர் தன்னந்தனியே ஒரு காட்டின் தனிமையில் கதை எழுத வருகிறார். நடுக் காட்டில் உள்ள ஒரு குளக்கரையில் ஒரு மரவீட்டில் தங்கி கதை எழுதுகிறார். ஆகா இப்படி ஒரு ஊரா என்று பொண்ணுக இப்படி வாழ்ந்திட முடியுமா? என்று ஆச்சரியப்பட்டால் கரைக்டா ஒரு நாலு பேர் வருகிறார்கள். 

இவர்களில் ஒருவன் பேசும் டயலாக் மனிதர்கள் எங்கும் ஒரே மாதிரி தான் என்று என்னை உணர வைத்தது. 

தமிழில் அந்த வசனம் இவளுகளப் பத்தி தெரியும்டா டவுனுக்கார தே_____ நிமிசத்திற்கு ஒருத்தனை மாத்துவாளுக. (எலேய் அங்கும் இருக்கீகளாட?)பெண் கொஞ்சம் சுதந்திரமாய் இருந்தால் உலெகெங்கும் ஒரே குரலில் ஒலிக்கும் இந்தக் குரல் எனக்கு ஒரு சிரிப்பைதான் தந்தது.

நம்ம எழுத்தாளினி குளக்கரையில் டூ பீஸில் கொஞ்சம் வைனை அடித்துவிட்டு எழுதுகிறார், ராத்திரி வீட்டில் கொஞ்சம் கஞ்சா புகைத்துவிட்டு எழுதுகிறார். அப்புறம் வருகிறார்கள் வில்லன்கள்.
இதன் பின்னர் வரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கும் குரூரமான கொடுமையான காட்சிகள். பரிதாபத்தை தூண்டும் வகையில் வல்லுறவை காட்டுவதிலும் அதன் நீஈஈளதில்லும் சிலர் எரிச்சல் படலாம். ஆனால் பின்னர் கதாநாயகி வில்லன்களை பழிவாங்கும் கோரத்தை நியாயம் செய்யவே காட்சிகள் நீடிக்கப்பட்டிருக்கலாம்.

மிக கோரமாக இருந்தாலும் பெண்ணிய சாயையில் வந்திருக்கும் ஒரு படம். படத்தின் கிரேடிட்டில் ஏற்கனவே வந்த டே  ஆப்  எ வுமன் படத்தின் தழுவல் என்று போட்டது ஆச்சர்யம். (அனேகமாக சுடச் சுட என்று வந்திருக்கும் படத்தின் மூலம் இதுஎன்று நம்புகிறேன்)

சத்தியமா நான் பார்க்க சொல்ல மாட்டேன். 

பை
மது
 ~@@@@@@@@@ரிலாக்ஸ்@@@@@@@@~
இந்த வார காணொளி 


Comments